Search This Blog

Science Box questions, Do you know, 10th std - biology

10 ஆம்‌ வகுப்பு
18. மரபியல்‌

1. புன்னட்‌ கட்டம்‌ என்பது RC. புன்னட்டால்‌ உருவாக்கப்பட்ட சோதனைப்‌ பலகை ஆகும்‌.
மரபியல்‌ கலப்பில்‌ ஜீனோடைப்‌ எவ்வாறு உருவாகிறது என்பதைத்‌ தெரிந்து கொள்ளும்‌ ஒரு வரைபட முறையாகும்‌.

2. மரபியலின்‌ குரோமோசோம்களின்‌ பங்கு பற்றிய கண்டுபிடிப்பிற்கான நோபல்‌ பரிசு 1993 ஆம்‌ ஆண்டு T.H  மோர்கனுக்கு வழங்கப்பட்டது.

3. டீலோமியர்கள்‌ ஒவ்வொரு செல்லின்‌ முதுமையை உண்த்தும்‌ கடிகாரங்களகாகச்‌ செயல்படுகின்றன.

◆  மலோமியர்கள்‌, குரோமோசோம்களில்‌ காணப்படும்‌ பாதுகாப்பு நியூக்ளியோடைட்‌
தொடர்வரிசை ஆகும்‌. ஒவ்வொரு முறை செல்‌ பகுப்படையும்‌ போது அவை
குறுகல்‌ அடைகின்றன. டீலோமியர்கள்‌ மிகவும்‌ குறுகி, தங்கள்‌ வேலையைச்‌
செய்ய முடியாத போது, செல்கள்‌ முதுமையடைய காரணமாகின்றன.

4. டி.என்‌.ஏ நைட்ரஜன்‌ காரம்‌ இணைவுறுதலுக்கான சார்காப்‌ விதி:

எர்வின்‌ சார்காஃப்‌ கூற்றுப்படி, டி.என்‌.ஏ வில்‌ எப்பொழுதும்‌ அடினைனின்‌ விகிதமும்‌ தைமினின்‌ விகிதமும்‌ சமமாக உள்ளன. மேலும்‌, குவானைனின்‌ விகிதமும்‌ சைட்டோசினின்‌ விகிதமும்‌ எப்பொழுதும்‌ சமமாக உள்ளன.

5. ஒற்றை ஜீனில்‌ ஏற்படும்‌ தீடீர்‌ மாற்றத்தால்‌ கதிர்‌ அரிவாள்‌ இரத்த சோகை நோய்‌ ஏற்படுகிறது. இந்த ஜீனில்‌ ஏற்படும்‌ மாற்றம்‌, ஹீமோகுளோபின்‌ மூலக்கூறில்‌ உள்ள புரதப்‌ பகுதியின்‌ அமைப்பில்‌ மாற்றத்தை ஏற்படுத்துகிறது. புரத மூலக்கூறில்‌ ஏற்பட்ட  மாற்றத்தினால்‌, இந்த ஹீமோகுளோபினைக்‌ கொண்டுள்ள சிவப்பு இரத்த செல்கள்‌ கதிர்‌ அரிவாள்‌ வடிவத்தைப்‌ பெறுகின்றன.

10 ஆம்‌ வகுப்பு
19. உயிரின்‌ தோற்றமும்‌ பரிணாமமும்‌

1. சடுதி மாற்றம்‌ மற்றும்‌ வேறுபாடுகளுக்கு இடையேயான தொடர்பு பரிணாமம்‌ என்பது சடுதிமாற்றம்‌ மற்றும்‌ வேறுபாடுகள்‌ ஆகிய இரண்டு நிகழ்வுகளை
உள்ளடக்கியது DNA  இரட்டிப்பாதலின்‌ போது ஏற்படும்‌ பிழைகள்‌ அல்லது U கதிர்கள்‌ அல்லது வேதிப்பொருட்களோடு தொடர்புக்கொள்ளும்‌ போது சடுதி மாற்றம்‌ ஏற்படுகிறது.

2. சடுதிமாற்றம்‌ வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு உயிரியில்‌ மாற்றங்களை இது ஏற்படுத்துகிறது

3. வாழும்‌ தொல்‌ உயிரிப்‌ படிவங்கள்‌ (மண்டியில்‌ - இவை தற்போது உயிருள்ளவை. இவை படிவமாக மாறிய முன்னோரைப்‌ போன்ற தோற்றத்தை ஒத்திருப்பதால்‌ இவற்றை வாழும்தொல்‌ உயிரிப்‌ படிவங்கள்‌ என்கிறோம்‌. எ.கா. ஜிங்கோ பைலோபா

4. புவி அமைப்புக்‌ கால அளவை என்பது, பாறை அடுக்குகளின்‌ அமைப்பினைக்‌ கால வரிசைப்படி அறிந்து கொள்ளும்‌ முறை ஆகும்‌. இதன்‌ மூலம்‌ புவி அமைப்பு வல்லுநர்கள்‌, தொல்பொருள்‌ ஆய்வாளர்கள்‌ மற்றும்‌ புவி சார்‌ அறிஞர்கள்‌ புவியின்‌ வரலாற்றினைக்‌
காலத்தோடும்‌ நிகழ்வுகளின்‌ தொடர்போடும்‌ இணைத்து விளக்குகின்றனர்‌.

5. திருவக்கரை (விழுப்புரம்‌ மாவட்டம்‌, தமிழ்நாடு) கல்மரப்‌ படிவப்‌ பூங்கா இரண்டாயிரம்‌ மில்லியன்‌ ஆண்டுகளுக்கு முன்பு தாவரத்‌ தண்டுப்‌ பகுதியானது ஆற்றங்கரையில்‌
மண்ணில்‌ புதையுண்டு காலப்போக்கில்‌ அதிலுள்ள கரிமப்‌ பொருள்கள்‌ சிலிகாவினால்‌
நிரப்பப்பட்டுப்‌ படிவமாகியுள்ளது. கல்மரமான பின்பும்‌ இத்தாவரங்கள்‌ முந்தைய நிறம்‌, வடிவம்‌ வரித்‌ தன்மை முதலானவற்றைத்‌ தக்க வைத்துக்‌ கொண்டுள்ளன. ஆண்டு வளையம்‌, நிறங்களின்‌ அடுக்கு, கணுப்‌ பகுதிகள்‌ போன்ற அனைத்துப்‌ பண்புகளும்‌ கல்மரமான பிறகும்‌ புலப்படும்‌ வகையில்‌ அமைந்துள்ளன.

6. நாசா 2020 இல்‌ வான்‌ உயிரியல்‌ என்னும்‌ திட்டத்தை உருவாக்கி அதன்‌ மூலம்‌ செவ்வாயின்‌ பழமையான சூழல்‌ குறித்தும்‌ செவ்வாயின்‌ மேற்புறப்‌ புவி அமைப்புக்‌ குறித்தும்‌ செவ்வாயில்‌ உயிரிகள்‌ இருந்தனவா என்பது குறித்தும்‌ அவ்வாறு உயிரிகள்‌
இருந்தால்‌ அவற்றைப்‌ பாதுகாப்பது குறித்தும்‌ ஆய்வு செய்து வருகிறது.

10 ஆம்‌ வகுப்பு
20. இனக்கலப்பு மற்றும்‌ உயிர்தொழில்நுட்பவியல்‌

1. டாக்டர்‌ மா.சா. சுவாமிநாதன்‌

◆ இந்திய பசுமைப்புரட்சியில்‌ முன்னணிப்‌ பங்கு வகித்தவர்‌, இந்திய விஞ்ஞானியான
டாக்டர்‌. மான்கொம்பு சாம்பசிவன்‌ சுவாமிநாதன்‌ ஆவார்‌. உருளைக்‌ கிழங்கு, கோதுமை, நெல்‌ மற்றும்‌ சணல்‌ ஆகிய பயிர்களில்‌ அவர்‌ மேற்கொண்ட பயிர்ப்பெருக்க ஆய்வுகள்‌ மிகவும்‌ புகழ்பெற்றவையாகும்‌.

◆  அவரது பெரும்‌ முயற்கிளால்‌ 1960 ஆம்‌ ஆண்டில்‌ 12 மில்லியன்‌ டன்னாக இருந்த கோதுமை உற்பத்தி, தற்போது 70 மில்லியன்‌ டன்னாக உயர்ந்துள்ளது. எனவே இவர்‌ ” இந்திய பசுமைப்புரட்சியின்‌ தந்தை” என பொருத்தமாக
அழைக்கப்படுகிறார்‌.

2. டாக்டா்‌. கோ. நம்மாழ்வார்‌:

டாக்டர்‌. கோ. நம்மாழ்வார்‌ (1938-2013) ஒரு தமிழ்‌ விவசாய விஞ்ஞானி, சுற்றுச்‌ சூழல்‌ ஆர்வலர்‌ மற்றும்‌ இயற்கை வேளாண்‌ வல்லுநர்‌ ஆவார்‌. இவர்‌ “வானகம்‌- நம்மாழ்வார்‌ உயிர்‌ கழல்‌ நடுவம்‌, உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்‌” என்ற அறக்கட்டளைளை உருவாக்கி, அதன்‌ மூலம்‌ இயற்கை வேளாண்மையின்‌ பயன்கள்‌ பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே உருவாக்கினார்‌.

3. காமாத்‌ தோட்டம்‌

காமாத்‌ தோட்டம்‌ அல்லது அணுப்‌ பூங்கா என்பது இரண்டாம்‌ உலகப்‌ போருக்கு பிறகு அணு சக்தி ஆற்றலை பயிர்‌ முன்னேற்றத்திற்காகப்‌ பயன்படுத்தும்‌ ஒரு பிரபலமான கருத்தாக்கம்‌ ஆகும்‌. இது ஒரு தூண்டப்பட்ட சடுதிமாற்ற
பயிர்ப்பெருக்க முறையாகும்‌. இதில்‌ கோபால்ட்‌ - 60 அல்லது சீசியம்‌ - 137 இல்‌
இருந்து காமாக்கதிர்கள்‌ பயிர்‌ தாவரங்களில்‌ விரும்பத்தக்க சடுதி மாற்றங்களைத்‌ தூண்டுவதற்குப்‌ பயன்படுத்தப்பட்டன.

4. பறவைகளில்‌ குறுக்குக்‌ கலப்பு

வெள்ளை லெக்ஹான்‌ x பிளைமெளத்‌ ராக்‌ -----> அதிக முட்டைகளை உற்பத்தி செய்யும்‌ கலப்பினக்‌ கோழி இனம்‌

5. பசுக்களின்‌ குறுக்குக்‌ கலப்பு

◆ அயல்‌ இனக்‌ காளைகள்‌ மற்றும்‌ உள்நாட்டு பசு ஆகியவற்றிற்கிடையே நடைபெறும்‌ கலப்பு

◆ பிரவுன்‌ ஸ்விஸ்‌ x சாகிவால்‌ --------> கரன்‌ ஸ்விஸ்‌ - உள்நாட்டு பசுக்களை விட 2 முதல்‌ 3 மடங்கு அதிகமாக பால்‌ உற்பத்தி செய்பவை.

6. பிளாஸ்மிடு என்பது பாக்டீரிய செல்லின்‌ சைட்டோபிளாசத்தில்‌ காணப்படும்‌, குரோமோசோம்‌
சாராத, சிறிய, வட்ட வடிவ, இரண்டு இழைகளான டி.என்‌.ஏ ஆகும்‌. இது குரோமோசோம்‌ டி.என்‌.ஏவிலிருந்து வேறுபட்டது. இது தன்னிச்சையாக இரட்டிப்படையும்‌ திறனுடையது.

7.  ரெஸ்ட்ரிக்ஸன்‌ நொதி டி.என்‌.ஏ வில்‌ குறிப்பிட்ட இடத்தில்‌ காணப்படும்‌ குறிப்பிட்ட கார வரிசையை (பேலின்ட்ரோம்‌ வரிசை) அடையாளம்‌ கண்டு, அவ்விடத்தில்‌ உள்ள
பாஸ்போடைஎஸ்டர்‌ பிணைப்புகளைத்‌ துண்டிப்பதன்‌ மூலம்‌ டி.என்‌.ஏ-வைத்‌ துண்டிக்கிறது.

8.  டாலி உருவாக்கம்‌

1996 ஆம்‌ ஆண்டு ஜுலை மாதம்‌ ஸ்காட்லாந்து நாட்டு ரோசலின்‌ நிறுவனத்தினைச்‌ சார்ந்த டாக்டர்‌. அயான்‌ வில்மட்‌ மற்றும்‌ அவரது குழுவினரும்‌ இணைந்து டாலி என்ற குளோனிங்‌ முறையிலான பெண்‌ செம்மறி ஆட்டுக்குட்டியினை முதன்முதலில்‌உருவாக்கினார்‌. இந்த ஆட்டுக்குட்டி உடல செல்‌ உட்கரு மாற்றிப்‌ பொருத்துதல்‌
முறையில்‌ உருவாக்கப்பட்டதாகும்‌. ஆறரை ஆண்டுகள்‌ உயிர்‌ வாழ்ந்த இந்த ஆட்டுக்குட்டி நுரையீரல்‌ நோயினால்‌ 2003 ஆம்‌ ஆண்டு இறந்தது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url