Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Nov 21, 2022

கோல்பர்க்கின்‌ ஒழுக்க வளர்ச்சி நிலைகள்‌ (Kohlberg stages of moral development)

கோல்பர்க்கின்‌ ஒழுக்க வளர்ச்சி நிலைகள்‌ (Kohlberg stages of moral development)

* சமூகத்தில்‌, ஒருங்கிணைந்து செயல்படுவதில்‌ ஒழுக்க வளர்ச்சி (Moral deevelopment) முக்கிய பங்கு வகிக்கிறது.

*  இந்த சொல்‌, மக்கள்‌ எவ்வாறு தாம்‌ நல்லது, கெட்டது என்பதை அறிகின்றனர்‌ என்பதை குறிக்கிறது.

*  இது சமுதாயம்‌ நன்கு செயல்பட முக்கியமானது. ஒழுக்க வளர்ச்சி சமுதாயத்திற்கு, எது சரியானது. எது நல்லது என்பதை கருதாமல்‌, கட்டுப்பாடற்ற துண்டுதல்களின்‌ பேரில்‌ செயல்படுவதை தடுக்கிறது.

*  லாரன்ஸ்‌ கோல்பர்க்‌ (Lawrence Kohlberg, 1927 - 1987) மக்கள்‌ எது சரியானது, எது தவறானது என்பதை திமானிக்க எப்படி கற்கின்றனர்‌ என்பதில்‌ ஆர்வம்‌ காட்டினார்‌.

* இவர்‌ முன்னர்‌ தெரிவிக்கப்பட்ட
பியாஜேயின்‌ அறிவாற்றல்‌ கருத்துக்களை மேலும்‌ விரிவாக்கம்‌ செய்து ஒழுக்க வளர்ச்சியை விவரித்தார்‌.

*  அவர்‌ ஒழுக்க வளர்ச்சியின்‌ மூன்று நிலைகளைப்‌ பற்றிய கருத்துக்களை உருவாக்கினார்‌.

*   இவர்‌ ஒழுக்க வளர்ச்சி, அறிவாற்றல்‌ வளர்ச்சியைப்‌ போன்று, பல நிலைகளில்‌ ஏற்படுகிறது என நம்பினார்‌.

கோல்பர்க்கின்‌ ஒழுக்க வளர்ச்சி நிலைகள்‌ (Kohlberg’s stages of moral development) :

கோல்பர் (Kohlberg’s) ஒழுக்க அறிவின்‌ மூன்று நிலைகளை கண்டறிந்துள்ளார்‌.



அவை
1.  மரபுக்கு முற்பட்ட  நல்லொழுக்க நிலை (Pre-conventional morality),

2. மரபு நிலையிலான நல்லொழுக்க நிலை (Conventional morality),

3.  மரபுக்கு பிற்பட்ட நல்லொழுக்க
நிலை (Post-Conventional morality)

ஆகியவைகளாகும்‌.

*  ஓவ்வொரு நிகழ்வும்‌ சிக்கலான ஒழுக்க வளர்ச்சி நிலைகளைக்‌ (Complex stages of moral development) கொண்டது.



நிலை 1 - மரபுக்கு முற்பட்ட நிலை (Pre-conventional morality):

 
   மரபுக்கு முற்பட்ட நிலையில்‌ (9 வயது, அதற்கு குறைவான, சற்று அதிகமான நமக்கு ஒரு தனிப்பட்ட ஒழுக்க வழிகாட்டுதல்கள்‌ (Personal code of morality) இல்லை.

அதற்கு பதில்‌ நம்‌ நன்னடத்தை, வயது வந்தோரின்‌ நடத்தைகளின்‌ அடிப்படையிலும்‌, விதிகளின்‌ பின்விளைவுகளாலும்‌ அல்லது அதன்‌ விதிகளை மீறுவதாலும்‌ (Breaking their rules) வடிவமைக்கப்படுகிறது.

அதிகாரம்‌ தனிநபருக்கு வெளியே உள்ளது அவர்களின்‌ நியாயவாதம்‌. செயல்களின்‌ விளைவுகளின்‌ அடிப்படையில்‌ அமைகிறது.

படிநிலை 1. கீழ்படிதல்‌, தண்டணை அடிப்படையில்‌ (Obedience and Punishment
orientation):

  தண்டணையைத்‌ தவிர்க்க குழந்தை நன்னடத்தையை கபைப்பிடிக்கிறது.

படிநிலை 2. தனித்தன்மை, பரிமாற்றம்‌ (Individualism and Exchange):

இந்நிலையில்‌,குழந்தைகள்‌ அதிகாரத்தில்‌ உள்ளோர்‌ காட்டும்‌ ஒரே ஒரு சரியான நோக்குதான்‌ உள்ளது என்பதை ஏற்பதில்லை. வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு நோக்குகள்‌ உள்ளன.

நிலை 2 - மரபு நிலையிலான நல்லொழுக்க நிலை (Conventional morality):

இந்நிலையில்‌ (அநேக இளைஞர்கள்‌, வயது வந்தோர்‌) வயதில்‌ மரியாதைக்குரிய மூத்தவர்களின்‌ ஒழுக்க நடைமுறைகளை மனதில்‌ பதிய வைத்துக்‌ கொள்கிறார்கள்‌.

மேலாண்மை மனதில்‌ பதிந்து, அதை எதிர்த்து கேள்வி கேட்காமல்‌, தன்‌ குழு மதிக்கும்‌ நடத்தை முறைகளின்‌ அடிப்படையில்‌ சிந்திக்கிறார்கள்‌.

◆  படிநிலை 3. ஒருவருக்கொருவர்‌ நல்ல தொடர்பு (Good interpersonal relationships):

மற்றவர்கள்‌ தன்னை நல்லவராக நினைக்கவேண்டும்‌ என்பதற்காக குழந்தை நன்றாக
நடந்து கொள்கிறது.

எனவே மற்றவர்களின்‌ சம்மதம்‌ நடத்தையை வழி நடத்துகிறது.

படிநிலை 4. சமூக அமைப்பை பாதுகாத்தல்‌ (Maintaining the social order):

குழந்தை சமுதாயத்திலுள்ள விரிவான விதிகளைப்‌ பற்றி அறிந்து, விதிகளைக்‌ கடைப்பிடித்து சட்டத்தை நிலைநாட்டி, குற்ற உணர்வை தவிர்க்க முயல்கிறது.

நிலை 3 - மரபுக்குப்‌ பிற்பட்ட நல்லொழுக்க நிலை (Post-conventional morality):

தனி நபரின்‌ முடிவு )Individual judgement) தானே தேவு செய்த கருத்துக்களின்‌
அடிப்படையில்‌ (Self-chosen principles) அமைந்துள்ளன.

கோல்பெர்க்கின்‌ கருத்துப்படி, இத்தகைய தார்மீக சிந்தனை முறை (Moral reasoning), மக்களால்‌ முடிந்தவரை பின்பற்றப்படும்‌.

10 அல்லது 15% ம்‌ பேர்‌ மட்டும்‌ படிநிலை 5, படிநிலை 6 க்கு தேவையான கருத்து
பூர்வ சிந்தனை திறனை (Abstract thinking) பெற்றுள்ளனர்‌.

அதாவது அநேக மக்கள்‌,
தங்கள்‌ தார்மீக கருத்துக்களை, சுற்றியுள்ள மற்றவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கின்றனர்‌.

ஒரு சிலர்‌ தார்மீக பிரச்சிகைளைப்‌ பற்றி தாமதமாக சிந்திக்கின்றனர்‌.

படிநிலை 5. சமூக ஒப்பந்தமும்‌ தனிநபர்‌ உரிமைகளும்‌ (Social contract and  Individual rights):

சட்டங்கள்‌ பொதுவாக அநேக மக்களின்‌ நன்மைக்காக இருந்தபோதிலும்‌ சில நேரங்களில்‌ அவை தனி நபரின்‌ நன்மைக்கு எதிராக
செயல்படுகின்றன என்பதை குழந்தைகள்‌ உண்கின்றார்கள்‌.

படிநிலை 6. அவைருக்கும்‌ பொதுவான கொள்கைகள்‌ (Universal principles):

இந்நிலையில்‌ உள்ளவர்‌ தாமே தார்மீக வழிமுறைகளை ஏற்படுத்திக்‌
கொள்வர்‌.

இவை சட்டத்தை பின்பற்றியோ, எதிராகவோ இருக்கலாம்‌. இந்த
கொள்கைகள்‌ எல்லோருக்கும்‌ பொருந்தும்‌.

உதாரணம்‌, மனித உரிமைகள்‌.

  நீதி, சமத்துவம்‌ ஆகியவை. அந்த நபர்‌
இக்கருத்துக்களின்படி நடக்க தயாராக இருப்பார்‌, அது மீதமுள்ள மக்களுக்கு எதிராக இருந்தாலும்‌ சரி; கொள்கையை ஏற்காமல்‌ சிறைக்கு செல்ல வேண்டியிருந்தாலும்‌ சரி.



முடிவு

லாரென்ஸ்‌ கோல்பெர்கின்‌ கோட்பாடு, புரிந்துகொள்வதற்கு கடினமான பிரச்சினைக்கு ஒரு வடிவம்‌ கொடுக்கிறது. அவர்‌ உருவாக்கிய அறநெறி பற்றிய கருத்துக்கள்‌.

கார்ல்‌ கில்லிகன்‌ (Carl Gilligan) உருவாக்கிய பெண்களின்‌ நன்னடத்தை பற்றிய கோட்பாடுகளை (Moral development of women) பாதித்தது.

உலகம்‌ முழுவதும்‌ உள்ள கல்வியாளர்களிடையே பரவியது.

அவருடைய கருத்துக்கள்‌ உளவியல்‌ துறையில்‌ மட்டுமின்றி, கல்வித்‌ துறையிலும்‌ பயனுள்ளதாக உள்ளது.

மாணவர்களின்‌ நடத்தை,
அவர்கள்‌ எடுக்கும்‌ முடிவுகள்‌ இவற்றை புரிந்து கொள்வதற்கு இவருடைய நன்னடத்தை வளர்ச்சி நிலைகள்‌ பற்றி புரிந்து கொள்ளுதல்‌ முக்கியமானதாகிறது.

அவர்களின்‌ வளர்ச்சி நிலையை சரியாக மதிப்பீடு செய்தல்‌, மாணவர்கள்‌ ஏன்‌ அவ்வாறு செயல்படுகின்றனர்‌ என்பதை புரிந்து கொள்ளவும்‌, அவற்றை கையாளவும்‌ உதவுகிறது.

உதாரணமாக, நன்னடத்தை வளர்ச்சியில்‌ முதல்‌ படியிலுள்ள மாணவியை, அவள்‌ வகுப்பில்‌ ஆசிரியர்‌
இல்லாதபோது, அமைதியாக உட்கார்ந்து இருக்க வேண்டும்‌ என வற்புறுத்திக்‌ கூறுதல்‌ பயனற்றது.

அதற்கு பதிலாக ஆசிரியர்‌ இல்லாதபோது. ஒரு அதிகாரம்‌ மிக்க நபர்‌ வகுப்பில்‌ இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க ஒரு வழியை காணவேண்டும்‌.

முடிவாக, வகுப்பறையை சமாளிக்கத்‌ தகுந்த வழிமுறைகள்‌ இருப்பின்‌, பாடத்தின்‌ சிறப்பு அதிகரிக்கப்படும்‌.

No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்