செப்டம்பர் 30 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் International Translation Day
செப்டம்பர் 30 சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் International Translation Day
சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகளவில் கொண்டாடப்படுகின்றது.
ஆண்டுதோறும் விவிலிய மொழி பெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும்.
ஜெரோம் மொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.
பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பு என்ற அமைப்பு 1953ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து இந்நாள் இவ்வமைப்பினால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோரின் ஒருமைப்பாட்டை காட்டும் விதமாக இவ்வமைப்பு 1991ஆம் ஆண்டில் இந்நாளை பன்னாட்டு ரீதியில் கொண்டாட அங்கீகரித்தது.