அறிவியல் Science
* சந்திரகிரகணம் பௌர்ணமியில்தான் ஏற்படும். சூரிய கிரகணம் புது நிலவு நாளில் எற்படும். பூமி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சற்றி வரும் போது – நிலா – சூரியன் – பூமி – ஒரே நேர்கோடாக வரும்போது மறைக்கும் நிழல் கிரகணம் எனப்படுகிறது.
* சூரிய ஒளியின் பிரதிபலிப்பு. அதாவது சூரிய ஒளி மழைத்துளியில் பட்டு ஏற்படும் நிறப்பிரிகை. இதனை ஒளிக் கோட்டம் அடைதல் என்போம். ஒளிக் கோட்டமடைவது மீளுவதால் ஏற்படும் நிறமாலையே வானவில். இதில் கருப்பு நிறம் கிடையாது. மற்ற 7 வண்ணம் தெரியும்.
* இங்கிலாந்து 'பிராஸ்ப்ரோ' என்ற விண்கலத்தை 1971-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
* இந்தியா 'ரோகினி' என்ற விண்கலத்தை 1980-ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தியது.
* முதல் அமெரிக்க செயற்கை விண்வெளிக் கலகத்தின் பெயர் 'எக்ஸ்புளோரர்' ஆகும்.
* 'சயின்ஸ்' என்ற இலத்தீன் மொழிச் சொல்லுக்கு 'எனக்குத் தெரியும்' என்று பொருள்.
* இயந்திர ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம் 'டைனமோ' ஆகும்.
* விமானங்களை பார்த்து பயப்படுவதற்கு 'ஏரோ ஃபோபியா' என்று பெயர்.
இருட்டைப் பார்த்து பயப்படுவதற்கு 'ஸ்கோட்டோ ஃபோபியா' என்று பெயர்.
மீன்களைப் பார்த்து பயப்படுவதற்கு 'இச்தையோ ஃபோபியா' என்று பெயர்.
தண்ணீரைப் பார்த்து பயப்படுவதற்கு 'ஹைட்ரோ ஃபோபியா' என்று பெயர்.
* 'அனஸ்தீசியா' (உணர்வு நீக்கி) மருந்துகளை 'ஆலிவர் வென்டால் ஹோம்ஸ்' என்ற விஞ்ஞானிதான் முதன்முதலில் தயாரித்தார்.
* நைட்ரஸ் ஆக்ஸைடு, ஈதர், குளோரோஃபார்ம் ஆகியவை உணர்வு நீக்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன.
* 'சிரிப்பூட்டும் வாயு' என்று அழைக்கப்படும் நைட்ரஸ் ஆக்ஸைடு வாயுவை 'ஜோசப் ப்ரிஸ்டலி' என்ற விஞ்ஞானி கண்டுபிடித்தார்.
* செயற்கைத் தங்கத்தின் பெயர் 'இன்பால்' ஆகும். இண்டியம் மற்றும் பல்லேடியம் சேர்த்து இது உருவாக்கப்படுகிறது.
* மழைக்காலத்தில் மண் வாசனை வரக் காரணம் 'ஸ்ட்ரெப்டோமைசிடிஸ்' என்ற வகை பாக்டீரியாக்கள் ஆகும். மழை நீர் பூமியில் பட்டதும் இவைகள் 'ஜியோச்மின்' என்ற வேதிப்பொருளை வெளிவிடுகிறது.
* ஃப்ளோரசென்ட் வண்ண எழுத்துகள் இருளில் ஒளிர்வதற்குக் காரணம் 'காட்மியம் சல்பேட்', 'ஜிங்க் சல்பேட்' சேர்த்து எழுதப்பட்டவையாகும். இவை சுற்றுப்புற புற ஊதாக் கதிர்களை ஈர்த்து ஒளிர்கின்றன.
* 'கவிஸ்கர்' என்ற விருது அறிவியல் மேதைகளுக்கு வழங்கப்படுகிறது.
* ரத்தத்தை உறைய வைக்கும் பொருள் பிளாஸ்மா.
* எவர்சில்வர் என்று அழைக்கப்படும், துருப் பிடிக்காத உலோகம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல். இது ஒரு வகை இரும்பே. துருப்பிடிக்காத இரும்பு. இரும்பில் ஈரம் சேரும்போது துருப்பிடிக்கும். அவ்வாறு துரு ஏறாமல், பளபளப்பு மாறாமல் இது செயற்கையாய் உருவாக்கப்பட்ட உலோகம்.
இதில் இரும்பு, குரோமியம், மாங்கனீஸ், சிலிகா, கார்பன் போன்றவை உள்ளன. சிவவற்றில் நிக்கல் கலக்கப்படுகிறது.
இதிலும் ஓரளவு துருப்பிடிக்கும். அதிகம். துரு பிடிப்பதில்லை. வசதியான எளிதில் சுத்தம் செய்யும் சமையல் பாத்திர வளர்ச்சியில் இது ஒரு மைல் கல்.
* எதைப் பார்த்தாலும் பயப்படும் நோய்க்கு 'பானாஃபோபியா' என்று பெயர்.
* மருந்தில்லா ஆட்கொல்லி எய்ட்ஸ் மட்டும் என நினைக்கிறோம். வேறு ஒரு நோயும் உள்ளது. ‘ஹெப்பாடைட்டிஸ் – சி –‘ என்பது. இது மோசமான மஞ்சள் காமாலை நோய். எட்டு கிருமி மூலம் இது உண்டாகிறது. இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நோய்.
* சிகிச்சை என்றால் மருத்துவமனை - டாக்டர் – மருந்து – ஊசி – மாத்திரை என பொதுவாய் நினைகிறோம். இந்த சிகிச்சையில் பலவித முறைகள் உள்ளன. இயற்கை வைத்தியம், சித்த வைத்தியம், ஹோமியோபதி, அக்குபஞ்சர், அலோபதி, ஆயுர்வேதம், மண் சிகிச்சை, யோகா, நீர்சிகிச்சை, நாட்டு வைத்தியம், மெஸ்மரிசம், பிரார்த்தனை, மந்திரம், தாயத்து, முடி கயிறு என பலவித மருத்துவ சிகிச்சை முறைகள் உலகம் முழுதும் பின்பற்றப்படுகிறது. திருக்குறளில் மருந்து பற்றி பேசப்படுகிறது. கி.மு.விலேயே அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சான்று உள்ளது.
* தக்காளிக்கு சிவப்பு நிறத்தைத் தரும் வேதிப் பொருட்களின் பெயர் 'லைகோபென்' ஆகும்.
* சர்க்கரையை விட பன்மடங்கு இனிப்பான ‘சாக்கரின்’ நிலக்கரியிலிருந்து எடுக்கப்படுகிறது.
* வயலின் ‘இசைக்கருவிகளின் ராணி’ என வர்ணிக்கப்படுகிறது.
* மழை நீரில் வைட்டமின் பி-12 சத்து நிறைய இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
* செயற்கையாக உறக்கம் வரவழைத்து ஆழ்மன உணர்வை வெளிக் கொணரும் உளவியல் முறை. இதனைக் கண்டுபிடித்தவர் சிக்மண்ட் பிராய்ட்.
* இரும்பை விட நான்கு மடங்கு கனமான வாயு ‘ரேடான்’.
* விண்வெளியை சுற்றிய முதல் செயற்கைக்கோள் ‘ஸ்புட்னிக்’.
* பட்டப்படிப்பில் B.A. என்பது Bacholar of Arts – M.A. Master of Arts – M.Sc – Master of Science என வரிசையாக வரும். ஆனால் MBBS டிகிரிக்கான எழுத்துக்கள் மட்டும் மாறி வந்துள்ளது. MBBS என்பது. BMBS என்பதுதான் சரியான வரிசை. ஆனால் MBBS என்று குறிக்கப்படுகிறது.
* ஈயத்தின் லத்தீன் மொழிப் பெயர் ‘பிளம்பம்’.
* நவமணியில் ‘கேட்ஸ் ஐ’ என்பது வைடூரியம்.
* சூரிய வெளிச்சத்தில் கருப்பாகவும், இரவில் பிரகாசமாகவும் உள்ள கண்ணாடி ஃபோட்டோ குரோமிக் கண்ணாடியாகும்.
* நம் உடலில் பல உறுப்புகள் உள்ளன. ஒவ்வொரு உறுப்பும் ஒருவிதத்தில் பயன்படுகின்றன. ஒரு பயனும் இல்லாத உறுப்பு ஒன்று மட்டுமே உள்ளது. அதோடு சமயத்தில் ஆபத்தையும் தரும். இதுவே குடல்வால் Appendix. வயிற்றில் வலதுபுறம் பெருகுடல் – சிறுகுடல் இணையும் இடத்தில் இது உள்ளது. இது ஒரு மெல்லிய குழாய். 10 செ.மீ. நீளம் உள்ளது. 0.5 செ.மீ விட்டமுடையது. இதில் நோய் ஏற்பட்டால் உடனே இதனை அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஆபத்து.
* நெல்லிக்காயின் துவர்ப்பு சுவைக்குக் காரணமான பொருளின் பெயர் ‘அஸ்கார்பிக் அமிலம்’ ஆகும்.
* தண்ணிரில் மிதக்கக்கூடிய உலோகம் அலுமினியம்.
* குறைவான உஷ்ணத்திலேயே உருக்ககூடிய உலோகம் ஈயம்.
* நெருப்பால் அழிக்க முடியாத பொருள் ஆஸ்பெஸ்டாஸ்.
* சோடியம் குளோரைடு என்பதை சாதாரணமாக உப்பு என்று அழைப்பார்கள்.
* சந்திரன் பூமியை மணிக்கு 3680 கி.மீ வேகத்தில் சுற்றுகிறது.
* மின்னோட்டத்தின் அலகு ‘ஆம்பியர்’ எனப்படும்.
* மேகங்கள் மோதும் சப்தமல்ல. மின்னல் பாயம் போது ஏற்படும் வெப்பத்தால் காற்று திடீரென்று வீசப்படுவதால் ஏற்படும் சப்தமே இடி. ஒளிவேகம் அதிகம். மின்னல் முதலில் தெரியும். அதைவிட ஒலி வேகம் குறைவு. இடி பின்னால் கேட்கும்.
* அலர்ஜி என்பது ஒவ்வாமை. அதாவது ஒத்துக் கொள்ளாமை. நாம் உண்ணும் சில உணவுப் பொருள்களில் சில நம் உடலுக்கு ஒவ்வாததாய் அமையலாம். அதன் காரணமாக தலைவலி – உடல் எரிச்சல் – தடிப்பு என உடலில் ஒவ்வாமை தோன்றும். சில வாசனை பிடிக்காது வரலாம் – சில தானியம் பிடிக்காமலும் ஏற்படும். இரசாயனப் பொருள்கள் காரணமாகவும் அலர்ஜி ஏற்படலாம். சில வகை மருந்து – மாத்திரையாலும் ஏற்படும்.
* கிடைப்பதற்கு அரிதாக இருப்பதால்தான் தங்கத்தின் விலை அதிகம். ஒரு டன் தாதுப்பொருளை வெட்டி சுத்தம் செய்தால். 26.4 கிராம்தான் தங்கம் கிடைக்கிறது.
* குறுங்கோள்கள் மார்ஸ், ஜூபிடர் கிரகங்களுக்கு இடையே காணப்படுகின்றன.
* உலகிலேயே மிகப்பெரிய தொலைநோக்கி ஹவாய் தீவில் அமைந்துள்ள கெக் தொலைநோக்கியாகும்.
* உலகிலேயே மிகப்பெரிய வைரத்தின் பெயர் 'தி குலினான்'.
* ஜூலை 20, 1969 இல் முதன்முதலில் மனிதன் நிலவில் இறங்கினான். அவர் பெயர் நீல் ஆம்ஸ்ட்ராங். இவர் அமெரிக்க விஞ்ஞானி.
* அயோடின் இயற்கையில் கிடைக்கக்கூடிய ஒரு தனிமம். உடல் வளர்ச்சி, மூளையின் சீரான செயல்பாடுகள் இதன் பலனாகும். கருவுற்ற தாய்க்கு அயோடின் அவசியம். இது பற்றக்குறையானால், கழுத்துக்கழலை, மன வளர்ச்சியின்மை, மாலைக்கண், செவிட்டுத்தன்மை, சோர்வு, கருச்சிதைவு ஏற்படலாம். நிலத்திலும், நீரிலும் அயோடின் சத்து உள்ளது. தினம் ஒருவருக்கு 130 – 200 மைக்ரோ கிராம் தேவை. அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்தி – அயோடின் நமக்கு சேர வழி செய்யலாம். சமையலுக்கு அயோடின் கலந்த உப்பைப் பயன் படுத்துவது மிக நல்லது.
* 'பிரிம் ஸ்டோன்' என்று அழைக்கப்படுவது கந்தகம்.
* சந்திரனில் பல்வேறு நாடுகளும் ஆய்வு செய்கின்றன. சரி. சந்திரன் எந்த நாட்டுக்கு சொந்தம்? அனைத்து உலக நாட்டுக்கும் சொந்தம். 1967 அக்டோபர் 10-ல் உலக நாடுகள் ஒப்பம் செய்து கொண்ட ஒப்பந்தம் இது.
* உலகை 71 சதவீதம் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதில் ஒரே ஒரு சதவீதம் தண்ணீர்தான் குடிக்கத் தகுந்தது.
* ஒவ்வொரு கிரகத்தின் இருப்பிடத்தை அளவுகோலால் அளக்க முடியுமா? முடியாது. இதனை அளக்க கையாளும் அளவு முறையே ஒளி ஆண்டு. ஒளி ஒரு வினாடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் செல்லும். ஒரு ஆண்டில் ஒளி செல்லும் தூரமே ஒளி ஆண்டு. 3,00,000 X 3600 வினாடி (1 நாள்) X 365 = 9860800000000 கிலோ மீட்டர் ஒரு ஒளி ஆண்டு எனப்படுகிறது. அதாவது ஒரு ஆண்டுக்கு ஒளி செல்லும் தூரம்.
* விசைகள் நான்கு வகையாகும்.அவை மின்காந்த விசை, அணு விசை, புவிஈர்ப்பு விசை மற்றும் குறைந்த அணு விசை.
* பற்களைப் பற்றி விரிவாகக் கற்கும் துறை ‘அக்ரஸ்டாலாஜி’ என்பதாகும்.
குதிரைகளைப் பற்றி படிக்கும் பிரிவுக்கு ‘ஹிப்பாலாஜி’ என்பதாகும்.
தாள்களில் ரகசியமாக எழுதும் முறை ‘க்ரிப்டோகிராபி என்பதாகும்.
* பிறை நிலாவைவிட முழு நிலா ஒன்பது மடங்கு பிரகாசமாக இருக்கும்.
* முட்டையின் வெள்ளை ஓட்டில் உள்ள வேதிப் பொருளின் பெயர் ‘கால்சியம் கார்பனேட்’.
* வினிகரில் உள்ள அமிலத்தின் பெயர் ‘அசிடிக் அமிலம்‘.
* சமீப காலத்தில் உலகையே அச்சுறுத்தும் ஒரு கொடிய நோய் எயட்ஸ் எனப்படும் ஆட்கொல்லி நோய். ப்ளாக், பெரியம்மை போன்ற நோய்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்ட மருத்துவ வெற்றிக்கு சவால் விடும் கொடிய நோய் இது. இன்றுவரை உரிய மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை. இது ஆப்ரிக்க நாடுகளில் இருந்து உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் பல ஆயிரம் பேர், குறிப்பாக தமிழ் நாட்டிலும் பரவியுள்ளது. இது ஒரு பால்வினை நோய். முறையற்ற உடல் உறவு, பலரிடம் கொள்ளும் உடல் உறவால் இது வரும்.
எயட்ஸ் நோயாளியின் இரத்தம் மூலமும், அவர்களுக்கு போட்ட சிரிஞ்ச் மூலமும் இது பரவலாம். நோய் பாதித்த தாய் மூலம் சந்ததிக்கும் இது தொடரும். பாதுகாப்பான உடல் உறவு மூலம், நல்லொழுக்கம் மூலமும் இதை தடுக்கலாம். விலைமகள் மூலமே இந்நோய் அதிகம் பரவுகிறது.
Acquired Immune Deficiency Syndrome என்பதன் சுருக்கமே AIDS. இது ஒருவகை வைரஸ் மூலம் பரவும்.
* 1969 செப்டம்பர் 2 – இல் அமெரிக்காவில் கலிபோர்னியாவில் (பல்கலைக் கழகம்) இரண்டு கணிப்பொறி அறிஞர்கள் முதன்முதல் இரு கனிகளுக்கு இடையில் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர். இன்று உலகம் முழுவதும் இத்தகவல் தொழில்நுட்பம் மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. உலகையே இணைக்கும் அறிவு – தகவல் சாதனமாக இது இருக்கிறது. இ – மெயில், தொலைபேசி தகவல் பரிமாற்றம், வெப் காமரா... என வியக்கும் அளவிற்கு விரிந்து வியாபித்துள்ளது.
* அறிவியலின் அற்புத வளர்ச்சியில் ஓர் அங்கம் ரோபோ எனப்படும் யந்திர மனிதன். 2004-ல் ஜப்பான் நாட்டு ஆய்வாளர் டாக்டர் கேன்க்கே ஹெரடா மற்றும் அவரது குழுவினர் பணி செய்யும் புதிய ஆற்றல் மிக்க ரோபோவை உருவாக்கியுள்ளனர், 154 செ.மீ. உயரம், 58 கிலோ எடையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘ஹரிமனாய்டு ரோபோட் எச்.ஆர்.பி.2’ என்று பெயர். இது மனிதன் போல் நடக்கவும், பணி புரியவும் திறன் கொண்டதாகும்.
* பூமிக்கு ஒரு நிலவு. அதுவே சந்திரன். இதுபோல உலகில் பல சந்திரன்கள் உண்டு. ஜூப்பிட்டர் கிரகத்திற்கு 47சந்திரன் உண்டு. சனிக்கு 30 சந்திரன்கள். யுரேனஸ் கிரகத்திற்கு 21 சந்திரன்கள். நெப்டியூன் கிரகத்திற்கு 8 சந்திரன்கள். செவ்வாய் கிரகத்திற்கு 2 சந்திரன்கள், ப்ளுட்டோ கிரகத்திற்கு 1 சந்திரன் ஆகா மொத்தம் சூரிய மண்டலத்தில் 110 சந்திரன்கள் உண்டு.
* மிகக் குறைந்த நாளில் சூரியனைச் சுற்றி வரும் கிரகம் 'மெர்க்குரி'யாகும். இது 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது.
* வாசனைத் திரவியங்களிலேயே மிகமிக அதிக விலை உடையது குங்குமப்பூ. இதில் காம்பு மட்டுமே பயன்படும். ஒரு கிலோ எடையுள்ள குங்குமப்பூ காம்புகளைச் சேகரிக்க ஒன்றரை லட்சம் குங்குமப்பூ தேவைப்படுமாம்.
* 'கிளைமடோமொனாஸ்' என்ற தாவரம் இடம்விட்டு இடம் நகரக்கூடியது.
* ஒரு கணம் என்பது 4 நிமிஷங்கள்.
* வால் நட்சத்திரங்கள் வானின் நீரூற்றுகள் என அழைக்கப்படுகின்றன.
* புரோஜெரியா என்றால் என்ன தெரியமா? இது ஒரு விசித்திர நோய். அபூர்வமானது. குழந்தைப் பருவத்தில் இருந்தே முதுமையான கிழத்தோற்றம் ஏற்பட்டு பத்து ஆண்டிற்குள் மரணம் நிகழும் விசித்திர நோய் இது.
* திட நிலையில் இல்லாது. திரவ நிலையில் உள்ள உலோகம் பாதரசம்.
* புவிஈர்ப்பு விசை இல்லாமல் போனால் இந்த உலகமே இயங்காமல் போகும். எல்லாச் செய்திகளும் நின்றுவிடும். ஒருவராலும் உண்ணவோ, அருந்தவோ, நடக்கவோ இயலாது. மக்கள் எல்லோரும் மிதக்கத் தொடங்கி பூமியின் சுழற்சியில் தூக்கி எறியப்படுவர்.
* ஒரு ஃபர்லாங் என்பது 0.2 கிலோ மீட்டர்.
* இரத்த வெள்ளை அணுக்களின் ஆயுட்காலம் 120 நாட்கள்.
* பென்சிலின் சராசரி நீளம் 17.7 செ.மீ.
* சூரியன் பூமியிலிருந்து 9 கோடியே 30 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ளது.
* சூரியனின் வெளிப்பகுதியிலுள்ள வெப்பம் ஆறாயிரம் டிகிரி சென்டிகிரேடு ஆகும்.
* சூரியனின் உட்பகுதி வெப்பம் 20 டிகிரி சென்டிகிரேடு ஆகும்.
* சூரியனைச் சுற்றி நான்கு வாயு வளையங்கள் உள்ளன.
* உலகின் மிகச் சிறிய உயிரினம் வைரஸ்தான். இதன் உடல் பருமன் எவ்வளவு தெரியுமா? 1 மில்லி மைக்ரான். ஒரு மைக்ரான் என்பது ஒரு மிலி மீட்டரில் 1/1000 பகுதி. இதை மின்னணு தொலைநோக்கியால் மட்டுமே காண முடியும். உயிர்ச்செல்களில் ஒட்டுண்ணியாக இது வாழும். இதைப்பற்றி அறிய ஒரு தனிதுறையே உண்டு. அதன் பெயர். ‘வைராலாஜி’.
* ஒலி அலைகளை மின்சார அலைகளாக்க உதவும் கருவியின் பெயர் மைக்ரோபோன்.
* வெப்பமான நாளில் இரவு நேர வெப்பநிலை குறைகிறது .காற்று மற்றும் அதிலுள்ள நீராவி குளிர்ந்து உறைகிறது .நீராவி அதிக கனமாக இருப்பதால் தாவரங்களிலுள்ள குளிர்ந்த இலைகளின் மேல் பணியாக படிகிறது .இதனையே நாம் ‘பனித்துளி’ என்கிறோம்.
* தும்மல் வருகின்றபோது மூக்கையும், வாயையும் அடைத்து கொண்டால் கண் விழிகள் பாதிக்கப்படும்.
* கண்தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்துவருக்கு பொருத்தப்படுகின்றன.
* விண்வெளியை சுற்றிய முதல் செயற்கைக்கோள் ஸ்புட்னிக்.
* புகழ்வாய்ந்த வால் நட்சத்திரம் ‘ஹாலி’.
* உலகின் முதல் உயிரினம் 57 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது. அதன் பெயர் அமீபா.
* நல்ல முத்து என்றால் பாலில் மிதக்கும்.
* இயந்திர சக்தியை(Mechanical energy) மின்சார சக்தியாக மாற்றும் இயந்திரத்தின் பெயர் ஜெனரேட்டர்.
* எப்போதும் புயல் வீசிக் கொண்டிருக்கும் கோள் வெள்ளி.
* சோடியம் கார்பனேட்டை சாதாரணமாக சலவைத் தூள் என்று அழைப்பார்கள்.
* சலவை சோடாவின் வேதிப்பெயர் சோடியம் கார்பனைட்.
சாதாரண உப்பு என்பது சோடியம் குளோரைடு.
சமையல் சோடாவின் வேதிப்பெயர் சோடியம் பைகார்பனேட்.
ஜிப்சம் என்பது கால்சியம் சல்பேட்டாகும்.
காஸ்டிக் சோடா என்பது சோடியம் ஹைட்ராக்ஸைடாகும்.
எப்சம் உப்பு என்பது மெக்னீஷியம் சல்பேட்டாகும்.
* கண்ணாடியை அறுக்க உதவும் வைரம் கருப்பு நிறத்தில் இருக்கும்.
* கையில் வைத்தாலே உருகும் உலோகம் சீலியம்.
உலகில் அதிகமாகக் கிடைக்கும் உலோகம் அலுமினியம்.
அதிக எடை கொண்ட உலோகம் இரிடியம்.
மிகவும் லேசான உலோகம் லித்தியம்.
நாணயங்கள் தயாரிக்க உதவும் உலோகம் நிக்கல்.
விமானம் தயாரிக்கப் பயன்படும் உலோகம் கோபால்ட்.
* ராஜஸ்தானில் கருவேல மரங்கள் அதிகம் இருக்கின்றன. முதற்கட்டமாக அஜ்மீரில் கருவேல மர மின்சக்தி மையம் செயல்பட உள்ளது.
* ஆகாயத்தில் இருந்து பாக்டீரியாக்கள் உருவாகின்றன. பூமியில் பரவி – உயிர் இனங்களைப் பாதிக்கிறது.
* இந்திய விஞ்ஞான அகாடமியை தொடங்கியவர் சர்.வி.ராமன்.
* ராண்ட்ஜென் 1901-ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.
* சர் சி.வி. இராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசை 1903-ஆம் ஆண்டு பெற்றார்.
* அலெக்சாண்டர் ஃப்ளெமிங் மருத்துவத்துக்கான நோபல் பரிசை 1945-ஆம் ஆண்டு பெற்றார்.
* பூமி மணிக்கு 1,132 மைல் வேகத்தில் சுழலுவதால் இரவும் பகலும் ஏற்படுகின்றன.
* உலோகங்களில் உயர்ந்தது புளூட்டோனியம்.
* குழல் வடிவ நியான் விளக்கை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் ஜார்ஜ் கிளாடு.
* 'பாலியாண்டாலஜி' என்றால் புதைந்து கிடக்கும் பழங்கால மிருகங்களைப் பற்றிய படிப்பாகும்.
* நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்க அணுக்கரு உலையில் கனநீர் பயன்படுகிறது.
* ரேடியோ அலைகளின் வேகம் அலைக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர்கள்.
* 1815-இல் அமெரிக்கர்கள் 'ஃபுல்டன்' என்ற முதல் நீராவிக் கப்பலைக் கட்டினார்கள். இந்தக் கப்பலின் பெயர் எஸ்.எஸ்.ஸ்டீம் ஷிப்.
* பிரெஞ்சுக்காரர்கள் 1824-1825-இல் நீராவிக் கப்பல்களைக் கட்டி அட்லாண்டிக் கடலில் செலுத்தினார்கள்.
* ஆங்கிலேயர்கள் 1822-இல் முதல் பிரிட்டிஷ் நீராவிக் கப்பலை லண்டனிலிருந்து பார்படா தீவுக்கு ஓட்டிச் சென்றனர். அதன்பின்னரே நீராவிக் கப்பலின் தயாரிப்பு மற்ற நாடுகளிலும் பரவியது.
* ஒரு மின்சார பல்பு மூவாயிரம் மணி நேரம் எரியும் தன்மை கொண்டது.