Search This Blog

பனிக்கூழ் (Ice Cream) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!


பனிக்கூழ் (Ice Cream) பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்!


""குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, தங்களின் விருப்ப உணவுப் பட்டியலில் தவறாமல் சேர்த்துக் கொள்ளும் ஒரே உணவுப் பொருள் 'பனிக்கூழ்' என்றழைக்கப்படும் ஐஸ்கிரீம் (Ice Cream) தான்.""

ஐஸ்கிரீமானது (Ice Cream), முதன் முதலில் சீனாவில் (China) 618 - 97 ஆம் கால கட்டத்தில், எருமை பால், மாவு மற்றும் கற்பூரம் போன்றவற்றைக் கொண்டு 94 பணியாளர்களின் உதவியால் உருவாக்கப்பட்டது. பால் மற்றும் அரிசி கலவையை பனியில் அடைத்து சீனாவில் (China) ஒருவகையான ஐஸ்கிரீம் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ரோமானியப் பேரரசர்கள், தங்கள் நாட்டின் அடிமைகளை பனி மலை உச்சிக்கு அனுப்பியதாகவும், அவர்கள் கண்டுபிடித்ததே ஐஸ்கிரீம் (Ice Cream) என்ற கூற்றும் வரலாற்றில் காணப்படுகிறது.

மேலும், இங்கிலாந்து (England) நாட்டின் அரசனான சார்ல்ஸ் I (Charles), இங்கிலாந்து (England) நாட்டின் ஐஸ்கிரீம் (Ice Cream) செய்யும் செயல்முறை ரகசியத்தை வெளியிடாமல் காக்க தனது சமையல்காரருக்கு சுமார் 500 டாலர் வழங்கியது வரலாற்று நிகழ்வாகும். மார்க்கோ போலோ (Marco Polo), சீனாவில் மேற்கொண்ட பயணத்தின் விளைவாகவே, ஐஸ்கிரீம்கள் (Ice Cream) இத்தாலிக்கு (Italy) அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் நம்பப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டில், அமெரிக்க நகரமான எவன்ஸ்டனில் (Evanston) ஐஸ்கிரீம் (Ice Cream) சோடாக்களை ஞாயிற்றுக் கிழமைகளில் விற்பனை செய்வது சட்ட விராதமான போது ஐஸ்கிரீம் சண்டேஸ் (Ice Cream Sundays) கடைபிடிக்கப்பட்டது.

இட்டாலோ மார்ச்சியோனியினால் (Italio Marchisoni), 1896 ஆம் ஆண்டு முதல் கூம்பு ஐஸ்கிரீம் (Cone Ice cream) கண்டுபிடிக்கப்பட்டது. 1903 டிசம்பரில்,(December) நியூயார்க் (Newyork) நகரில் அந்த ஐஸ்க்ரீமுக்கு காப்புரிமை வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1906 ஆம் ஆண்டு, அவரது நிறுவனத்திற்கு "நவீன வூட்மேன் ஆஃப் அமெரிக்கா ஃபிரிஸ்கோ லாக் ரோலிங்கில் சல்லிவன் ஐஸ்கிரீம் கூம்புவளை" (Modern Woodmen Of America Frisco log Rolling Sullivan Ice Cream Corn) என்ற பெயரானது வழங்கப்பட்டது. இந்த நிறுவனம் ஒவ்வொரு நாளும் சுமார் 1,50,000 கூம்புகளை (Cone) உற்பத்தி செய்யும் விதமாக பின்னர் வந்த நாட்களில் மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படியாக, ஐஸ்க்ரீம் பற்றிய எண்ணற்ற சுவாரஸ்ய தகவல்கள் வரலாற்றில் காணக் கிடைக்கிறது. பின்னே! சும்மாவா வந்தது இந்த ஐஸ்க்ரீம்?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url