அறிவியல் Science
* ஒரு வெட்ப நிலையில் நீர் கொதிக்கவும் முடியும், உறைந்து போகவும் முடியும். இதை ட்ரிப்பில் பாயிண்ட் என அறிவியலில் கூறுகிறார்கள்.இந்த பாயிண்டில் நீர், வாயுவாக, நீராக, கட்டியாக என மூன்று நிலையிலும் இருக்கும்.
* இந்த பூமியைச் சுற்றி மேகங்கள் சுழன்று கொண்டே தான் இருக்கிறது. இந்த மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது மின்னல் ஏற்படும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 100 மின்னல்கள் பூமியைத் தாக்கிக்கொண்டிருக்கிறது உங்களுக்கு அது தெரியுமா?
* பூமியின் துணைக்கோள் நிலா இது நம் எல்லோருக்கும் தெரியும். பூமியிலிருந்து நிலவு 384,400 km தொலைவில் உள்ளது. இது எல்லாம் நமக்குத் தெரிந்த ஒரு கதைதான். ஆனால் இந்த தூரம் ஒவ்வொரு ஆண்டும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது தெரியுமா உங்களுக்கு? சுமார் 85 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியிலிருந்து வெறும் 35 கி.மீ தொலைவில்தான் நிலவு பூமியைச் சுற்றி வந்திருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். இதை கேட்கவே விசித்திரமாக இருக்கிறது அல்லவா?
* ஜம்போ ஜெட் ரக விமானங்கள் பல உள்ளன. இந்த ரக விமானங்களில் உள்ள எரிபொருளின் முழு கொள்ளளவு ஒரு வாகனம் 4 முறை உலகைச் சுற்றி வரச் செலவாகும் எரிபொருளுக்கு இணையான அளவாகும்.
* விண்வெளி வீரர்கள் விண்ணிற்குள் இருக்கும் போது அவர்கள் தங்களுக்கு ஏதேனும் சோகமான செய்தியைக் கேட்டோ அல்லது ஆனந்தத்திலோ கண்ணீர் விட முடியாது. விண்வெளியில் புவி ஈர்ப்பு சக்தி இல்லாததால் கண்ணீர் பொங்கி வரும் ஆனால் வடியவே வடியாது.
* மைனஸ் 40 டிகிரி செல்சியஸ் என்பது மைனஸ் 40 டிகிரி பாரன்ஹீட் சரிசமமாகும்.
* குளிர்ந்த நீரைக் காட்டிலும் வெப்ப நீர் விரைவாக பனிக்கட்டியாக மாறும்.