சர்வதேச அரிய நோய் தினம். Rare Dieses Day - பிப்ரவரி 28
பிப்ரவரி கடைசி நாள் - சர்வதேச அரிய நோய் தினம்.
அரிய நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் பிப்ரவரி கடைசி நாளில் நடத்தப்படுகிறது.
இந்தத் தினமானது அரிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அரிய வகை நோய்கள் உள்ள நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவை அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2020 ஆம் ஆண்டிற்கான அரிய வகை நோய் தினத்தின் முழக்கம் “அரியது பல, அரிதானது வலுவானது, அரியது பெருமை” என்பதாகும்.
அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பினால் 2008 ஆம் ஆண்டில் அரிய வகை நோய்களுக்கான தினத்தை நிறுவியது.