Search This Blog

Science Box questions 8th STD term -II | unit 6. வளரிளம்‌ பருவமடைதல்‌




8 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
6. வளரிளம்‌ பருவமடைதல்‌

1. விந்தகங்கள்‌ மற்றும்‌ அண்டகங்கள்‌ முறையே ஆண்‌ மற்றும்‌ பெண்ணின்‌ முதல்நிலை பால்‌ உறுப்புகள்‌ என்று அழைக்கப்படுகின்றன.

2. பருவமடைதல்‌ நிகழும்‌ போது, குரல்வளையின்‌ வளர்ச்சியானது பெண்களைவிட ஆண்களில்‌ அதிகமாக உள்ளது.

3. ஆண்களில்‌ வளர்ந்து பெரிதாகி வெளியே துருத்திக்‌ கொண்டிருக்கும்‌ குரல்‌ ஒலிப்‌ பெட்டகமானது ஆடம்ஸ்‌ ஆப்பிள்‌ எனப்படுகிறது. இதனால்‌, குரலானது ஆழமாகவும்‌,
கரகரப்பாகவும்‌ காணப்படுகிறது. இது முக்கியமாக வளரிளம்‌ பருவத்தில்‌ சுரக்கக்கூடிய சில ஆண்‌ இன ஹார்மோன்களால்‌ (ஒழுங்குபடுத்தும்‌ வேதிப்பொருள்கள்‌) ஏற்படுகின்றது.
இதன்‌ விளைவாக, குருத்தெலும்புடன்‌ இணைந்துள்ள தசைகள்‌ (குரல்வளை)
தளர்ச்சியுற்று தடிமனாகின்றன. இந்த தளர்ச்சியுற்ற தடித்த குரல்வளைப்‌ பகுதிக்குள்‌ காற்று நுழையும்‌ பாது கரகரப்பான ஒலியானது உருவாகின்றது.

4. பெண்களில்‌ குரல்வளை சிறியதாக இருப்பதால்‌ அது வெளியில்‌ தெரிவதில்லை. எனவே குரலானது உரத்த சுருதியுடன்‌ காணப்படுகிறது.

5. வளரிளம்‌ பருவத்தில்‌ வியர்வை மற்றும்‌ தோலுக்கடியில்‌ (எண்ணெய்ச்‌ சுரப்பிகள்‌) காணப்படக்கூடிய சுரப்பிகளின்‌ செயல்பாடு அதிகரிப்பதால்‌ அவற்றின்‌ சுரப்பு
அதிகரிக்கின்றது. தோலில்‌ காணப்படக்கூடிய இச்சுரப்பிகளின்‌ அதிகப்படியான சுரப்பின்‌
காரணமாக பல ஆண்கள்‌ மற்றும்‌ பெண்களின்‌ முகத்தில்‌ பருக்கள்‌ தோன்றுகின்றன. கூடுதல்‌ சுரப்பு காரணமாக சில நேரங்களில்‌ அவர்களின்‌ உடலிலிருந்து நாற்றமும்‌
உருவாகிறது.

6. ஈஸ்ட்ரோஜன்‌ ஒரு தனித்த ஹார்மோன்‌ அல்ல. அது ஒன்றுக்கொன்று தொடர்புடைய பல
ஸ்டீராய்டு ஹார்மோன்களின்‌ தொகுப்பாகும்‌.

7. சமீப காலங்களில்‌ பெண்கள்‌ மிகச்சிறிய வயதிலேயே பருவம்‌ அடைகின்றனர்‌. இது
உணவுப்‌ பழக்கத்தினால்‌ ஏற்படுகிறது. நீங்கள்‌ அதிக அளவில்‌ சத்தற்ற நொறுக்குத்தீனி உணவை உண்ணும்போது, உடல்‌ வளர்ச்சி அதிகரித்து பெரியவர்களைப்‌ போன்ற தோற்றம்‌ ஏற்படுகிறது.

8. வளரிளம்‌ பருவத்தினரின்‌ நலமான வாழ்விற்கு தூக்கம்‌ மிகவும்‌ அவசியம்‌ ஆகும்‌. தேவையான அளவு தூக்கம்‌ பதின்ம வயதில்‌ ஏற்படும்‌ மன அழுத்தத்தை மேற்கொள்ள
உதவுகிறது. இந்த வயதினர்‌ சிறப்பாக செயல்பட, ஒவ்வொரு நாள்‌ இரவிலும்‌ சுமார்‌ 8 முதல்‌ 10 மணிநேரம்‌ தூங்குவது அவசியமானதாகும்‌. ஆனால்‌ பதின்ம வயதினோரில்‌ பெரும்பாலானோர்‌ போதுமான அளவு தூங்குவதில்லை.

9. மாதவிடாய்‌ நேரத்தில்‌ ஏற்படும்‌ இரத்த இழப்பை ஈடு செய்ய பெண்கள்‌, அதிக அளவில்‌ இரும்புச்சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url