மே 16 - சர்வதேச ஒளி தினம் International Light Day
மே 16 - சர்வதேச ஒளி தினம்
💡 ஒவ்வொரு ஆண்டும் மே 16ஆம் தேதி சர்வதேச ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
💡 1960ஆம் ஆண்டு மே 16ஆம் தேதி இயற்பியலாளரும் பொறியியலாளருமான தியொடர் மாய்மனால் (Theodore Maiman) முதன் முதலில் சீரொளி(laser) வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இத்தினத்தை நினைவுகூறும் வகையில் யுனெஸ்கோவால் சர்வதேச ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
💡 கல்வி, அறிவியல், கலை, பண்பாடு, நிலையான வளர்ச்சி, தகவல் தொடர்பு, ஆற்றல் மற்றும் மருத்துவம் ஆகியவற்றில் ஒளியின் பங்கானது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.