பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் The Universe and Solar System
புவியியல் GEOGRAPHY
பேரண்டம் மற்றும் சூரியக்குடும்பம் The Universe and Solar System
1. அண்டத்தை பற்றிய படிப்பிற்கு 'அண்டவியல்' (Cosmology) என்று பெய், காஸ்மாஸ் என்பது ஒரு கிரேக்கச் சொல்லாகும்.
The study of the Universe is called
Cosmology. The term Cosmos is
derived from the Greek word ‘Kosmos’.
2. ஓர் ஒளியாண்டு என்பது ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு ஆகும்.
A light-year is the distance travelled by light in a year.
★ ஒளியின் திசைவேகம் வினாடிக்கு 3,00,000 கி.மீ ஆகும்.
Light travels at a velocity of 300,000 km per second.
★ ஒலியானது வினாடிக்கு 330 மீட்டர் என்ற வேகத்தில் பயணிக்கும்.
Sound travels at a speed of 330 m per second.
3. சூரியன் 1.3 மில்லியன் புவிகளை தனக்குள்ளே அடக்கக்கடிய வகையில் மிகப்பெரியதாகும்.
1.3 million Earths can fit inside the Sun. Imagine how big the Sun is.
4. பண்டைத் தமிழர்கள் சூரியன் மற்றும் பிற கோள்களைப் பற்றி அறிந்திருந்தனர் என்பது சங்க
இலக்கியங்கள் வாயிலாக நமக்குப் புலனாகிறது.
The ancient Tamils knew that the planets revolved around the Sun.
உதாரணமாக. சிறுபாணாற்றுப்படையில்
காணப்படும் 'வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு' என்று பாடல் வரிகளிலிருந்து நாம் தெரிந்துக்கொள்வோம்.
For example, in Tamil literature Sirupanatruppadai, the line ’வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு’ mentions that the Sun is surrounded by planets.
5. சூரியனுக்கும் புவிக்கும் இடையே உள்ள தொலைவு 150 மில்லியன் கிலோ மீட்டராகும்.
The distance between the Sun and the Earth is about 150 million kilometre
◆ மணிக்கு 800 கி.மீ வேகத்தில் செல்லும் வானூர்தி சூரியனை சென்றடைய 31 வருடங்கள் ஆகும்.
A flight flying at a speed of
800 km per hour from the Earth would
take 21 years to reach the Sun.
6. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக 24.09.2014 அன்று மங்கள்யான் (Mars Orbiter Mission) எனப்படும் விண்கலத்தை அனுப்பியது.
7. இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், நாஸா (USA), ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு
அடுத்தாக நான்காம் இடத்தில் உள்ளது.
On 24th September, 2014 Mangalyan
(Mars Orbiter Mission - MOM), launched by the Indian Space Research Organization (ISRO), reached the orbit of Mars to analyze its atmosphere and topography. ISRO has now become the fourth space agency to reach Mars after the Soviet Space programme, NASA and the European Space Agency.
8. நிலவைப் பற்றி ஆராய்வதற்காக இந்தியவால் அனுப்பப்பட்ட முதல் விண்கலம் சந்திராயன் - 1 ஆகும். இது 2008 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது.
ISRO launched India’s first ever Moon
mission, Chandrayaan - 1 in 2008.
9. புவியின் சுழலும் வேகம் நிலநடுக்கோட்டுப் பகுதியில் 1670 கி.மீ/மணி ஆகவும், 60° வடக்கு அட்சரேகையில் 845 கி.மீ/மணி ஆகவும், துருவப் பகுதியில் சுழலும் வேகம் சுழியாமாகவும் இருக்கும்.
The velocity of the Earth’s rotation varies from 1,670 km per hour at the equator to 845 km per hour at 60° N and S latitudes and zero at the poles.
10. நள்ளிரவு சூரியன் என்பது இருஅரைக்கோளங்களிலும் கோடைக்காலத்தில் ஆர்க்டிக்
வட்டத்திற்கு வடக்கிலும், அண்டார்டிக் வட்டத்திற்கு தெற்கிலும் 24 மணி நேரமும் சூரியன் தலைக்குமேல் தெரியும் நிகழ்வாகும்.
The Midnight Sun is a natural phenomenon that occurs in the summer months in places north of the Arctic Circle or south of the Antarctic Circle, when the Sun remains overhead 24 hours a day.
11. சூரிய அண்மை' Perihelion என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்கு மிக அருகில்
வரும் நிகழ்வாகும்.
Perihelion is the Earth’s closest position to the Sun.
12 சூரியச் சேய்மை Aphelion என்பது புவி தன் சுற்றுப்பாதையில் சூரியனுக்குத் தொலைவில்
காணப்படும் நிகழ்வாகும்.
Aphelion is the farthest position
of the Earth from the Sun.
13. மன்னார் உயிர்க்கோள பெட்டகம் இந்திய பெருங்கடலில் 10,500 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.
The Gulf of Mannar Biosphere Reserve in the Indian Ocean covers an area of 10,500 sq.km in the ocean.