Science Box questions, Do you know, 9th std unit - 7. விலங்குலகம்‌ - உயிரிகளின்‌ பல்வகைமை

9 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
7. விலங்குலகம்‌ - உயிரிகளின்‌ பல்வகைமை

1. டியூடிரரோஸ்டோம்‌ மற்றும்‌ புரோட்டோஸ்டோம்‌: கரு வளர்ச்சியின்‌ போது, டியூடிரோஸ்டோம்களில்‌ உருவாகும்‌ முதல்‌ துளை அல்லது பிளாஸ்டோபோர்‌
மலத்துளையாகிறது. ஆனால்‌, புரோட்டோஸ்டோம்களில்‌ உருவாகும்‌ முதல்‌ துளை அல்லது பிளாஸ்டோபோர்‌ வாயாகிறது.

2. நிலா ஜெல்லி மீன்‌ ( Moon jelly fish) கரங்களை இழந்தால்‌ மீதமுள்ள கரங்களைப்‌ பயன்படுத்தி ஆரச்சமச்சீர்‌ நிலையில்‌ உடலைச்‌ சுற்றி அமைத்துக்‌ கொள்கின்றன. இதனால்‌ இவை வேகமாக நீந்திச்‌ செல்கின்றன.

3. ஒட்டுண்ணி புரோட்டோசோவாக்கள்‌

●  சுகாதாரமற்ற உணவு மற்றும்‌ நீரின்‌ மூலமாகப்‌ பரவும்‌ எண்டமீபா ஹிஸ்டோலிடிகா என்னும்‌ புரோட்டோசோவா அமீபிக்‌ சீதபேதி எனும்‌ நோயை தோற்றுவிக்கிறது.


◆ தொற்று கொண்ட பெண்‌ அனாபிலஸ்‌ கொசுக்களின்‌ மூலமாக பிளாஸ்மோடியம்‌ என்னும்‌ புரோட்டோசோவா மலேரியா நோயை தோற்றுவிக்கிறது.

4. முதிர்ந்த நாடாப்புழுக்களால்‌ பாஜாட்டிகளில்‌ ஏற்படும்‌ தொற்றுநிலை டீனியாசிஸ்‌ எனப்படும்‌. இது சரியாக சமைக்கப்படாத பன்றியிறைச்சியினை உண்ணுவதால்‌ ஏற்படுகிறது.

5.  இந்தியாவில்‌ குடற்புழு நீக்க விழிப்புணர்வு நாளாக பிப்ரவரி 10 கொண்டாடப்படுகிறது.

6. யானைக்கால்‌ நோயானது உச்சேரிரியா பான்கிராப்டியினால்‌ ஏற்படும்‌. இதனால்‌ கால்கள்‌,
வயிறு தொடைசேருமிடம்‌, சில நேரங்களில்‌ மார்பகம்‌ ஆகிய இடங்களில்‌ வீக்கம்‌
ஏற்படுகிறது. இந்நிலை அதிகமான நிணநீர்‌ சேர்க்கையினால்‌ ஏற்படுகிறது.

7. கோபிபோடுகள்‌ என்பவை சிறிய கிரஸ்டேஷியன்கள்‌ (இறால்‌ போன்றவை), கடலில்‌
வாழ்பவை. நாம்‌ அறிந்த உயிரினங்களில்‌ ஒரு கண்ணை மட்டும்‌ உடைய ஒரே உயிரினம்‌
இதுவே ஆகும்‌.

8.  பூரான்‌:

  உலகம்‌ முழுவதும்‌ காணப்படும்‌ இவைகளில்‌ 2,800 சிற்றினங்கள்‌
காணப்படுகின்றன. மிகப்பெரிய பூரான்கள்‌ 30 செமீ(12 அங்குலம்‌) நீளம்‌ அளவுடையவை. மழைக்காடுகளில்‌ அதிக நாட்கள்‌ வாழ்கின்றன. சென்டிபீட்‌ என்றால்‌ “நூறு காலிகள்‌” என்ற பொருள்‌. ஆனால்‌ பெரும்பாலான வகைகள்‌ 30 இணைக்கால்கள்‌ மட்டுமே பெற்றுள்ளன.

9.   மரவட்டை

◆  இவற்றில்‌ 8,000 சிற்றினங்கள்‌ காணப்படுகின்றன.

◆ ஆயிரம்‌ கால்கள்‌ எனப்படும்‌ இவை நூறுக்கால்களை (Millipede thousand legs) மட்டுமே பெற்றுள்ளன. பெரிய மரவட்டைகள்‌ 750 இணைக்‌ கால்கள்‌ வரை பெற்றுள்ளன. பைலி மரவட்டைகள்‌ மரப்பேன்களைப்‌ போன்று ஒத்துக்‌ காணப்பட்டாலும்‌ இவை அதிகக்‌ கால்களைப்‌ பெற்றுள்ளன.

10. உணர்ச்சி, ஆளுமை, அறிவாற்றல்‌. தன்விழிப்புணர்வு தனித்தன்மை மற்றும்‌ மனிதர்களுடன்‌ தொடர்புகொள்வது போன்ற பண்புகளைக்‌ கொண்ட ஒரே முதுகுநாண்‌ அற்ற உயிரி
ஆக்டோபஸ்‌ ஆகும்‌.

11. முத்துவளர்ப்பு - முத்துச்சிப்பிகள்‌ முத்தை உருவாக்குகின்றன. முத்து அரிதாகக்‌ கிடைக்கக்‌ கூடிய விலை மதிப்புள்ள நவரத்தினங்களுள்‌ ஒன்றாகும்‌. இது ஆபரணங்கள்‌
செய்வதற்கு உதவுகிறது.

12. உலர்த்தப்பட்ட நட்சத்திர மீன்‌ மற்றும்‌ கடல்‌ குப்பி அலங்காரப்‌ பொருள்கள்‌ தயாரிக்கப்‌ பயன்படுத்தப்படுகின்றன. கடல்‌ வெள்ளரி வெளிநாடுகளில்‌ மிக விலை உயர்ந்த உணவாக பயன்படுத்தப்படுகிறது.

13. மிகச்‌ சிறிய முதுகெலும்பிலான பிலிப்பைன்‌ கோபி / குட்டை பிக்யி கோபி வெப்ப மண்டலப்‌ பகுதியில்‌ வாழும்‌ மீனினம்‌. இவை தென்‌ கிழக்காசியாவின்‌ சதுப்பு நிலங்கள்‌ மற்றும்‌ உப்பு நீரகளில்‌ காணப்படுகின்றன. இது 10 மி.மீ நீளம்‌ மட்டுமே கொண்டது.

14. முதுகெலும்புடைய விலங்குகளில்‌ 35 மீட்டர்‌ நீளமும்‌ 120 டன்‌ எடையும்‌ கொண்ட ராட்சத நீலத்‌ திமிங்கிலம்‌ மிகப்‌ பெரிய விலங்காகும்‌.

15.உலகளவில்‌ பரவிக்‌ காணப்படக்கூடிய செயில்‌ மீனானது சிறுத்தையை விட வேகமாக நீந்தக்‌ கூடியது. இந்த மீனானது ஒரு மணிநேரத்தில்‌ 109 கி.மீ (68 மைல்கள்‌) நீந்தக்‌ கூடியது.

16. சிறுத்தையானது ஒரு மணிநேரத்தில்‌ 100 கி.மீ (62 மைல்கள்‌) செல்லக்‌ கூடியது.

17. நீலப்‌ புரட்சி என்பது குறிப்பிடத்தக்க அளவில்‌ கடல்‌ வாழ்‌ உயிரிகளான மீன்கள்‌ மற்றும்‌ இறால்‌ போன்றவற்றை இலாபநோக்கில்‌ வளர்ப்பதாகும்‌. நீர்வாழ்‌ உயிரிகள்‌ வளர்க்கும்‌
முறைக்கு நீர்‌ வாழ்‌ உயிரி வளர்ப்பு என்று பெயர்‌.

18. பறக்கும்‌ மீன்‌ - எக்ஸோசீட்டஸ்‌

19. சீனாவின்‌ ராட்சத சாலமான்டர்‌ ஆன்டிரியஸ்‌ டாவிடியன்ஸ்‌ உலகிலேயே மிகப்பெரிய இருவாழ்வி. இது ஐந்து அடி மற்றும்‌ பதினொரு அங்குல நீளமும்‌ 65 கிலோ எடையும்‌ உடையது. இது மத்திய மற்றும்‌ தெற்கு சீனாவில்‌ காணப்படுகின்றன.

20. கியூபாவில்‌ காணப்படும்‌ அம்பு நச்சுத்‌ தவளை 85 - 12.3 மி.மீ நீளம்‌ உடையது. இது உலகின்‌ மிகச்‌ சிறிய இருவாழ்வியாகும்‌.

21.டைமெட்ரோடான்‌ என்பது பாலூட்டி போன்ற ஊர்வன, இதன்‌ முதுகில்‌ நத்தை போன்ற அமைப்பு உள்ளது. இது குளிர்விப்பான்‌ போன்று செயல்பட்டு உடலை குளிர்விக்கிறது.

22. ஆர்கியோப்டெரிக்ஸ்‌ என்பது முதல்‌ பறவையாகும்‌. இதன்‌ உடல்‌ இறகுகளால்‌ மூடப்பட்டுள்ளது. அலகு இல்லை ஆனால்‌ இவற்றில்‌ பற்கள்‌ காணப்படுகிறது.

23. தமிழ்நாட்டில்‌ மாநில பறவை - மரகத புறா (chalcophaps indica)

24. மிகப்பெரிய சிறகு பரப்பளவு உள்ள பறவை - அல்பட்ராஸ்‌ என்ற பறவையின்‌ சிறகு மிகப்பெரிய பரப்பளவு கொண்டவை (3மீட்டர்‌). சிறகு நீட்சியின்‌ நீளம்‌ 11.2 அடி ஆகும்‌.

25. அமெரிக்கன்‌ கோல்டன்‌ பிளோவர்‌, புளுவியலிஸ்‌ டோமினிக்கா வலசை போதலின்‌ போது மிக நீண்ட தூரத்தைக்‌ கடக்கிறது. அலாஸ்கா மற்றும்‌ ஆர்க்டிக்‌ பகுதிகளில்‌ இது இனப்பெருக்கம்‌ செய்கிறது. இலையுதிர்‌ காலத்தில்‌ இது தென்‌ அமெரிக்காவை நோக்கி
பறந்து சென்று நியூசிலாந்தை அடைய ஆறு மாதத்திற்கு மேலாகிறது. இவை 24,000 - 27,000 கி.மீ வரை பறக்கின்றன.

26. துன்னெலி ஓரிரவில்‌ 300 அடி சுரங்கத்தினை தோண்டுகிறது.

27. பழந்தின்னி வெளவால்‌
●  வெளவால்களில்‌ மிகப்‌ பெரியது பழந்தின்னி வெளவால்‌ ஆகும்‌. 

● இவற்றில்‌ சில வகை ஜாவாத்‌ தீவுகளில்‌ காணப்படுகின்றன.

 ● இதன்‌ சிறகு பரப்பளவு 1.76 மீட்டர்‌ மற்றும்‌ 42 செ.மீ நீளமுடையது. 

● மிகச்‌ சிறிய வெளவால்‌ தாய்லாந்தில்‌ வாழ்கிறது.

● இது இரண்டு கிராம்‌ எடையும்‌, 3.3 செ.மீ குறைவான நீளம்‌ உடையது.





Next Post Previous Post