புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா? Why not eat non-vegetarian in Puratasi? Do you know the scientific reason?
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா?
ஆன்மீக காரணம் :
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பயணிக்கிறது. இந்த மாதத்தின் அதிபதி புதன். புதன் என்பது மகாவிஷ்ணுவின் சொரூபம் ஆகும். அதனால் புரட்டாசி மாதம் பெருமாளின் மாதமாக பார்க்கப்படுகிறது. புதன் சைவத்திற்கு உரிய கிரகம் ஆகும். எனவே, இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து, துளசி தீர்த்தம் அருந்த வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். மேலும் இந்த மாதத்தில் சனி தன்னுடைய வலிமையை இழக்கிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வணங்குவது சனீஸ்வரனின் கெட்ட பலன்களைத் தடுத்து நன்மையைத் தரும் என்று கூறப்படுகிறது.
அறிவியல் காரணம் :
பொதுவாக புரட்டாசி மாதத்தின் போதுதான் வெயிலும், காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் காலமாக உள்ளது. இதனால் இதுவரை பூமி வெயிலால் சூடாகி இருக்கும். மழை பொழியும் போது, அதை ஈர்த்து புவியின் வெப்பத்தை குறைக்கும் பொருட்டு, தன்னுள் இருக்கும் சூட்டை வெளியில் விட ஆரம்பிக்கும்.
இதனால் புரட்டாசி மாதம் சூட்டை கிளப்பி விடும். இது வெயில் காலத்தின் சூடான காலநிலையைக் காட்டிலும் மிக மோசமான விளைவுகளை தரக் கூடியது. இந்த காலத்தில் அசைவம் சாப்பிடுவதால், உடல் சூட்டை மேலும் அதிகரிக்கச் செய்து, நம் உடல் நலனை மேலும் பாதிக்கச் செய்யும்.
இது போலதான் நமது முன்னோர்கள் ஆன்மிகத்தில் அறிவியலைப் புகுத்திய பல விரதமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் நமக்கு புகுத்தியுள்ளனர். உடல் நலத்தை போற்றி பாதுகாக்கும் பொருட்டு புரட்டாசி மாதம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும் என நம் முன்னோர்கள் கூறியதோடு இந்த காலத்தில் ஏற்படும் உடல் நல பிரச்னையை, பெருமாள் கோயிலில் கொடுக்கப்படும் துளசி தீர்த்தம் கட்டுப்படுத்தும் ஆற்றல் மிக்கது. இதனால் தான் புரட்டாசி மாதத்தில் விரதம் இருந்து பெருமாள் கோயிலுக்கு செல்ல வேண்டும் என ஒரு பழக்கத்தை வைத்துள்ளனர்.