Science Box questions, Do you know, 9th STD - term -I 3. ஒளி
9 ஆம் வகுப்பு - முதல் பருவம்
3. ஒளி
1. எதிரொளிப்பு விதிகள்
◆ படுகதிர், எதிரொளிப்பு கதிர் மற்றும் படுபுள்ளிக்கு வரையப்படும் குத்துக்கோடு ஆகிய இம்மூன்றும் ஒர தளத்தில் அமையும்.
◆ படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் சமம்.
2. போக்குவரத்துப் பாதுகாப்பு கருவியாக பொது சாலைகளில் குவியாடிகள் பொருத்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். மலைப்பாதைகளில் காணப்படும் குறுகிய
சாலைகளின் கூர்ந்த வளைவுகளில் முன்னே வரும் வாகனங்களைக் காண இயலாத
இடங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன அங்காடிகளில் ஆளில்லாப் பகுதிகளைக்
கண்காணிக்கவும் இவை பயன்படுகின்றன.
3. வாகனங்களின் பின்னோக்குத் கண்ணாடிகளில் எழுதப்பட்டுள்ள பின்வரும் சொற்றொடரைக்
கண்டதுண்டா? - “objects in the mirror are closer than they appear" (ஆடியில் பிம்பம்
தோன்றும் தொலைவை விட பொருள்கள் மிக அருகில் உள்ளன)
4. இந்தியாவைச் சேர்ந்த நரிந்தர் கபானி என்ற இயற்பியலாளர் இழை ஒளியியலின் தந்தை
என அழைக்கப்படுவது நமக்கெல்லாம் பெருமையே. இவர் ஒளியியல் இழைகளைப்
பயன்படுத்தி ஒளிப்படங்களை அனுப்பவும் நல்ல தரமான முறையில் அவற்றைப் பெறவும்
செய்து சாதனைப் புரிந்தார். மேலும், கபானியின் ஆய்வுகள் இன்றைய கால கட்டத்தில்
லேசர், உயிரி மருத்துவக் கருவிகள், சூரிய ஆற்றல், மாசு நெறிசெய் தொழில்நுட்பம்
ஆகியவற்றில் உதவுகின்றன. மேலும் 'இழை ஒளியியல்' என்ற பெயர் உருவாகக்
காரணமாக இருந்தவரும் இவரே ஆவார்.