இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்வது ஏன்? காரணம் தெரியுமா?
இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்வது ஏன்? காரணம் தெரியுமா?
மழை என்றால் நம் அனைவருக்குமே பிடிக்கும். மழை பெய்து கொண்டிருக்கும் போது திடீரென்று இடி இடிக்கும்.
இடி எப்படி உருவாகிறது?
மின்னல் புவியை தாக்கும் முன்னர் மேகத்திற்கும், புவிக்கும் இடையில் சில வினாடிகள் பயணிக்கும் போது, அதிக வெப்பநிலையில் உள்ள மின்னலின் கீற்று, காற்றில் உள்ள மூலக்கூறுகளை வெப்பமாக்கும். வெப்பமான காற்று விரிவடையும் போது ஏற்படும் சத்தமே "இடி" என்று அழைக்கப்படுகிறது.
இடி இடிக்கும் போது அதிலிருந்து வரும் அதிக சத்தத்தால், நம் வீட்டில் இருக்கும் குழந்தைகள் சற்று அதிகமாக பயப்படுவார்கள்.
அந்த நேரத்தில் நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் "அர்ஜுனா" என்று சொல்வார்கள். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் அதற்கு அவர்கள், இடி இடிக்கும் போது "அர்ஜுனா" என்று சொன்னால் இடி இடிக்காது என்று சொல்வார்கள்.
அதுமட்டுமல்லாமல், அர்ஜுனன் என்ற கிருஷ்ண பக்தனின் பெயரை சொன்னால் இடி இடிக்கும் சத்தம் காதில் கேட்காது என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
ஆனால் "அர்ஜுனா" என்று சொல்வதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது.
இடி பலமாக இடிக்கும் போது, அதிலிருந்து வரும் சத்தத்தால் சிலரின் காதுகள் அடைத்து, காதில் இருந்து ஒருவிதமான சத்தம் வரும். அந்த நேரத்தில் நாம் "அர்ஜுனா" என்று சொல்லும் போது நம் காதுகள் அடைக்காது. ஏன்?
"அர்" என்று சொல்லும் போது நாக்கு மடிந்து மேல் தாடையைத் தொடுகிறது. "ஜு" என்று சொல்லும் போது வாய் குவிந்து காற்று வெளியேறுகிறது. "னா" என்னும் சொல்லும் போது வாய் முழுமையாகத் திறந்து காற்று வெளியே செல்கிறது. இப்படி காற்று வெளியேறுவதால் காது அடைக்காது.
அதனால் தான் நம் முன்னோர்கள் இடி இடிக்கும் போது "அர்ஜுனா" என்ற வார்த்தையை சொன்னார்கள். இது தான் அர்ஜுனா என்று சொல்வதற்கான காரணம் ஆகும்.