Search This Blog

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி

அறிமுகம்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என்பது பள்ளிக் கல்விக்கான ஒருங்கிணைந்த திட்டமாகும். இது மழலையர் கல்வி முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளடக்கிய சமமான தரமான கல்வியை உறுதி செய்வதை முதன்மை நோக்கமாக கொண்டுள்ளது. இது அனைவருக்கும் கல்வித் திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், ஆசிரியர் கல்வி என்ற மூன்று திட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த திட்டமாகும். இத்திட்டத்தின் முக்கிய விளைவுகள் – உலகளாவிய அணுகல், சமபங்கு, தரம் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்களை பலப்படுத்தி மேம்படுத்துதல் போன்றவைகளாக கருதப்படுகிறது.



நோக்கம்
  • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் நிர்வாக சீர்த்திருத்தத்தைக் கொண்டு வருவதற்கும், ஆசிரியர்கள் மற்றும் தொழில் நுட்பங்களின் மீது ஒரு புத்தெழுச்சியுடன் கல்வியின் தரத்தில் கவனம் செலுத்துவதற்கும் கல்விசார் குறியீடுகளின் மூலம் இலக்கை அடைவதற்கும் ஒரு முழுமையான அணுகுமுறையைப் பின்பற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
  • ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி டிஜிட்டல் கற்றலை ஊக்குவித்தல், உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்துதல், பாலின இடைவெளியைக் குறைத்தல், திறன் மேம்பாடு, உள்ளுர் பகுதி வட்டார சமநிலை மற்றும் விளையாட்டு மற்றும் உடற்கல்வி ஆகியவற்றின் மேம்பட்ட வளர்ச்சிக்கான முயற்சிகளை அறிமுகப்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது
திட்டக்கூறுகள்

திட்டக்கூறுகள்
வழங்கப்படும் சேவைகள்
  • கற்றல் – கற்பித்தலில் தரமான உள்ளீடுகளை வழங்குகிறது. குறிப்பாக காணொலி காட்சி (AUDIO – VISUAL) மின்னியல் கற்றலின் உள்ளடக்கத்தை உருவாக்குதல் மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் வழங்கப்படும் பாடத்தகவல்களில் இணைக்கப்பட்டுள்ள விரைவுத்துலங்கள் குறியீடு (QR CODE ) மூலம் மாணவர்களை எளிதில் அணுகக் கூடிய மதிப்பீட்டு வினாக்கள் உருவாக்கப்பட்டுள்ளதைக் கூறலாம். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி என்பது மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சியினை ஒருங்கிணைக்கும் இணைப்புக்குரிய இயக்ககமாக செயல்படுகிறது.

  • அனைத்து பள்ளிச் செல்லும் வயதுடைய குழந்தைகளுக்கும் உள்ளடக்கிய தரமான மற்றும் சமமான கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தி உறுதி செய்கிறது.

  • மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக் கல்வித் துறையில் உள்ள 3 இலட்சம் அனைத்து வகை ஆசிரியர்களுக்கு தகவல் தொழில்நுட்ப (ICT) பயன்பாட்டுப் பயிற்சியினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவியுடன் வழங்குகிறது. இப்பயிற்சியின் மூலம் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMIS) உதவியுடன் கற்றல் கற்பித்தல் திறனை அதிகரிக்கச் செய்து வகுப்பறைச் செயல்பாடுகள் மேம்படுத்தப்படுகிறது

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url