Search This Blog

தீபாவளி பற்றி அறியாத சில தகவல்கள்



தீபாவளி



"இன்று தீபாவளிப் பண்டிகை. இப்பண்டிகை பற்றி நீங்கள் அறிந்தும், அறியாத தகவல்களை பார்ப்போம். வாருங்கள் கட்டுரைக்குள் செல்வோம். "

தீப ஒளித் திருநாள் எனப்படும் தீபாவளி இன்று கொண்டாடப்படுகிறது. இது இந்து மதத்தின் மிகவும் பிரபலமான பண்டிகைகளில் ஒன்றாகும். இப்பண்டிகை இந்தியா உட்பட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. அதாவது, வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது. இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகள் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

பெரும்பாலான ஆண்டுகளில் தீபாவளி பண்டிகை ஐப்பசி மாத அமாவாசை தினத்தன்று கொண்டாடப்படுகிறது. கிரகொரியின் நாட்காட்டி படி அக்டோபர் மாத 17லிருந்து நவம்பர் மாத 15 ஆம் தேதி வரையான நாட்களில் தீபாவளி வருகிறது.

இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகள் தீபாவளியை அரசு விடுமுறையாக அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்துக்கள் மட்டுமின்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட இப்பண்டிகையை வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர்.

இந்து சமயத்தில் தீபாவளி:-

* இராமன் பதினான்கு வருடங்கள் வனவாசம் முடித்து, நாடு திரும்பும் போது மக்கள் விளக்கேற்றி வரவேற்றனர். அது தான் பிற்காலத்தில் தீபாவளி ஆனது. (தீபாவளி என்றால் விளக்குகளின் அணிவரிசை என்ற ஒரு பொருள் உண்டு.)

* ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை கொன்ற தினம் அது தீபாவளிப் பண்டிகை ஆனது.

* கந்த புராணத்தின் படி, சக்தியின் 21 நாள் கேதாரகௌரி விரதம் முடிவுற்றது இத்தினத்தில் தான். விரதம் முடிவடைந்த பின்னர் சிவன், சக்தியை தன்னில் ஒரு பாதியாக ஏற்று 'அர்த்தநாரீசுவரர்' உருவமெடுத்தார்.

* கி.பி.16ஆம் நூற்றாணடு முதல் கோயில்களில் தீபாவளி விழா கொண்டாடப்பட்டு வருவதற்கான சான்றுகள் திருப்பதி திருமலை வேங்கடவன் கோயிலில் உள்ள ஒரு தமிழ்க் கல்வெட்டிலும், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு செப்பேட்டிலும் காணப்படுகின்றன.

சீக்கியர்களின் தீபாவளி: 1577-இல் இத்தினத்தில், பொற்கோயில் கட்டுமான பணிகள் துவங்கியதையே சீக்கியர்கள் இந்நாளில் கொண்டாடுகின்றனர்.

சமணர்களின் தீபாவளி : மகாவீரர் வீடுபேறு அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து, இத்தினத்தைச் சமணர்கள் கொண்டாடுகின்றனர்.

* ஒடிசா மாநிலத்தில் தீபாவளியன்று இறந்த முன்னோர்களை வழிபடும் பழக்கம் உள்ளது. மேற்கு வங்கத்தில் தீபாவளி முன்னிட்டு காளி பூஜை நடத்தப்படும்.

* வட இந்தியாவில் மகா லக்ஷ்மியை வரவேற்கும் பண்டிகையாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. அதனால் தான் வட இந்தியாவில் வணிகர்கள் இந்நாளில் விநாயகரை வணங்கி புதுக்கணக்கு தொடங்குவர்.

இப்படியாக தீபாவளி மற்ற மதங்களிலும் கூட அதிக முக்கியத்துவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url