Search This Blog

TNTET paper-I Science Box questions Do you know 4th STD term -II




நான்காம் வகுப்பு இரண்டாம் பருவம்.

1. தேன் மட்டுமே கேட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் ஆகும் .

2. சூரிய சமையற்கலன் : இது சூரிய ஒளியைப் பயன்படுத்தி உணவு சமைக்க உதவும் சாதனம் ஆகும் . இஃது எரிபொருளைச் சேமிப்பதோடு காற்று மாசுபடுதலையும் குறைக்கிறது .

3. உலகப் பட்டினியால் வாடுவோர் தினம் - மே 298

4. உலகில் உற்பத்தியாகும் மொத்த உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது . இது ஆண்டுக்கு மொத்தம் 1.2 இலட்சம் கோடி டன் ஆகும் ( 1 டன் – 1000 கி.கி )

5. மூச்சு விடுவதால்‌ ஒவ்‌வொரு நாளும்‌ நாம்‌ ஒரு குவளை நீறிற்குமேல்‌ இழக்கிறோம்‌.

6. மனித மூளை அதன் நிறையில் 73 % நீரைக் கொண்டுள்ளது . உலகின் நன்னீரில் 70 % க்கு மேல் அண்டார்டிக் பகுதியில் உள்ளது .

7. நீரின் மூலக்கூறு வாய்ப்பாடு H2O

8. மழைநீர்‌ சேகரிப்பு முறையானது 2001-ஆம்‌ ஆண்டு தமிழக அரசால்‌ கொண்டு
வரப்பட்டது.

9. மழைநீர்‌ சேகரிப்பைக்‌ கட்டாயமாக்கிய முதல்‌ இந்திய மாநிலம்‌ தமிழ்நாடு ஆகும்‌.

10. 2000 சதுரஅடியுள்ள மேற்கூரையிலிருந்து விழுகின்ற 1 அங்குல ( inch ) அளவுள்ள மழைநீரானது 4800 லிட்டர் நீருக்குச் சமமாகும்

11. கள்ளிச்செடி போன்ற தாவரங்களில்‌ இலைகள்‌ இல்லை. அவை தமது உணவினைப்‌ பச்சைத்‌ தண்டுகள்‌ மூலமாக தயாறித்துக்‌ கொள்கின்றன.

12. பார்த்தீனியம்‌ எனப்படும்‌ ஒருவகை களைச்செடி திடீரைன புதிய இடங்களில்‌ வளர்கிறது. இது அதன்‌ எல்லையை விரிவுபடுத்தி மற்ற விளைச்சல்‌ பகுதிகளை ஆக்கிரமித்து
வளர்வதால்‌ வேளாண்மை பாதிக்கப்பருகிறது.
இத்தாவரத்தின்‌ மகரந்தத்‌ துகள்கள்‌ இயற்கையிலேயே ஒவ்வாமை கொண்டவை.
ஆகையால்‌ இவ்வகைச்‌ செடியைத்‌ தொடாமல்‌ இருப்பது நல்லது.

13. பூமியில்‌ அதிக நாள்‌ வாழும்‌ உயிரினம்‌ மரங்கள்‌ ஆகும்‌.
மூங்கில்‌ மரங்கள்‌ ஒரு நாளில்‌ 90 சென்டிமீட்டர்‌ அளவு
வளரக்கூடியவை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url