Search This Blog

Science Box questions, Do you know, 9 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌ பாடம் 4. நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருட்கள்‌

9 ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
4. நம்மைச்‌ சுற்றியுள்ள பருப்பொருட்கள்‌

1. பிரெளனியின்‌ இயக்கம்‌ இராபர்ட்‌ பிரெளன்‌ என்ற தாவரவியல்‌ வல்லுனரால்‌ பெயரிடப்பட்டது

2. அலகீட்டு மின்னணு நுண்ணோக்கி (SEM) மூலம்‌ சிலிக்கான்‌ அணுக்கள்‌ மேற்பரப்பில்‌
பார்க்கப்படுகிறது

3. ரிச்சர்ட்‌ .".பெயின்மென்‌, புகழ்வாய்ந்த மற்றும்‌ மிகச்சிறந்த அறிவியல்‌ அறிஞர்‌ (1918 -1988) கூறியது. கடந்த பத்தாயிரம்‌ ஆண்டுகளில்‌ அறிவியலின்‌ மிக முக்கிய கண்டுபிடிப்பு அணுவிடைய நிலைபாடு.

4. ஒரு நெல்‌ மணியளவு எளிய உப்பில்‌ 1.2×10¹⁸ துகள்கள்‌ உள்ளன. அதில்‌ பாதியளவு சோடியம்‌ துகள்களும்‌ மற்றும்‌ பாதி குளோரைடு துகள்களும்‌ உள்ளன.

5. நீர் அல்லது பாதரசம்‌ துகள்கள்‌ ஒன்றொடொன்று ஒட்டக்கூடிய தன்மையைப்‌ (ஒத்திசைந்த ஆற்றல்‌) பெற்றிருப்பதால்‌ கோள வடிவங்கள்‌ அல்லது துகளிகள்‌ அமைப்பைப்‌ பெற்றுள்ளன.

6. திட உலோகமான காலியம்‌ திரவமாக மாறுவதற்கு நமது கரத்தில்‌ உள்ள வெப்பமே போதுமானது.

7. வெப்பயியக்கவியலின்‌ முதலாம்‌ விதியின்படி ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால்‌ ஒருவகை ஆற்றலை மற்றொரு வகை ஆற்றலாக மாற்ற முடியும்‌. பருப்பொருளின்‌ நிலைமாற்றத்தின்‌ போது வெப்ப, ஆற்றலானது துகள்களின்‌ இயக்க ஆற்றலாக
மாற்றப்படுகிறது

8. சாதாரண வெப்பநிலை மற்றும்‌ அழுத்தத்தில்‌(NTP)  நீரின்‌ கொதிநிலை 100°C ஆகும்‌.

9. நீரின்‌ சாதாரண கொதிநிலை 100°C ஏனெனில்‌ இந்த வெப்பநிலையில்‌ நீரின்‌ ஆவி அழுத்தம்‌ 760 mmHg, அல்லது 1 வளிமண்டல அழுத்தம்‌.

10. உலர்‌ பனிக்கட்டியானது சில சமங்களில்‌ கார்ட்‌ ஜஸ்‌ என குறிப்பிடப்படுகிறது. அது
குளிரூட்டியாகப்‌ பயன்படுத்தப்படுகிறது. இது தொழில்‌ முறை குளிர்பதனிடுதல்‌ மற்றும்‌ உறைவிக்கப்பட்ட உணவுப்‌ பொருட்களை கையாளுவதிலும்‌ பெருமளவில்‌ பயன்படுகிறது.
பனிக்கட்டியை விட குறைந்த வெப்பநிலைத்‌ தக்க வைத்துக்‌ கொள்ளும்‌. மேலும்‌ அது
நேரடியாக வாயுவாக மாற்றமடைவதால்‌, எந்த திரவத்தையும்‌ விட்டுச்‌ செல்வதில்லை.

11. கழிவறைகளில்‌ காற்று தூய்மையாக்கிகள்‌ பயன்படுத்தப்படுகின்றன. இதில்‌ உள்ள  திண்மம்‌ மெதுவாக பதங்கமாகி நறுமணமுள்ள வாயுவை ஒரு குறிப்பிட்ட காலம்‌ வரை
வெளியிடூவதன்‌ மூலம்‌ கழிவறையை நறுமணத்துடன்‌ வைக்கின்றன.

12. நாஃப்தலீனை உள்ளடக்கிய அந்துருண்டை பூச்சிகளை விரட்டப்‌ பயன்படுகிறது. இதில்‌ உள்ள நாஃப்தலீன்‌ பதங்கமாகி வாயுவாக மாறுகிறது. இதே போன்று, இந்தியர்களின்‌ வீட்டுபொருளாக பயன்படும்‌ கற்பூரம்‌ பதங்கமாதலுக்குட்பட்டு நறுமணத்தை தரவல்லது.

13. மாறா வெப்பநிலையில்‌, கொடுக்கப்பட்டுள்ள நிறையுள்ள ஒரு நல்லியல்பு வாயுவின்‌ அழுத்தமானது அதன்‌ கனஅளவிற்கு எதிர்‌ விகிதத்‌ தொடர்புடையது

14. வாயுக்களின்‌ வெப்பநிலை கெல்வின்‌ அளவீட்டிலும்‌ வெளிப்படுத்தப்படுகிறது.

■ வெப்பநிலையின்‌ SI அலகு கெல்வின்‌ ஆகும்‌. பெல்‌ஃபாஸ்ட்ல்‌ பிறந்து,
கிளஸ்கோ பல்கலைக்கழகத்தில்‌ பயின்ற பொறியாளரும்‌, இயற்பியலாளருமான
லார்ட்‌ வில்லியம்‌ கெல்வின்‌ (1824 - 1907) என்பாரின்‌ நினைவாக கெல்வின்‌
அளவீடு பெயரிடப்பட்டது. அவர்‌ தான்‌ முதன்‌ முதலில்‌ முழுமையான
வெப்பமானி அளவீட்டிற்கான தேவையை எழுதினார்‌.

■ நினைவுகூர்க: வெப்பமானி அளவீடு மாற்றத்திற்கு 0℃ = 273.16K (வதிக்காக
273K என எடுத்துக்‌ கொள்ளப்படுகிறது)

15. LPG திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு. இது மிக எளிதில்‌ தீப்பற்றக்கூடிய
ஹைட்ரோகார்பன்‌ வாயுவாகும்‌. இது புரோப்பேன்‌ மற்றும்‌ பியூட்டேன்‌ வாயுக்களின்‌
கலவையைக்‌ கொண்டுள்ளது.

16. நவீன ஆவர்த்தன அட்டவணையில்‌ நமக்குத்‌ தெரிந்து இதுவரை உள்ள 118
தனிமங்களில்‌, 92 இயற்கையில்‌ காணப்படுகிறது, மற்ற 26 தனிமங்கள்‌ செயற்கை முறையில்‌ உருவாக்கப்பட்டது. ஆனால்‌, இத்தகைய 118 தனிமங்களிலிருந்து, பில்லியன்‌
சோமங்கள்‌ உருவாக்கப்பட்டுள்ளன, அவற்றில்‌ சில இயற்கையானவை மற்றும்‌ சில செயற்கையானவை.

17. கலவைகள்‌ உருவாகும்‌ போது எவ்வித ஆற்றல்‌ பரிமாற்றத்திற்கும்‌ உட்படாது

18. நீங்கள்‌ கேரட்‌ என்ற சொல்லை அறிந்துள்ளீரகளா? - இது தங்கத்தின்‌ தூய்மையும்‌ வைரத்தின்‌ எடையையும்‌ விவரிக்கிறது.

1 நானோமீட்டர்‌ (nm) = 10⁻⁹

1மீட்டர்‌ (m) =10⁹ நானோமீட்டர்‌

21. வாகனத்தின்‌ முகப்பு விளக்கு டிண்டால்‌ விளைவு தத்துவத்தின்‌ அடிப்படையில்‌ வலை செய்கிறது. வானம்‌ நீல நிறமாக இருப்பதும்‌ (அ) தோன்றுவதும்‌ டிண்டால்‌ விளைவு ஆகும்‌.

22. கரைப்பான்‌ சாறு இறக்கல்‌ என்பது பன்னெடுங்காலமாக பயன்படுத்தப்பட்ட முறை ஆகும்‌.
வாசனைத்‌ திரவியங்கள்‌ தயாரித்தல்‌ மற்றும்‌ பல்வேறு மூலங்களிலிருந்து சாயங்கள்‌ தயாரித்தலில்‌ இது தலையாய முறை ஆகும்‌.

23. பொருள்களை பிரிப்பதற்கு அவை நிறமுள்ளதாக இருக்கவேண்டிய அவசியமில்லை. வண்ணப்பிரிகை வரைபடத்தில்‌ நிறமற்றப்‌ பொருள்களை தெரிவுக்‌ காரணியைத்‌ தெளிப்பதன்‌ மூலம்‌ கட்புலனாகும்படி செய்யலாம்‌. தெரிவுக்‌ காரணி, நிறமற்றப்‌
பொருள்களுடன்‌ வினைபுரிந்து நிறமுள்ளப்‌ பொருளாக மாற்றுகிறது. மற்ற சூழ்நிலைகளில்‌ வண்ணப்பிரிகை வரைபடத்தில்‌ பொருள்களின்‌ இருப்பிடத்தை புற ஊதாக்கதிர்களைக்‌
கொண்டு கண்டறியலாம்‌.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url