Search This Blog

Science Box questions, Do you know, 9th std unit - 5. அணு அமைப்பு


9 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
5. அணு அமைப்பு



1.  கி.மு. ஆறாம்‌ நூற்றாண்டில்‌ வாழ்ந்த இந்திய தத்துவஞானி, கனடா என்பவர்‌ இந்த பிரபஞ்சத்தல்‌ உள்ள அனைத்தும்‌ “பரமணு” என்ற சிறிய துகள்களால்‌ ஆனது என்ற
கொள்கையை வெளியிட்டார்‌.

2. கி.மு. நான்காம்‌ நூற்றாண்டில்‌ கிரேக்க தத்துவஞானிகள்‌ “லியூசிப்பஸ்‌” மற்றும்‌
“டெமகிரிடஸ்‌” என்பவர்‌ இந்த பிரபஞ்சமானது அணு என்ற மிகச்சிறிய துகள்களால்‌
ஆனது என்ற கருத்தை வெளியிட்டனர்‌.

3. பழங்கால இந்திய தத்துவஞானிகள்‌, இந்த பிரபஞ்சமானது ஐம்பெரும்‌ அடிப்படை கூறுகளான காற்று, நீ, நெருப்பு, நிலம்‌ மற்றும்‌ ஆகாயத்தால்‌ ஆனது என்று கூறினார்‌.

4. கிரேக்க தத்துவஞானி “பிளாட்டோ” இந்த பிரபஞ்சமானது மண்‌, காற்று, நீர்‌ மற்றும்‌ நெருப்பு போன்ற நான்கு ௯றுகளால்‌ ஆனது என்று விவாதித்தார்‌.

5. நவீன அணுக்கொள்கையை முன்மொழிந்தவர்‌ - ஜான்‌ டால்டன்‌

6. ஆல்‌ஃபா மற்றும்‌ பீட்டா கதிர்கள்‌ உண்மையான பருப்பொருள்களால்‌ ஆனவை.

7.  γ - கதிர்கள்‌ மின்காந்த அலைகள்‌ ஆகும்‌.

8. ஆல்பா துகள்கள்‌ இரண்டு புரோட்டான்‌ மற்றும்‌ இரண்டு நியூட்ரான்௧களால்‌ ஆனது.

9. ஆல்பா துகளானது நேர்மின்‌ அயனியை கொண்டுள்ளதால்‌ நிறையில்‌ ஹீலியம்‌ அணுவுடன்‌
ஒத்துள்ளது

10. பீட்டா துகள்கள்‌ எதிர்மின்‌ அயனியை கொண்டுள்ளதால்‌ எலக்ட்ரானை ஒத்துள்ளது

11. காமா கதிர்கள்‌ மின்சுமையற்றவை. அதாவது நடுநிலைமைக்‌ கதிர்கள்‌ ஆகும்‌.

12. ஒரு அணு எவ்வளவு பெரியது? மிகச்‌ சிறியது. ஒரு சராசரி அணு 0.00000001 மீட்டர்‌
அளவுடையது. ஒரு மில்லி மீட்டரில்‌ மில்லியனில்‌ ஒரு பங்கு. ஒரு பலூனை ஊதினார்‌
அது உள்ளே எதுவும்‌ இல்லாதது போலும்‌ எடையற்றது போலும்‌ தோன்றும்‌ ஆனால்‌ அதில்‌ ஏறத்தாழ காற்றிலுள்ள வாயுக்களை உருவாக்கும்‌ 100 பில்லியன்‌ பில்லியன்‌
அணுக்கள்‌ உள்ளன.

13.அணுக்கரு இயற்பியலின்‌ தந்தை என அழைக்கப்படுபவர்‌ - ரூதர்‌ஃபோர்டு

14. ரூதர்‌ஃபோர்டு 1908 ஆம்‌ ஆண்டு நோபல்‌ பரிசு பெற்றார்‌

15. ரூதர்‌ஃபோர்டு 1934 ஆம்‌ ஆண்டு முதன்‌ முதலில்‌ டிரிடியத்தைக்‌ கண்டுபிடித்தார்‌

16. நீல்ஸ்போர்‌ அக்டோபர்‌ 7, 1885 அன்று டென்மார்க்கில்‌ உள்ள கோபன்‌ ஹேகனில்‌ பிறந்தார்‌.1922 இல்‌ இயற்பியலில்‌ நோபல்‌ பரிசு பெற்றார்‌.

17.  1920-ஆம்‌ ஆண்டு அணு உட்கருவில்‌ நடுநிலைத்தன்மை உடைய துகள்‌ ஒன்று உள்ளது
என ரூதா்போர்டு தீர்மானித்தார்‌. ஜேம்ஸ்‌ சாட்விக்‌ நியூட்ரானை கண்டறிந்தார்‌. இவர்‌
ரூதர்போர்டின்‌ மாணவன்‌.

18. புரோட்டான்களையும்‌ நியூட்ரான்களையும்‌ இணைக்கும்‌ விசையானது ஈர்ப்பு விசையைக்‌
காட்டிலும்‌ மிகவும்‌ வலிமையானது.

19. அணுவின்‌ அடிப்படைத்‌ துகள்களான புரோட்டான்கள்‌, நியூட்ரான்கள்‌, எலக்ட்ரான்கள்‌
நீங்கலாக, அணுவின்‌ உட்கருவில்‌ பிற அடிப்படைத்‌ துகள்களாவன: மெசான்கள்‌,
நியூட்ரினோக்கள்‌, ஆன்டி நியூட்ரினோக்கள்‌, பாசிட்ரான்கள்‌.

20. அணு எண்‌ Z வடிவத்தில்‌ ஏன்‌ வடிவமைக்கப்பட்டுள்ளது?

●  Z என்றால்‌ ஸ்ஸாஃல்‌ zahl ஜெர்மானிய மொழியில்‌ 'எண்‌' என்று பொருள்‌.
●  Z என்பதை அணுஸ்ஸாஃஃல்‌ (Atom Zahl) அல்லது அணு எண்‌ என்று அழைக்கலாம்‌.
●  'A' என்கின்ற குறியீடு M (ஜர்மானிய மொழியில்‌ மாசென்ஸ்ஸால்‌
(Massenzhal) என்கின்ற குறியீட்டுக்குப்‌ பதிலாக, ACS வழிமுறையில்‌,
அறிமுகம்‌ செய்யப்பட்டுள்ளது.

21. குளோரின்‌ கடல்‌ நீரிலிருந்து பெறப்படுகிறது. அதன்‌ அணுநிறை ஏன்‌ பின்னமாக உள்ளது?

◆ ஐசோடோப்புகள்‌ குளோரினில்‌ காணப்படுவதே இதற்குக்‌ காரணமாகும்‌. ஓர்‌ அணுவிற்கு பின்ன அணுநிறை காணப்படலாம்‌(ஓப்பு அணுநிறை)

◆ எடுத்துக்காட்டாக: குளோரினில்‌ பின்ன அணுநிறை காணப்படுகிறது. குளோரின்‌ - 35, 75% காணப்படுகிறது. குளோரின்‌ -37,25% காணப்படுகிறது.

◆ 35×75/100 +37×25/100 = 355 amu

◆ குளோரினின்‌ பின்ன அணுநிறை ((75 /100× 35)) +(25/100)× 37)- 35.5 amu

22. மின்னல்‌ அணுக்கரு வினையில்‌ ஈடுபட்டு அரிய அணு ஐசோடோப்புகளை
உருவாக்குகிறது.

23. கட்டை விரல்‌ விதியைப்‌ பயன்படுத்தி t என்பது மேலே எனவும்‌ b என்பது கீழே எனவும்‌
கொள்வோம்‌.

● ஐசோடோப்புகள்‌: மேலே உள்ள நிறை எண்‌ மாறியிருத்தல்‌.

● ஐசோபார்கள்‌: கீழே உள்ள அணு எண்‌ மாறியிருத்தல்‌.

24. அணுக்கள்‌ மிக நுண்ணிய நிறை எண்களைப்‌ பெற்றுள்ளதால்‌ அவற்றை கிராமில்‌ அளவிட முடியாது. அவை amu (அணு நிறை அலகு) என்று அளவிடப்படுகிறது.
நானோமீட்டர்‌ என்று அளவிடப்படுகிறது. (anm =10 ⁻⁹m)

25. அணுக்கள்‌ மிகவும்‌ நுண்ணிய பொருளாக உள்ளதால்‌ அவற்றைப்‌ பார்ப்பதற்கு ஸ்கேனிங்‌
எலக்ட்ரான்‌ மைக்ரோஸ்கோப்‌ மூலம்‌ பார்வையிடப்படுகிறது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url