அக்டோபர் 10 தேசிய அஞ்சல் தினம் national post day
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி இந்தியாவில் தேசிய அஞ்சல் தினம் கொண்டாடப் படுகிறது.
கடந்த 150 ஆண்டுகளாக இந்திய தபால் துறை ஆற்றியப் பங்களிப்பை நினைவு கூரும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
அக்டோபர் 9 அன்று கொண்டாடப்படும் உலக அஞ்சல் தினத்தின் நீட்டிப்பாக இந்திய அஞ்சல் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்திய அஞ்சல் 1854 ஆம் ஆண்டில் டல்ஹெளசி பிரபு என்பவரால் நிறுவப்பட்டது.
இது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
தபால் துறையின் கீழ், 6 இலக்க PIN (Postal Index Number) முறையை மத்திய தகவல் தொடர்பு அமைச்சகம் 1972 ஆகஸ்ட் 15 அன்று அறிமுகப்படுத்தியது.
பின்கோடில் உள்ள PIN என்ற சொல் அஞ்சல் குறியீட்டு எண்ணைக் குறிக்கிறது
பின் குறியீட்டின் முதல் இலக்கமானது அப்பகுதியைக் குறிக்கிறது.
இரண்டாவது இலக்கமானது துணைப் பகுதியைக் குறிக்கிறது.
மூன்றாவது இலக்கமானது மாவட்டத்தைக் குறிக்கிறது.
கடைசி மூன்று இலக்கங்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியைக் கொண்டிருக்கும் தபால் நிலையத்தைக் காட்டுகிறது.
தேசிய தபால் வாரமும் அக்டோபர் 9
முதல் அக்டோபர் 15 வரை கொண்டாடப்படுகிறது.