விலங்குகள் பற்றிய சுவாரசியமான தகவல்களை Facts
கருவிகள் பலவிதம்
ஆறறிவு கொண்ட மனிதன் மட்டும் தான் சின்னச் சின்ன கருவிகள் உட்பட இன்றைய நவீன கருவிகள் வரையில் அனைத்தையும் பயன்படுத்தி வருகிறான் என்று நினைத்தல் கூடாது. ஐந்தறிவு உள்ள விலங்குகள் ஏன் பறவைகள் கூட அக்காலம் தொட்டு இன்று வரையில் தங்களுக்குத் தெரிந்த கருவிகளை பயன்படுத்தி வருகிறது. இதோ கீழே சில உதாரணங்களை பார்ப்போம்.
சிம்மன்சி குரங்கு மரக் குச்சியால் எறும்புப் புற்றில் குத்தி அதனை வெளியே எடுக்கும். அதே போல அந்தக் குச்சியில் ஒட்டிக் கொண்டு இருக்கும் எறும்புகளை நாக்கினால் நக்கிச் சாப்பிடும்.
எகிப்து நாட்டுப் பருந்துகள் தீக்கோழி முட்டையை உடைக்கக் கற்களைப் பயன்படுத்துகின்றன. அது மட்டும் அல்ல கற்களைக் கால்களில் பற்றிக் கொண்டு மேலிருந்து முட்டை மீது விழும் படியாகப் போடும். பிறகு அந்த முட்டையில் இருக்கும் கருவை சாவகாசமாகச் சாப்பிடும்.
த்ரிஷ் என்ற பறவை தனது அலகில் நத்தையை பற்றிக் கொண்டு வந்து அதன் ஓட்டைக் கல்லில் மோதி உடைக்கும்.
மரங்கொத்திக்கு கூறிய அலகு இருப்பதால் மரப் பட்டையைக் குத்தி அடியில் உள்ள பூச்சிகளைத் தின்ன முடிகிறது. ஆனால், அதுவே கலபாகோ தீவில் உள்ள ஒரு பறவைக்கு நீண்ட அலகு கிடையாது. எனவே அது கூர்மையான குச்சியைத் தனது குட்டையான அலகில் பற்றிக் கொண்டு அதனால் மரப்பட்டையைக் குத்தி வெளிப்படும் பூச்சிகளை தின்கிறது.
ஆப்பிரிக்கக் கீறி தனது பின் கால்களால் பாறையில் மோதும் படி முட்டையை எட்டி உதைத்து உடைத்து சாப்பிடும்.