இப்படியும் ஒரு சக்தியா? எக்ஸ்ரே கண்கள் கொண்ட நடாஷா (Natasha Demkina)
இப்படியும் ஒரு சக்தியா? எக்ஸ்ரே கண்கள் கொண்ட நடாஷா (Natasha Demkina)
அறிவியல் , தர்க்க விதிகளுக்கு அப்பாற்பட்ட பல மனிதர்கள் உலகெங்கும் உள்ளனர். திகைப்பூட்டும் இந்த 'சூப்பர் பவர்' மனிதர்களில் ஒருவர் தான் ரஷ்யப் பெண்ணான நிக்கோலேயவ்னா நடாஷா டெம்கினா.
இவர் தனது வெறுங் கண்களாலேயே மனித உடல் உள்ளுறுப்புகளை ஊடுருவிப் பார்க்கும் அசாத்திய ஆற்றல் பெற்றவராகத் திகழ்கிறார்.
இவர் தனது 10 வயதில் முதல் முறையாக தனது தாயின் உடல் உள்ளுறுப்புகளை வெறுங்கண்ணால் கண்டிருக்கிறார். அதுபற்றிய தகவல் பரவ, விரைவிலேயே நடாஷா வெகு பிரபலமாகிவிட்டார்.
அதிலும் டாக்டர் ஒருவரின் வயிற்றில் எந்தப் பகுதியில் குடல்புண் பாதிப்பு உள்ளது என்றும். மற்றொரு பெண்ணின் உடலில் உள்ளது புற்றுக்கட்டி என்றும் தீர்க்கமாகக் கூறி மருத்துவத் துறையினரையே மலைக்க வைத்திருக்கிறார்.
அந்த சக்தி வந்ததைப் பற்றி நடாஷாவே இப்படிக் கூறியுள்ளார்:” வீட்டில் எனது தாயாருடன் இருந்த போது ஒரு நாள் எனக்கு ஒரு காட்சி விரிந்தது. எனது தாயாரின் உடலுக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை என்னால் பார்க்க முடிந்தது. அவருடைய உறுப்புகளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தேன். இப்போது இதைக் காண்பதற்காக எனது சாதாரணக் காட்சியிலிருந்து மாறி ‘மெடிகல் விஷனைப்’ பார்க்க மாற வேண்டியிருக்கிறது. நான் பார்ப்பவரின் உடலின் உள்ளே இருக்கும் உறுப்புகள் ஒரே ஒரு வினாடி வண்ணப்படமாக தெரியும். பின்னர் அதைப் பற்றிய என் ஆய்வை மேற்கொள்வேன்”
நடாஷாவின் இந்த அதிசயப் பார்வைக்கு விஞ்ஞானத்தில் இதுவரை விளக்கம் இல்லை!
நம்மால் விளங்கிக்கொள்ள முடியாத அசாத்திய சக்தியை சிலருக்கு இறைவன் வழங்கி இருக்கிறான்.
பின்குறிப்பு : இது பற்றிய விவரங்கள் https://en.wikipedia.org/wiki/Natasha_Demkina என்ற லிங்க் இல் உள்ளது. இது கதை அல்ல உண்மை.