உலக சிறுநீரக தினம் World Kidney Day 2nd Thursday In March
உலக சிறுநீரக தினம் World Kidney Day 2nd Thursday In March
👉 ஒவ்வொரு ஆண்டும் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமை (மார்ச் 14) கொண்டாடப்படுகிறது.
👉 2006ஆம் ஆண்டு முதல் உலக சிறுநீரக தினம் கொண்டாடப்பட்டது.
நோக்கம்:
👉 சிறுநீரகங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
👉 சிறுநீரக நோய்களைத் தடுப்பது மற்றும் சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
👉 சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் ஆதரவளித்தல்.
👉 உலக சிறுநீரக தினம் சிறுநீரகங்களின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், சிறுநீரக நோய்களை தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் நடவடிக்கை எடுப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
முக்கியத்துவம்:
👉 நமது சிறுநீரகங்களின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக உலக சிறுநீரக தினம் கொண்டாடப்படுகிறது.
👉 சிறுநீரக நோய்களின் அபாயங்களை குறைப்பது மற்றும் ஆரோக்கியமான சிறுநீரகங்களை பராமரிப்பது பற்றிய தகவல்களை மக்களுக்கு வழங்குவதே இதன் நோக்கம்.
👉 இது சிறுநீரக நோய்களை தடுக்கவும், அதற்கான சிகிச்சையின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் எடுத்துச் செல்வதையும் நோக்கமாக கொண்டுள்ளது.