அலெக்சாண்டர் கிரகம்பெல் Alexander Graham Bell
அலெக்சாண்டர் கிரகம்பெல்!!!
இன்று உலகத்தின் எந்த மூலைக்கும் யாருடனும் தொடர்பு கொள்ள முடிகிறது என்றால் அதற்கு காரணம், டெலிபோன் என்ற சாதனம். இதற்கு முதலில் அடித்தளம் இட்ட அறிவியல் மேதை, அலெக்சாண்டர் கிரகம்பெல்.
அலெக்சாண்டர் கிரகாம்பெல் வாழ்க்கை வரலாறு:-
கிரகாம்பெல் 1847 மார்ச் 3ல், ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க்கில் பிறந்தார். இவரது அப்பா சிறந்த எழுத்தாளர். பேச மற்றும் காது கேட்காத மக்களுக்கு கற்பிப்பது தொடர்பான புத்தகங்களை எழுதியவர். கிரகாம்பெல், எடின்பர்க்கில் உள்ள ராயல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 14 ம் வயதில் பட்டம் பெற்றார். இவர் சில ஆண்டுகள் மட்டுமே முறையான கல்வி கற்ற போதிலும், இவருடைய குடும்பத்தினர் இவருக்கு சிறந்த கல்வியை கற்பித்தனர். இவர் தாமாகவும் உயர்ந்த கல்வியை கற்றுக்கொண்டார். இவருடைய தந்தை, குரல் உறுப்பு பயிற்சியிலும், பேச்சுத் திருத்த முறையிலும், செவிடர்களுக்கு கல்வி கற்பிப்பதிலும் வல்லுனராகத் திகழ்ந்தார். எனவே குரல் ஒலிகளை மீண்டும் உருவாக்கிக் காட்டுவதில் இவருக்கு இயல்பாகவே ஆர்வம் எழுந்தது. பின் எல்ஜினில் உள்ள வெஸ்டன் ஹவுஸ் அகாடமி கல்லூரியில் ஒரு ஆண்டு ஆசிரியராக இருந்தார். 1870 ல் இவரது குடும்பம் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. அப்போது தொடர்பு இயந்திரங்கள் பற்றிப் படிக்கத் தொடங்கினார். முதலில் மின்சாரத்தை பயன்படுத்தி அதிக தூரம் கேட்கும் வகையில் பியானோவை உருவாக்கினார்.
அமெரிக்காவில் உள்ள Massachusetts மாநிலத்திலிருக்கும் Boston நகரில் 1871ம் ஆண்டில் பெல் குடியேறினார். அங்குதான் 1875 ம் ஆண்டில், தொலைபேசியைக் கண்டுபிடிக்க வழிவகுத்த கண்டுபிடிப்புக்களை இவர் செய்தார். இவர் தமது கண்டுபிடிப்பிற்காக 1876ம் ஆண்டு பிப்ரவரி 7 இல் புத்தாக்க உரிமைக்காக விண்ணப்பித்தார். சில வாரங்களுக்குப் பிறகு இவருக்கு இந்த உரிமை வழங்கப்பட்டது.
கிரகாம்பெல் டெலிபோனை உருவாக்கியது எப்படி:
கிரகாம்பெல்லின் கடந்த கால அனுபவம்தான் டெலிபோனை உருவாக்கப் பயன்பட்டது. இவர் 1874ல் இரும்பு மற்றும் காந்தத்தை பயன்படுத்தி ஒரு மின்சுற்றை உருவாக்கி, பின் மின்சாரம் இல்லாமல் காந்தத்தை பயன்படுத்தி ஒலியை அதிர வைத்தார்.
பெல்லுக்கு புத்தாக்க உரிமை வழங்கப்பட்ட பின்பு மிக விரைவிலே அவர் Filadelfia நடைபெற்ற நூற்றாண்டு விழா கண்காட்சியில் தொலைபேசியை காட்சிக்கு வைத்தார். அவரது கண்டுபிடிப்பில் மக்கள் பேரார்வம் கொண்டனர். இவரது கண்டுபிடிப்பிற்கு ஓர் பரிசும் கிடைத்தது. எனினும், இந்த கண்டுபிடிப்புக்கான உரிமைகளை 1,000,000$ ‘Western union telegraph company’ என்ற நிறுவனத்திற்கு வழங்க பெல் முன் வந்தபோதும் அதை வாங்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதனால் பெல்லும் அவரது நண்பர்களும் சேர்ந்து 1877ம் ஆண்டு July தங்களுடைய சொந்த நிறுவனத்தை நிறுவினார்கள். இதுதான் இன்றைய ‘அமெரிக்க Telephone மற்றும் Telegraph company’ இன் மூதாதையாகும். இவருடைய தொலைபேசிக்கு உடனடியாக பெருமளவில் வணிகமுறையில் வெற்றிகிட்டியது. இவர் நிறுவிய நிறுவனம் இன்று உலகிலேயே மிகப்பெரிய தனியார் வணிக நிறுவனமாக திகழ்கிறது.
இந்த கண்டுபிடிப்பை பயன்படுத்தி நாம் பேசும் ஒலிஅலைகளை, காந்த அலைகளாக மாற்றி, மீண்டும் ஒலியாக மாற்றினார். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டெலிபோனை உருவாக்கினார். கிரகாம்பெல்
வாழ்க்கை குறிப்பு:-
* 1876ல் டெலிபோன் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்றார்.
* 1877ல் “பெல் டெலிபோன்’ கம்பெனியை உருவாக்கினார்.
* 1879ல் இது பிரிட்டன் டெலிபோன் நிறுவனத்துடன் இணைந்தது.
* 1880ல் “அமெரிக்கன் பெல் டெலிபோன் கம்பெனி’ என மாற்றப்பட்டது.
* 1881 ஜன., 25 தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் பெல் இணைந்து ஓரியன்டல் டெலிபோன் கம்பெனி என்ற நிறுவனத்தை உருவாக்கினர்.
* 1922ல் கனடாவில் உள்ள நோவல் நகரில் கிரகம்பெல் இறந்தார்.
கண்டுபிடிப்புகள்:
தொலைபேசியைக் கண்டுபிடித்ததன் காரணமாக பெல் ஒரு பணக்காரராக ஆனபோதிலும் அவர் தமது ஆராய்ச்சியை கைவிடவில்லை. வேறு பல சாதனங்களையும் அவர் கண்டுபிடித்தார். அவர் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டுடிருந்தார். 1882ம் ஆண்டில் பெல் அமெரிக்க குடிமகன் ஆனார். 1922ம் ஆண்டில் காலமானார். கிரகம்பெல் தனியாக மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து 15க்கும் மேற்பட்ட அறிவியல் சாதனங்களை கண்டுபிடித்தார். டெலிபோன் தவிர, தந்தி கருவி, போட்டோபோன், போனோகிராப், செலினியம் செல் போன்றவை இவரது கண்டுபிடிப்புகளில் முக்கியமானவை.