Search This Blog

ஜீன்ஸ் பேண்ட் கண்டுபித்தவர் இவர்தான் - Levi strauss - Jeans Pant


லெவி ஸ்ட்ராஸ்
👖 உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய ஜீன்ஸ் வகை ஆடையை முதன்முதலில் தயாரித்த லெவி ஸ்ட்ராஸ் 1829ஆம் ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள பட்டன்ஹேம் நகரில் பிறந்தார்.

👖 கலிபோர்னியாவில் 'லெவி ஸ்ட்ராஸ்' என்ற பெயரில் வியாபாரம் தொடங்கினார். கேன்வாஸ் துணிகளை தவிர மற்ற துணி வகைகள் விற்றுத் தீர்ந்தன. அதை என்ன செய்வது என்று யோசித்தப்படியே இருந்தார்.

👖 கரடுமுரடான கருவிகள் மத்தியில் வேலை செய்வதால் பேன்ட் அடிக்கடி கிழிந்துவிடுவதாக சுரங்கத் தொழிலாளர்கள் இவரிடம் வருத்தத்தோடு கூறினர். உடனே இவர் 'கேன்வாஸ் துணியில் பேன்ட் தைத்தால் தொழிலாளர்களின் பிரச்சனையும் தீரும் தேங்கிக் கிடக்கும் தனது துணியும் தீரும்' என்று யோசித்தார்.

👖 டேவிட் ஸ்டென் என்பவரையும் சேர்த்துக்கொண்டு கேன்வாஸ் பேன்ட் தைக்கும் வேலையில் இறங்கினார். இந்த உறுதியான பேன்ட் சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

👖 அவை 'டெனிம்' என பெயர் மாற்றம் அடைந்து உலகம் முழுவதும் பரவியது. பிறகு 'ஜென்னொஸ்' என்ற நீல நிறத் துணியை வாங்கி பேன்ட் தைத்தார். அதன் பெயர் 'ப்ளூ ஜீன்ஸ்' என்று மாறி அதுவே நிலைத்துவிட்டது. அதன்பின் 'லெவி ஸ்ட்ராஸ் அண்ட் கம்பெனி' தொடங்கப்பட்டது.

👖 தனது வியாபார உத்தியாலும் கடின உழைப்பாலும் மாபெரும் வளர்ச்சி பெற்று வெற்றிகரமான வியாபாரியாக சாதனை படைத்த லெவி ஸ்ட்ராஸ் 1902ஆம் ஆண்டு மறைந்தார்.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url