Search This Blog

Science Box questions 7th STD term -I | unit 5. தாவரங்களின்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மாற்றுருக்கள்‌

7ஆம்‌ வகுப்பு - முதல்‌ பருவம்‌
5. தாவரங்களின்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மாற்றுருக்கள்‌

1. சூரியக்‌ காந்தி என்பது தனிமலர்‌ அன்று, பல மலர்கள்‌ ஒன்றிணைந்து உருவான தொகுப்பே சூரியக்காந்தியாகும்‌. இப்படிப்‌ பல மலர்கள்‌ ஒன்றோடொன்று இணைந்து காணப்பட்டால்‌ அதற்கு மஞ்சரி என்று பெயர்‌.

2. வெட்டுக்காயப்‌ பூண்டு என்றும்‌ கிணற்றடிப்‌ பூண்டு என்றும்‌ அழைக்கப்படும்‌ ட்ரைடாக்ஸ்‌ புரோகும்பன்ஸ்‌ என்ற தாவரத்தில்‌ தனி மலர்‌ போல்‌ காணப்படுவது மஞ்சரி ஆகும்‌. இதன்‌ இலைச்சாறு வெட்டுக்காயங்களைக்‌ குணமாக்கும்‌.

3. உலகின்‌ பெரிய மற்றும்‌ அதிக எடையுள்ள விதை, இரட்டைத்‌ தேங்காய்‌ ஆகும்‌. இதன்‌ விதை இரண்டு தேங்காய்‌ ஒன்றோடொன்று இணைந்து உருவானது போல இருக்கும்‌.
இவ்விதை சேசில்லிஸ்‌ என்ற இடத்தில்‌ உள்ள இரண்டு தீவுகளில்‌ மட்டுமே முளைக்கும்‌. ஒரு விதையின்‌ நீளம்‌ 12 அங்குலம்‌, அகலம்‌ 3 அடி, எடை 18 கிலோ உள்ளதாக இருக்கும்‌.

4. தாவர உலகின்‌ மிகச்‌ சிறிய விதைகள்‌ எனப்படுபவை ஆர்க்கிட்‌ விதைகள்‌. 35 மில்லியன்‌ ஆர்க்கிட்‌ விதைகளின்‌ எடை வெறும்‌ 25 கிராம்‌ மட்டும்தான்‌.

5. சில தாவரங்களில்‌ வேர்கள்‌ நிலமட்டத்திற்கு மேல்‌ தண்டிலோ, இலைகளிலோ காணப்படுகின்றன. இவை மாற்றிட வேர்கள்‌ என அழைக்கப்படுகின்றன.

6. வாண்டா தாவரம்‌ தொற்றுத்‌ தாவரமாக மரங்களில்‌ வளரும்‌. இதன்‌ தொற்று வேோகளில்‌ உள்ள வெலமன்‌ திசு காற்றின்‌ ஈரப்பதத்தை உறிஞ்சி ஒளிச்சேர்க்கைக்கு உதவும்‌.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url