Search This Blog

எரிக்சனின்‌ உள-சமூக வளர்ச்சிக்‌ கோட்பாடு (Erikson’s psycho - social theory)

குழந்தை வளர்ச்சி பற்றிய கோட்பாடுகள் (Theories of the child development)

1. எரிக்சனின்‌ உள-சமூக வளர்ச்சிக்‌ கோட்பாடு (Erikson’s psycho - social theory)


* பிராய்டை (Freud’s) பின்பற்றிய பலர்‌ அவருடைய கருத்துக்களில்‌ பயனுள்ளவற்றை எடுத்து, அவருடைய தொலைநோக்கை (Vision) மேம்பாடு அடையச்‌ செய்தனர்‌.

* இவர்களில்‌ மிக முக்கியமானவராகிய எரிக்‌ எரிக்சன்‌ (Erik Erikson, 1902 - 1994) குழந்தைகளின்‌ ஒவ்வொரு நிலைகளிலும்‌ வளர்ச்சி பற்றிய கருத்தை விரிவாக்கினார்‌. 

* எரிக்சன்‌, தன்முனைப்பு (Ego) மற்ற தூண்டுதல்களுக்குமேல்‌, வளர்ச்சியில்‌ முக்கிய பங்கு வகிப்பதுடன்‌ குழந்தையை, திறன்கள்‌, நோக்கங்கள்‌ பெற்று, சமூகத்தில்‌ செயல்பட்டு, பயன்‌ அளிக்கக்‌ கூடியவராக செய்கிறது என்பதை வலியுறுத்துகிறார்‌.

* ஒரு அடிப்படை உளவியல்‌ - சமூகபோராட்டம்‌ (Basic  psycho - social conflict), தொடர்ந்து எதிரானதிலிருந்து நேரானதாக மாற்றி திக்கப்படுவது
ஒவ்வொரு நிலையிலும்‌ பயனுள்ள அல்லது பொருத்தமற்ற விளைவுகளை திமானிக்கிறது.

*  எரிக்சனின்‌ முதல்‌ ஐந்து நிலைகள்‌ பிராய்டின்‌ நிலைகளுக்கு ஒப்பாக உள்ளன.

* ஆனால்‌ எரிக்சன்‌ மூன்று இதர நிலைகளான, 
1. முன்முதிர்‌ பருவம்‌ (Young  adulthood), ), 
2. நடுமுதிர்‌ பருவம்‌ (Middle adulthhood),
3. பின்முதிர்‌ பருவம்‌ (Old age)
ஆகியவற்றைச்‌ சோத்துள்ளார்‌.

* வாழ்க்கை முழுதும்‌ தொடர்ந்து நடைபெறும்‌ வளர்ச்சியின்‌ தன்மையை புரிந்து கொண்டவர்களில்‌ இவர்‌ முதன்மையானவர்‌.
 
எரிக்சனின் உள - சமூக வளர்ச்சி நிலைகள் ( Erikson's psycho - social stages) 

1. குழவிப் பருவம் ( Infant ) 0- 18 மாதங்கள்:

  அடிப்படை நம்பிக்கை - அவநம்பிக்கை ( Trust VS Mistrust ) :
◆ குழந்தைகளை பரிவால் , அன்பால் கவனித்தலின் விளைவாக சிறுகுழந்தைகள் Inlants ) பிறர் மீது நம்பிக்கை ( Trust ) , தன்னம்பிக்கை   ( Conlidence ) இவற்றைப் பெற்று . இவ்வுலகம் நல்லது ( World is good ) | என்ற எண்ணத்தைப் பெறுகின்றனர் .

◆ குழந்தைகள் கொடூரமாக நடத்தப்பட்டாலோ ( Handled harshly ) , கவனிக்காமல் விடப்பட்டாலோ ( Neglected ) , நம்பிக்கையின்மை ( Mistrust ) ஏற்படுகிறது . 


2 . குறுநடை பருவம்  ( Toddler ) 18 மாதங்கள் 3 ஆண்டுகள்:

   சுதந்திரமாக செயல்படல்  : வெட்கம் , சந்தேகம் ( Autonomy vs Shame Doubt )  :
◆ குழந்தைகள் தம் அறிவு உடல்திறன் ( Mental and motor skillsy) பயன்படுத்தி தாமே முடிவுகளை எடுக்க ( Dccide for themselves ) விரும்புகின்றனர் .

◆  பெற்றோர் அவர்களை , வற்புறுத்தவோ ( Forcing ) , வெட்கப்பட வைக்கவோ ( Shaming ) செய்யாமல் , தாமே சுதந்திரமாக தேர்வு செய்ய அனுமதித்து , சுதந்திரமாக செயல்படும் திறனை வளர்க்கலாம் . 


3. முன்பருவ பள்ளியினர் ( Pre - Schooler ) 3-5 ஆண்டுகள்:

 தானே முன்வந்து செய்தல் குற்ற உணர்வு ( Initiative vs Guilt ) :      
   ◆ விளையாட்டின் மூலம் குழந்தைகள் , தான் எந்த மாதிரி மனிதனாக ஆக முடியும் என்பதைப்பற்றி தெரிந்து கொள்கின்றனர் .

◆  பெற்றோர் குழந்தையின் குறிக்கோள்களை ஆதரிக்கும்போது , முயற்சி ( Initiative ) , லட்சியம் ( Ambition ) , பொறுப்பு ( Responsibility ) ஆகியவைகள் வளர்கின்றன .

◆  ஆனால் பெற்றோர் அதிக கட்டுப்பாடுகள் விதிக்கும்போது , குழந்தைகள் குற்ற உணர்வு பெறுகின்றனர் .

4. பள்ளி செல்லும் பருவத்தினர் ( Grade Schooler )

 கடின உழைப்பு தாழ்வு மனப்பான்மை நிலை ( Industry VS Inferiority ) : 
◆ பள்ளியில் குழந்தைகள் வேலை செய்யவும் ( Learn to work ) , மற்றவருடன் ஒத்துழைக்கவும் ( Cooperate with others ) 5-13 ஆண்டுகள் கற்றுக்கொள்கின்றனர் .
◆  வீட்டிலோ , பள்ளியிலோ , சக மாணவர்களுடன் இருக்கும்போதோ , எதிரான அனுபவங்கள் ஏற்படும்போது , தாழ்வுமனப்பான்மை ( Inferiority complex ) , தகுதியற்றவர் என்ற எண்ணம் ( Feeling of incompetence ) வளர்கிறது .

5. வளரிளம் பருவம் ( Adoleerscent ) 13-21 ஆண்டுகள்

 தன்னைப்பற்றிய உணர்வு தன் நிலை பற்றிய குழப்பம் ( Identity vs Role Confusion ) :
 ◆ மதிப்புகள் ( Exploring values ) , தொழில்கள் பற்றிய குறிக்கோள்கள் ( Vocational goals ) இவற்றை அறிவதால் இளைஞர்கள் தன்னைப் பற்றிய கருத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள் .
◆  எதிரான பண்புகளால் ( Negative outcome ) , தன் எதிர்கால தொழில் பற்றி குழப்பம் ( Confusion about future ) அடைகிறார்கள் .

6. முன் முதிர் பருவம் ( Young Adult ) 21-39 ஆண்டுகள்

 நெருக்கம்   தனிமை ( Intimacy VS Isolation ) :
 ◆ இளைஞர்கள் நெருக்கமான உறவை ( Intimate relationship ) ஏற்படுத்திக் கொள்கின்றனர் .

◆  முன்னாளில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் ( Earlier disappointments ) காரணமாக , சில இளைஞர்கள் நெருக்கமான உறவு இன்றி தனிமையாக ( Isolated ) ஆகின்றனர் .

7. நடு முதிர் பருவம் 40 -65 ( Middle - Age Adult ) ஆண்டுகள்

 உருவாக்குதல் நோக்கம் ( Generativity VS Stagnation ) :
 ◆ உருவாக்குதல் என்பது குழந்தைகளை வளர்த்தல் ( Child rearing ) , மற்றவரின் மீது அக்கறை கொள்ளுதல் ( Caring for others ) போன்ற செயல்கள் மூலம் அடுத்த தலைமுறைக்கு உதவுதல் ஆகும் .

◆  இவற்றுள் தோல்வி அடைபவர்கள் ( Person who fails ) , ஒரு அர்த்தமுள்ள ( Absence of meaningful accomplishment ) சாதனையில்லாமையை உணர்கிறார்கள் .

8. பின்முதிர் பருவம் ( Older Adult ) 65 வயதிற்கு மேல்:
 ஒருங்கிணைந்து இருத்தல் விரக்தி ( Integrity vs Despair ) : 

◆ தம் வாழ்கை பயனுள்ளதாக ( Life was worth ) இருந்தது என்ற எண்ணம் , ஒருங்கிணைந்த தன்மையை ( Integrity ) உருவாக்குகிறது .

◆  தம் வாழ்க்கையைப் பற்றி அதிருப்தியுள்ள முதியோர் ( Older people who are dissatisfied with their lives ) , சாவைப்பற்றி அஞ்சுகின்றனர் ( Fear death ) .  


 *  உளவியலில் சிறந்த சிந்தனையாளர்கள் , குழந்தை வளர்ச்சியின் , வெவ்வேறு நிலைகளை விளக்கவும் , ஆய்வு செய்யவும் , வெவ்வேறு கோட்பாடுகளை உருவாக்கியுள்ளனர் . இந்த எல்லா கருத்துக்களும் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் , அவை , குழந்தையின் வளர்ச்சி ( Child development ) பற்றி புரிந்து கொள்வதில் முக்கிய பங்கு வகித்தன . குழந்தைகளின் வளர்ச்சி , நடத்தை , சிந்தனை இவற்றைப் புரிந்து கொள்ள , பல்வேறு கோட்பாடுகளையும் , நோக்குகளையும் பயன்படுத்துகின்றனர் .

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url