Science Box questions, Do you know, 10th std - biology

10 ஆம்‌ வகுப்பு
21. உடல்‌ நலம்‌ மற்றும்‌ நோய்கள்‌

1.  பெண்கள்‌ மற்றும்‌ குழந்தைகள்‌ மேம்பாட்டு அமைச்சகம்‌ குழந்தைகளுக்கு எதிரான பாலியல்‌ குற்றங்களிலிருந்து அவர்களைப்‌ பாதுகாப்பதற்காக 2012-இல்‌ போக்சோ
(POCSO- Protection of Children From Sexual Ofences ) சட்டத்தை அறிமுகப்படுத்தியது. பாலியல்‌ நோக்கத்திற்காக குழந்தைகளை கடத்திச்‌ டசல்லும்‌ நபர்களும்‌
இச்சட்டத்தின்‌ கீழ்‌ தண்டனைக்கு உள்ளாகின்றனர்‌

2. போக்சோ சட்டத்தின்‌ குறிக்கோள்கள்‌ - 2012 - பாலியல்‌ தாக்குதல்‌, பாலியல்‌
துன்புறுத்தல்‌ மற்றும்‌ ஆபாசம்‌ போன்ற குற்றங்களிலிருந்து பாதுகாத்தல்‌, இத்தகைய குற்றங்களை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல்‌.

3. குழந்தை உரிமைகள்‌ பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம்‌ (NCPCR) மார்ச்‌ 2007-இல்‌
குழந்தை உரிமைகள்‌ சட்டம்‌ (CPCR) ,2005-ன்‌ கீழ்‌ அமைக்கப்பட்டது. இந்தச்‌ சட்டம்‌ பொதுவுடைமைக்‌ கொள்கை, குழந்தை சட்டங்களை மீற முடியாமை மற்றும்‌ நாட்டில்‌ காணப்படும்‌ குழந்தைகள்‌ தொடர்பான கொள்கைகளின்‌ அவசரத்தை வலியுறுத்துகிறது.

4.  18 வயது வரையிலான அனைத்து குழந்தைகளின்‌ பாதுகாப்புக்கும்‌ சமமான முக்கியத்துவம்‌ உள்ளது. பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள்‌ அதிகமுள்ள குழந்தைகளுக்கு
முன்னுரிமை நடவடிக்கை கொள்கைகளை வரையறுக்கிறது.

5.  மருந்துகளின்‌ தவறான பயன்பாடு மற்றும்‌ சட்டவிரோத கடத்தல்‌ மீதான சர்வதேச நாள்‌ - ஜுன்‌ 26.

6.  1985- ஆம்‌ ஆண்டில்‌ போதையூட்டும்‌ மருந்துகள்‌ மற்றும்‌ மனோவியல் மருந்துகள்‌ சட்டம்‌ அறிமுகப்படுத்தப்பட்டது.

7.  உலக சுகாதார நிறுவனம்‌ (WHO) 1984 மருந்துகளின்‌ போதை (அடிமையாதல்‌) அல்லது மருந்துகளின்‌ தவறான பயன்பாடு என்ற வார்த்தைக்குப்‌ பதிலாக மருந்துகளை
சார்ந்திருத்தல்‌ என்ற வார்த்தையைப்‌ பயன்படுத்த ஆலோசனை வழங்கியுள்ளது.


 8.உலக சுகாதார நிறுவனம்‌ (WHO) 1984  போதை (Drug) என்ற வார்த்தையைப் பயன்படுத்த ஆலோசனை வழங்கியது. WHO வெளியிட்ட உத்திரவின்படி அனைத்து சிகரெட்‌ விளம்பரங்களிலும்‌ மற்றும்‌ அட்டைப்‌ பெட்டிகளிலும்‌ “புகை பிடித்தல்‌ உடல்நலத்திற்குத்‌ தீங்கானது” என்ற சட்டரீதியான எச்சரிக்கை இடம்‌ பெற்றிருக்க வேண்டும்‌

9. புகையிலை எதிர்ப்புச்‌ சட்டம்‌ மே-1 2004-இல்‌ கொண்டு வரப்பட்டது.
 2030-ஆம்‌ ஆண்டில்‌ உலகளவில்‌ ஆண்டுக்கு 10 மில்லியன்‌ அளவில்‌ இறப்பினை ஏற்படுத்துவதற்கான
மிகப்பெரிய ஒற்றைக்‌ காரணியாக புகையிலை திகழும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

10. மே - 31 புகையிலை எதிர்ப்பு நாளாகக்‌ கருதப்படுகிறது. (உலக புகையிலை எதிர்ப்பு நாள்‌)

11. இந்தியாவில்‌ எட்டு பேரில்‌ ஒருவர்‌ நீரிழிவு நோயாளி ஆவார்‌. WHO -வின்‌ திருத்தம்‌ செய்யப்பட்ட புள்ளி விவரப்படி 2025-இல்‌ இந்தியாவில்‌ 57.2. மில்லியன்‌ நீரிழிவு நோயாளிகள்‌ இருக்கலாம்‌ எனக்‌ கணக்கிடப்பட்டுள்ளது. நீரிழிவு நோய்‌ ஏற்படுவதற்கான சராசரி வயது 40 ஆகும்‌.
பிற நாடுகளில்‌ 55 வயதாகும்‌. 2030 -இல்‌ இறப்பை ஏற்படுத்துகின்ற காரணிகளில்‌ நீரிழிவு நோய்‌ 7வதாகத்‌ திகழுமென உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

12. WHO வின்‌ அளவீட்டின்படி உணவுண்ணா நிலையில்‌ இரத்த குளுக்கோஸின்‌ அளவு 140 மிகி/டெசிலி விட அதிகமாகவும்‌ அல்லது சீரற்ற இரத்த குளுக்கோஸ்‌ அளவு 200
மிகி/டெசிலி-ஐ விட அதிகமாகவும்‌ இரண்டு சந்தர்ப்பங்களுக்கு மேல்‌ காணப்பட்டால்‌ டயாபடீலைஸக்‌ கண்டறிந்து உறுதிப்படுத்துதல்‌ அவசியமானதாகும்‌.

13. கரையாத நார்ச்சத்து கொண்ட ஆளி விதைகள்‌, கொய்யா, தக்காளி மற்றும்‌ கீரைகள்‌ இரத்த சர்க்கரை அளவை குறைப்பதில்‌ உதவுகின்றன.

14. அளவுக்கதிகமாக உண்ணுகின்ற ஒவ்வொரு 7 கலோரி உணவிலும்‌ 1கி கொழுப்பு உடலில்‌ சேகரமாகி, உடல்‌ பருமன்‌ அதிகரிக்க வழிவகுக்கிறது. அடிபோஸ்‌ திசுக்களில்‌ அதிகமாக சேரும்‌ கொழுப்பு உடல்‌ எடையை 20% - 25% அளவுக்கு கூட்டுகிறது.
சராசரி உடல்‌ எடையை விட 10% க்கும்‌ அதிகமான எடை கொண்டவர்‌ அதிக எடை உடையோர்‌ மற்றும்‌ 20% க்கும்‌ அதிகமான எடை கொண்டவர்‌ உடல்பருமன்‌ உடையோர்‌
எனப்படுவர்‌.

15. இந்தியர்களின்‌ இரத்தத்தில்‌ இருக்க வேண்டிய விரும்பத்தக்க கொழுப்பின்‌ அளவானது 200 மிகி/டெசிலி ஆகும்‌. இரத்தத்தில்‌ கொழுப்பின்‌ அளவு 200லிருந்து 300 மிகி/டெசிலி ஆக அதிகரிக்கும்‌ போது இதயக்‌ குழல்‌ (கரோனரி இதய நோய்‌) நோய்க்கான ஆபத்தும்‌ அதிகரிக்கிறது.

16. HDL (அதிக அடர்த்தி கொண்ட லிப்போபுரதம்‌) அல்லது நல்ல கொலஸ்ட்ரால்‌ இதய நோய்க்கான ஆபத்தை குறைக்கிறது. மாறாக LDL, (குறை அடர்த்தி கொண்ட
லிப்போபுரதம்‌) இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கிறது.

17. உலக புற்றுநோய்‌ நாள்‌ - பிப்ரவரி 4

18. தேசிய புற்றுநோய்‌ விழிப்புணர்வு நாள்‌ - நவம்பர்‌ 7

19. கட்டிகளின்‌ வகைகள்‌:

●  தீங்கற்ற அல்லது மேலிக்னன்ட்‌ வகை அல்லாத கட்டிகள்‌ உறுப்புகளுக்குள்ளாகவே பாதிப்பை ஏற்படுத்தும்‌. உடலின்‌ மற்ற பாகங்களுக்கு பரவாது

●  மேலிக்னன்ட்‌ கட்டிகள்‌ - பெருக்கமடைந்த செல்‌ குழுக்கள்‌ வேகமாக வளர்ச்சியடைந்து சுற்றியுள்ள இயல்பான திசுக்களில்‌ ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்‌.

20. இந்தியாவின்‌ டாக்டா்‌ சுனிதி சால்மோன்‌ HIV ஆராய்ச்சி மற்றும்‌ சிகிச்சையின்‌ முன்னோடி ஆவார்‌. இவர்‌ சென்னையில்‌ 1980-களில்‌ எய்ட்ஸ்‌ ஆராய்ச்சிக்கான முதல்‌ தன்னார்வ சோதனை மற்றும்‌ ஆலோசனை மையங்களை ஏற்படுத்தினார்‌. இவரது குழுவினர்‌ 1985-இல்‌ இந்தியாவில்‌ முதன்‌ முதலில்‌ HIV தொற்றுக்கான ஆதாரத்தினை ஆவணப்படுத்தினார்கள்‌
(இந்தியாவின்‌ முதல்‌ எய்ட்ஸ்‌ நோயாளி சென்னையைச்‌ சேர்ந்தவர்‌ ஆவார்‌).

21. மக்களில்‌ பலர்‌ எய்ட்ஸ்‌ பற்றிய அறியாமையில்‌ உள்ளனர்‌. இதன்‌ மூலம்‌ நாம்‌ கூறுவது “அறியாமையினால்‌ இறக்கக்‌ கூடாது”. நம்‌ நாட்டில்‌ தேசிய எய்ட்ஸ்‌ கட்டுப்பாட்டு அமைப்பு
(NACO) மற்றும்‌ பிற அரசு சாராத தொண்டு அமைப்புகள்‌ NGO'S) மக்களுக்கு எய்ட்ஸ்‌ பற்றிய கல்வியைப்‌ புகட்டுகின்றன. ஒவ்வொரு வருடமும்‌ டிசம்பர்‌ 1 ஆம்‌ நாள்‌ “உலக எய்ட்ஸ்‌ தினம்‌” ஆக அனுசரிக்கப்படுகிறது.

10 ஆம்‌ வகுப்பு
22. சுற்றுச்சுழல்‌ மேலாண்மை

1. சிப்கோ இயக்கம்‌

◆ 1973 ஆம்‌ ஆண்டில்‌ அகிம்சா வழியில்‌ மரங்களையும்‌ காடுகளையும்‌ பாதுகாப்பதற்காக துவக்கப்பட்ட இயக்கம்‌.

◆ "சிப்கோ" என்னும்‌ வார்த்தைக்கு பொருள்‌ தழுவுதல்‌ என்பதாகும்‌. மரங்களை வெட்ட விடாமல்‌ கிராம மக்கள்‌ அவற்றை வட்டமாக சூழ்ந்துகொண்டு கட்டித்‌
தழுவியபடி நின்றதால்‌ இப்பெயர்‌ அமைந்தது. உத்திரப்பிரதேச (தற்போதையை உத்தரகாண்ட்‌) மாநிலத்தில்‌ உள்ள சாமோலி என்னும்‌ ஊரில்‌ இவ்வியக்கம்‌ தோன்றியது.

◆ இமயமலைப்‌ பகுதிகளில்‌ உள்ள காடுகளை 15 ஆண்டுகள்‌ அழிக்கக்‌ கூடாது என்ற தடை உத்தரவை பெற்று 1980 ஆம்‌ ஆண்டு இவ்வியக்கம்‌ மிகப்பெரும்‌ வெற்றியை அடைந்தது.

2. ஜிம்‌ கார்பெட்‌ தேசியப்‌ பூங்கா, 1936ம்‌ ஆண்டு உத்தரகான்ட்‌ மாநிலத்தில்‌ துவங்கப்பட்ட இந்தியாவின்‌ முதல்‌ கேசியப்‌ பூங்கா

3. இந்தியாவில்‌ தற்போது 15 உயிர்க்கோளக்‌ காப்பகங்கள்‌ உள்ளன.

4. தமிழ்நாட்டிலுள்ள நீலகிரி பகுதி, ஒரு பாதுகாக்கப்பட்ட உயிர்க்கோளக்‌ காப்பக பகுதியாகும்‌.

5. தமிழ்நாட்டில்‌ தேனி மாவட்டம்‌, வெங்கடாச்சலபுரம்‌ என்னும்‌ கிராமத்தைச்‌ சேர்ந்த ராதிகா
ராமசாமி என்பவர்‌ “இந்தியாவின்‌ முதல்‌ பெண்‌ வன உயிரி புகைப்படக்‌ கலைஞர்‌” என்று சர்வதேச அளவில்‌ புகழ்‌ பெற்றுள்ளார்‌. இவர்‌ பறவை இனங்களை புகைப்படம்‌ எடுப்பதில்‌ மிகுந்த ஆர்வம்‌ கொண்டவர்‌. இவரது புகைப்படத்‌ தொகுப்பு “வன
உயிரினங்களின்‌ சிறந்த தருணங்கள்‌” என்னும்‌ தலைப்பில்‌ நவம்பர்‌ 2014ம்‌ ஆண்டு வெளியிடப்பட்டது.

6. இந்தியாவில்‌ மேற்கொள்ளப்பட்ட வன உயிரி பாதுகாப்புக்கான நடவடிக்கைகள்‌

◆  புலிகள்‌ பாதுகாப்பு திட்டம்‌ 1973ம்‌ ஆண்டிலும்‌, யானைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌
1992ம்‌ ஆண்டிலும்‌ துவங்கப்பட்டது.

◆ 1976ம்‌ ஆண்டில்‌ முதலைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது.

◆ 1999ம்‌ ஆண்டில்‌ கடல்‌ ஆமைகள்‌ பாதுகாப்புத்‌ திட்டம்‌ துவங்கப்பட்டது.

◆  அசாம்‌ மாநிலத்திலுள்ள காண்டாமிருகங்களை பாதுகாக்க 'இந்திய காண்டாமிருகங்கள்‌ பாதுகாப்பு 2020' என்னும்‌ திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது.
இதன்‌ மூலம்‌ குறைந்தபட்சம்‌ 3000 ஒற்றைக்‌ கொம்புடைய
காண்டாமிருகங்களையாவது 2020ம்‌ ஆண்டுக்குள்‌ பாதுகாத்திட குறிக்கோள்‌
மேற்கொள்ளப்பட்டூள்ளது.

7. அமெரிக்கா மற்றும்‌ சீனாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில்‌ கச்சா எண்ணெய்‌ பயன்படுத்தும்‌ மூன்றாவது பெரிய நாடு இந்தியாவாகும்‌.

8. தாஜ்மஹால்‌

★  உலகின்‌ ஏழு அதிசயங்களில்‌ ஒன்றான தாஜ்மஹால்‌ உத்தரப்பிரதேச மாநிலம்‌ ஆக்ராவில்‌ உள்ளது.

◆ இது வெண்மை நிற பளிங்குக்‌ கற்களால்‌ கட்டப்பட்டுள்ளது. இந்திய எண்ணெய்‌ நிறுவனத்திற்கு சொந்தமான மதுரா எண்ணெய்‌ சுத்திகரிப்பு ஆலை தாஜ்மஹாலுக்கு அருகில்‌ அமைந்துள்ளது. இதிலிருந்து உற்பத்தியாகும்‌ சல்‌ஃபர்‌ மற்றும்‌ நைட்ரஜன்‌ ஆக்சைடுகள்‌ இப்பகுதியில்‌ உள்ள தாஜ்மஹாலின்‌
வெண்ணிற பளிங்கு கற்களில்‌ மேல்‌ படிந்து அக்கற்களை மஞ்சள்‌ நிறமாக
மாற்றியுள்ளது.

◆  தாஜ்மகாலை சிதைவிலிருந்து பாதுகாக்க தற்போது இந்திய அரசானது
வெளியேற்றும்‌ புகைகளுக்கு குறிப்பிட்ட வரையறை அளவினை விதித்துள்ளது.

9. 100 சரிய வெப்ப ௯டேற்றிகள்‌ மூலம்‌ ஒரு ஆண்டுக்கு 1500 யூனிட்‌ மின்சாரத்தை சேமிக்க முடியும்‌.

10. ஷேல்‌ வாயுக்கள்‌ எடுப்பதற்காக இந்தியாவில்‌ ஆறு பகுதிகள்‌ கண்டறியப்பட்டுள்ளன.
அவை கேம்பே(குஜராத்‌), அஸ்ஸாம்‌ - அரக்கான்‌ (வட கிழக்குப்‌ பகுதி), கோண்ட்வானா (மத்திய இந்தியா), கிருஷ்ணா கோதாவரி (கிழக்கு கடற்கரைப்‌ பகுதி), காவேரி மற்றும்‌
இந்தோ - கங்கைப்‌ வடிநிலப்‌ பகுதி.

11. உலகின்‌ மிக உயரமானதும்‌, மிகப்‌ பெரியதுமான காற்றாலை ஹவாய்‌ பகுதியில்‌ அமைந்துள்ளது.

12. ஒரு காற்றாலையில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ மின்சாரத்தினை 300 வீடுகள்‌ பயன்படுத்த முடியும்‌.

13. 2ம்‌ நூற்றாண்டில்‌(பொ.ஆ) சோழ வம்சத்தைச்‌ சேர்ந்த கரிகால்‌ சோழ மன்னரால்‌ கட்டப்பட்ட கல்லணையானது மிகவும்‌ பழமையானது. இது உலகின்‌ நான்காவது பழமையான அணையாகும்‌. இந்த அணை இன்றும்‌ தமிழக மக்களுக்கு பயன்படும்‌
வகையில்‌ உள்ளது. இவ்வணை திருச்சிராப்பள்ளி நகருக்கு 30 கி.மீ. அருகில்‌, காவிரி ஆற்றின்‌ குறுக்கே கட்டப்பட்டுள்ளது.

14. மின்னணுக்‌ கழிவுகளால்‌ உண்டாகும்‌ பாதிப்புகள்‌

◆  ஈயம்‌: மனிதரில்‌ மைய நரம்பு மண்டலத்தையும்‌ பக்க நரம்பு மண்டலத்தையும்‌ பாதிக்கிறது. குழந்தைகளின்‌ மூளை வளர்ச்சியை பாதிக்கிறது.

◆ குரோமியம்‌: மூச்சுத்திணறல்‌ ஆஸ்துமா

◆ கேட்மியம்‌: சிறுநீரகம்‌ மற்றும்‌ கல்லீரலில்‌ படிந்து அதன்‌ பணிகளை பாதிக்கிறது. நரம்புகளை பாதிக்கின்றது.

◆ பாதரசம்‌: மூளை மற்றும்‌ சுவாச மண்டலத்தை பாதிக்கிறது.

◆  பாலிவினைல்‌ குளோரைடு (PVC) உள்ளிட்ட நெகிழிகள்‌: நெகிழிகளை
எரிப்பதால்‌ உண்டாகும் டையாக்சின்கள்‌ இனப்பெருக்க மண்டலத்தின்‌
வளர்ச்சியையும்‌, பணியையும்‌ பாதிக்கிறது.

15. மின்னணுக்‌ கழிவுகள்‌ கீழ்க்கண்டவற்றை உள்ளடக்கியது.

★ கணினிப்‌ பொருட்கள்‌ - 66%
★  தொலைத்‌ தொடர்பு சாதனங்கள்‌ - 12%
★  மின்னணு சாதனங்கள்‌ - 5%
★  உயிரி மருத்துவ சாதனங்கள்‌- 7%
★  பிற சாதனங்கள்‌! உபகரணங்கள்‌ - 6%


Next Post Previous Post