Search This Blog

Science Box questions 8th STD term -I | unit 1. அளவீட்டியல்‌

8 ஆம்‌ வகுப்பு -முதல்‌ பருவம்‌
1. அளவீட்டியல்‌

1.CGS, MKS மற்றும்‌ SI அலகுமுறைகள்‌ மெட்ரிக்‌ அலகுமுறைகள்‌ வகையைச்‌ சார்ந்தது. ஆனால்‌ FPS அலகுமுறை பதின்ம அலகுமுறை அல்ல. இது ஆங்கில இயற்பியலாளர்கள்‌
பயன்படுத்திய முறை ஆகும்‌.

2. செவ்வாய்‌ கோளின்‌ காலநிலையைப்‌ பற்றிய தகவல்களை சேகரிப்பதற்காக டிசம்பர்‌ 1998 இல்‌, அமெரிக்காவின்‌ தேசிய வானியல்‌ மற்றும்‌ விண்வெளி நிர்வாகம்‌ (National Aeronautics and space administration -NASA) செவ்வாய்க்கோள்‌ பருவநிலைக்கான சுற்றுக்கலம்‌ ஒன்றினை அனுப்பியது.

* ஒன்பது மாதங்களுக்குப்பிறகு, செவ்வாய்க்‌ கோள்‌ மிகக்‌ குறைந்த தொலைவில்‌ நெருங்கி வந்தபோது, 1999- செப்டம்பர்‌ 23 இல்‌ சுற்றுக்கலமானது கண்ணுக்குப்‌
புலப்படாமல்‌ மறைந்து போனது.

* சுற்றுக்கால கணக்கீட்டுப்பிழையின்‌ காரணமாகவும்‌, கொலராடோ விண்கலம்‌ செலுத்தும்‌ குழுவிற்கும்‌ கலிஃபோர்னியா பணிவழிநடத்தும்‌ குழுவிற்கும்‌ இடையேயான தகவல்‌ பரிமாற்றப்‌ பிழையின்‌ காரணமாகவும்‌ இது நடந்திருக்கலாம்‌ என்று அறிக்கை வெளியானது.

* இப்பணியில்‌ ஈடுபட்ட இருகுழுக்களில்‌, ஒரு குழு ஆங்கிலேய FPS அலகு முறையைப்‌ பயன்படுத்தியும்‌, மற்றொருகுழு MKS அலகு முறையைப்‌ பயன்படுத்தியும்‌ கணக்கீடு செய்ததால்‌ தவறு ஏற்பட்டதாக பின்னர்‌ விளக்கம்‌
தரப்பட்டது. இதனால்‌ சுமார்‌ 125 மில்லியன்‌ டாலர்கள்‌ இழப்பு ஏற்பட்டது.

3. அகச்சிவப்புக்‌ கதிர்‌ வெப்பநிலைமானிகள்‌ மூலம்‌, ஒரு பொருளை நேரடியாகத்‌ தொடாமல்‌ அதன்‌ வெப்பநிலையை அளந்தறிய முடியும்‌.

4. 30 K (-243.2°C) என்ற மிகக்‌ குறைந்த வெப்பநிலையில்‌, சில கடத்திகள்‌ எந்தவிதமான மின்‌இழப்பும்‌ இன்றி மின்னோட்டத்தைக்‌ கடத்துகின்றன. இக்கடத்திகள்‌ 'மீக்கடத்திகள்‌'
எனப்படுகின்றன. மீக்கடத்திகள்‌ அதிவேகமாக செல்லும்‌ புல்லட்‌ ரயில்களைத்‌ தண்டவாளத்திலிருந்து உயர்த்தப்‌ பயன்படுகின்றன. மீக்கடத்திகள்‌ கணினி
நினைவகங்களில்‌ பயன்படுத்தப்படுகின்றன.

5. ஒளிபாயம்‌ அல்லது ஒளித்திறன்‌ என்பது உணரப்படும்‌ ஒளியின்‌ திறனாகும்‌. இதன்‌ SI அலகு 'லுமென்‌' (lumen) ஆகும்‌.

6. ஒரு ஸ்ட்ரேடியன்‌ திண்மக்கோணத்தில்‌, ஒரு கேண்டிலா ஒளிச்செறிவுடைய ஒளியை ஒரு ஒளிமூலம்‌ வெளியிடுமானால்‌ அவ்வொளி மூலத்தின்‌ திறன்‌ ஒரு லுமென்‌ என வரையறுக்கப்படுகிறது.

7. 1995 ஆம்‌ ஆண்டு வரையில்‌ தளக்கோணம்‌ மற்றும்‌ திண்மக்‌ கோணம்‌ ஆகியவை துணை
அளவுகள்‌ என தனியாக வகைப்படுத்தப்பட்டிருந்தன. 1999 ஆம்‌ ஆண்டில்‌ இவை வழி
அளவுகள்‌ பட்டியலில்‌ சேர்க்கப்பட்டன.

8. முதன்‌ முதலில்‌ அணுகடிகாரமானது 1949 ஆம்‌ ஆண்டு அமெரிக்காவின்‌ தேசிய தரநிர்ணய கழகத்தால்‌ உருவாக்கப்பட்டது. ஆனால்‌ அதன்‌ துல்லியத்தன்மை குவார்ட்ஸ்‌ கடிகாரத்தை விடக்‌ குறைவாக இருந்தது.

9. சீசியம்‌ - 133 அணுவை அடிப்படையாகக்‌ கொண்டு செயல்படும்‌ துல்லியமான அணுக்கடிகாரம்‌ 1955 ஆம்‌ ஆண்டு லூயிஸ்‌ ஈசான்‌ மற்றும்‌ ஜாக்‌ பென்னி ஆகியோரால்‌
இங்கிலாந்தின்‌ தேசிய இயற்பியல்‌ ஆய்வகத்தில்‌ உருவாக்கப்பட்டது.

10. குவார்ட்ஸ்‌ கடிகாரங்களில்‌ படிகத்தின்‌ அழுத்த மின்பண்பு ( piezo-electric property)  என்ற தத்துவம்‌ பயன்படுத்தப்படுகிறது. படிகத்தின்‌ அழுத்த மினவிளைவு என்பது படிகத்தின்‌ குறிப்பிட்ட அச்சு ஒன்றின்‌ வழியே, அழுத்தத்தை ஏற்படுத்தினால்‌, அதற்கு செங்குத்தான
அச்சில்‌ மின்னழுத்த வேறுபாடு உருவாகும்‌ விளைவு ஆகும்‌.

11. படிகத்தின்‌ எதிர்‌ அழுத்த மின்விளைவின்‌ ( reverse piezo-electric property) போது, படிகத்தின்‌ இரு எதிரெதிர்‌ பக்கங்களுக்கிடையே மின்னழுத்த வேறுபாடு
செயல்படுத்தப்பட்டால்‌, படிகமானது இயந்திரவியல்‌ தகைவிற்கு உட்படுத்தப்படுகிறது.

12. கிரீன்விச்‌ சராசரி நேரம்‌: இங்கிலாந்து நாட்டின்‌ லண்டன்‌ நகருக்கு அருகில்‌ உள்ள
கிரீன்விச்‌ என்னுமிடத்தில்‌ இராயல்‌ வானியல்‌ ஆய்வுமையம்‌ (Royal Astronomical Observatory)  அமைந்துள்ளது. இம்மையத்தின்‌ வழியாகச்‌ செல்லும்‌ தீக்கக்‌ கோடானது
தொடக்கக்‌ கோடாகக்‌ கொள்ளப்படுகிறது 0°

13. புவியானது, 15° இடைவெளியில்‌ அமைந்த தீர்க்கக்‌ கோடுகளின்‌ அடிப்படையில்‌ 24 மண்டலங்களாகப்‌ பிரிக்கப்பட்டுள்ளது. இவை நேரமண்டலங்கள்‌ என்று
அழைக்கப்படுகின்றன. இரு அடுத்ததடுத்த நேரமண்டலங்களுக்கு இடையே உள்ள கால இடைவெளி 1 மணி நேரம்‌ ஆகும்‌.

14. இந்திய திட்ட நேரம்‌ - இந்தியாவின்‌ உத்திரப்பிரதேச மாநிலத்தில்‌ உள்ள மிர்சாபூர்‌ என்ற இடத்தின்‌ வழியாகச்‌ செல்லும்‌ தீர்க்கக்‌ கோட்டை ஆதாரமாகக்‌ கொண்டு இந்திய திட்ட நேரம்‌ கணக்கிடப்படுகிறது. இக்கோடானது 82.5°கிழக்கில்‌ செல்லும்‌ தீக்கக்கோட்டில்‌
அமைந்துள்ளது.

15. இந்திய திட்ட நேரம்‌ - கிரீன்விச்‌ சராசரி நேரம்‌ + 5.30 மணி
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url