அமெரிக்காவில் லெப்ட்.. ஆனா இந்தியக் கார்களில் ரைட் ஏன்?!..Left in America.. But why right in Indian cars?!..
அமெரிக்காவில் லெப்ட்.. ஆனா இந்தியக் கார்களில் ரைட் ஏன்?!..
"அமெரிக்காவில் லெப்ட்.. ஆனால் இந்தியக் கார்களில் ரைட் ஹேண்ட் பக்கம் ஸ்டியரிங்! ஏன்?!.. வாங்க நண்பர்களே அதற்கான காரணத்தை இந்தக் கட்டுரையில் காண்போம். "
இந்தியாவில் நாம் ஓட்டும் கார்களில் இடது பக்கத்திற்கு பதில் வலது பக்கம் ஸ்டியரிங் இருக்கும்.. அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்டியரிங் இடது பக்கம் இருக்கும். இதற்கு முக்கியக் காரணம் உள்ளது. உலகில் இரண்டு விதமான வாகன ஓட்டும் முறை உள்ளது. ஒன்று சாலையில் வலது பக்கம் செல்வது. இன்னொன்று இடது பக்கம் செல்வது. இதில் இந்தியாவில் இடதுபக்கம் செல்லும் வழக்கம் உள்ளது. வலது பக்கம் கார்களை ஓட்டும் வழக்கம் 165 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள 75 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் இடது பக்கம் கார்களை ஓட்டும் வழக்கத்தை பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இடது பக்கம் கார்களை ஓட்டுவதால் சாலையை பார்க்க வசதியாக வலது பக்கம் ஸ்டியரிங் இருக்கும். அதாவது நாம் காரை லெப்டில் ஓட்டுவோம்.. அதனால் சாலையை பார்க்க வசதியாக ரைட் ஹேண்ட் பக்கம் ஸ்டியரிங் இருக்கும். அமெரிக்காவில் காரை ரைட்டில் ஓட்டுவோம்.. அதனால் சாலையை பார்க்க வசதியாக லெப்ட் ஹேண்ட் பக்கம் ஸ்டியரிங் இருக்கும். அதெல்லாம் சரி., ஏன் இந்த வேறுபாடு என்று தெரியுமா? பழைய பிரிட்டிஷ் காலத்தில் குதிரை வீரர்கள் வலது பக்கம் தங்கள் ஆயுதங்களை வைத்து சுழற்றுவார்கள். எனவே அவர்கள் எப்போதும் இடதுபுறத்தில் குதிரை வண்டிகளை ஓட்டுவார்கள். அப்போதுதான் எதிரே வரும் வீரரை வலது கையால் தாக்க முடியும். இதனால் அவர்கள் எளிதாக வாளை பயன்படுத்த முடியும். அதே விதிகள்தான் கார் வந்த பின்பும் தொடர்ந்தது.
கார்களையும் இடது பக்கம் ஓட்டும் பழக்கம் பிரிட்டிஷார் இடையே வந்தது. இதனால் தான் பிரிட்டிஷ் பகுதிகளில் வாகனங்கள் சாலையின் இடதுபுறம் சென்றன. உலகம் முழுவதும் பிரிட்டன் தனது பேரரசை விரிவுபடுத்தியதால், அதன் கலாச்சாரம் மற்றும் சட்ட அமைப்பை அதன் காலனிகளுக்கும் கொண்டு வந்தது. தெற்காசியாவில் இந்தியா பிரிட்டிஷின் பெரிய காலனியாகவும், தெற்காசியாவில் பிரிட்டிஷ் உடைமைகளின் தலைமையகமாகவும் இருந்தது. இதனால், அவர்களின் பழக்கம் இங்கேயும் வந்தது. எனவே நாமும் அதே இடது புறம் கார்களை ஓட்டுவதைப் பயன்படுத்தினோம். இதனால் வலது பக்கம் ஸ்டியரிங் வந்தது. அதன்பின், பிரிட்டிஷ் பேரரசு உடைந்ததால், ஆங்கிலேயரை எதிர்த்த பல நாடுகள், எதிர்ப்பின் குறியீடாக வலது கார்களை கொண்டு செல்ல முடிவு செய்தனர். இதனால் அவர்களுக்கு ஸ்டியரிங் இடது பக்கம் வந்தது. முன்னாள் பிரிட்டிஷ் காலனியாக இருந்த அமெரிக்கா கூட இங்கிலாந்துக்கு எதிரான எதிர்ப்பாக வலது பக்கம் செல்லும் முறையை தேர்வு செய்தது. அருகிலுள்ள பல சிறிய நாடுகள், அமெரிக்கா போன்ற பெரிய அண்டை நாடுகளுடன் போக்குவரத்தை எளிதாக்குவதற்கான ஒரு வழியாக வலது பக்கம் செல்வதை ஏற்றுக்கொண்டன. இதனால் அவர்களுக்கு ஸ்டியரிங் இடது பக்கம் வந்தது.
இந்தியா போன்ற நாடுகள் அதிக மக்கள் தொகை கொண்டது என்பதால் இங்கே திடீரென போக்குவரத்தை மாற்ற முடியாது. அது விபத்திற்கு வழி வகுக்கும் என்பதால் போக்குவரத்தை இடது பக்கமே தொடரலாம், வலது பக்கமே ஸ்டியரிங் இருக்கட்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதன் காரணமாகவே இந்தியாவில் நாம் ஓட்டும் கார்களில் இடது பக்கத்திற்கு பதில் வலது பக்கம் ஸ்டியரிங் இருக்கிறது.. அதுவே அமெரிக்கா போன்ற நாடுகளில் ஸ்டியரிங் இடது பக்கம் இருக்கிறது.