Science Box questions 8th STD term -II | unit 5. இயக்கம்‌


8 ஆம்‌ வகுப்பு - இரண்டாம்‌ பருவம்‌
5. இயக்கம்‌

1. பாம்புகளுக்கு கால்கள்‌ கிடையாது. நகரவதற்குப்‌ அவை தங்களது தசை மற்றும்‌ செதில்களைப்‌ பயன்படுத்துகின்றன.

2. மீன்கள்‌ கூர்மையான உடல்‌ அமைப்பைப்‌ பெற்றுள்ளன. எனவே, அவற்றால்‌ நீரின்‌ ஓட்டத்துடன்‌ சீராகச்‌ செல்ல முடிகிறது. உடல்‌ மற்றும்‌ வாலில்‌ உள்ள தசைகள்‌ மற்றும்‌
செதில்கள்‌ சமநிலையைப்‌ பேணுவதற்கு அவற்றிற்கு உதவுகின்றன.

3. சிறுத்தை மணிக்கு 76 கி.மீ வேகத்தில்‌ ஓடக்கூடியது.

4. நீர் யானை மனிதனை விட வேகமாக ஓடக்கூடியது.

5. 6 கால்களில்‌ நடக்கும்‌ விலங்குகளுள்‌ கரப்பான்பூச்சியே வேகமாக ஓடக்கூடியது. அது, 1 மீட்டர்‌ தூரத்தை கிட்டத்தட்ட 1 வினாடியில்‌ கடக்கும்‌.

6. மிக விரைவாக நீந்தும்‌ பாலூட்டியான டால்பின்‌ ஒரு மணி நேரத்தில்‌ மைல்கள்‌ வரை நீந்தும்‌.

7. மூட்டுகள்‌ என்பவை இரண்டு எலும்புகள்‌ சந்திக்கும்‌ அல்லது இணையும்‌ இடமாகும்‌. தசைநார்கள்‌ என்பவை இணைப்புத்‌ திசுக்களின்‌ கடினமான குறுகிய பட்டைகள்‌ ஆகும்‌. இவை ஒரு எலும்புடன்‌ மற்றொரு எலும்பை இணைத்து மூட்டுகளை உருவாக்குகின்றன. டெண்டான்கள்‌ என்பவை மீள்‌ திசுக்களால்‌ ஆனவை. அவை மூட்டுகளின்‌ செயல்பாட்டில்‌
முக்கியப்‌ பங்கு வகிக்கின்றன.

8. மூட்டுகளின்‌ அழற்சி என்பது பொதுவாக குருத்தெலும்பில்‌ ஏற்படும்‌ உராய்வின்‌ காரணமாகவோ அல்லது மூட்டுகளில்‌ சினோவியல்‌ திரவம்‌ இல்லாததாலோ ஏற்படுகின்றது.
இந்த நிலையில்‌ ஒருவர்‌, மூட்டுகளை நகாத்தும்‌ போது மூட்டுகளில்‌ கடுமையான வலியை உணர்கிறார்‌. இந்த நோய்‌ கீழ்வாதம்‌ அல்லது மூட்டுவீக்கம்‌(ஆர்த்ரைடிஸ்‌) என்று குறிப்பிடப்படுகிறது. மூட்டுகளில்‌ யூரிக்‌ அமிலப்‌ படிகங்கள்‌ படிவதாலும்‌ மூட்டுவீக்கம்‌ ஏற்படுகிறது.

9. பீமர்‌ அல்லது தொடை எலும்பே மனித எலும்புக்‌ கூட்டின்‌ மிக நீளமான மற்றும்‌
வலிமையான எலும்பு ஆகும்‌.

10. நடுச்செவியில்‌ உள்ள 'ஸ்டேபஸ்‌' என்ற எலும்பே மனித எலும்புக்கூட்டின்‌ மிகச்சிறிய மற்றும்‌ லேசான எலும்பு ஆகும்‌.

11. மனிதன்‌ மற்றம்‌ ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ கழுத்தில்‌ ஒர எண்ணிக்கையிலான எலும்புகள்‌ உள்ளன. ஆனால்‌ ஒட்டகச்‌ சிவிங்கியின்‌ முதுகெலும்புகள்‌ மிக நீளமானவை.

12. முடியின்‌ வேர்களில்‌ தசைகள்‌ உள்ளன. அவை உங்களுக்கு சிலிர்ப்புகளைக்‌ கொடுக்கின்றன.

* புன்னகைக்க 17 தசைகளும்‌, கோபப்பட 42 தசைகளும்‌ தேவைப்படுகின்றன.

* அதிகமாக வேலை செய்யும்‌ தசைகள்‌ கண்ணில்‌ காணப்படுகின்றன.
Next Post Previous Post