Science Box questions 7th STD term -I | unit 4. அணு அமைப்பு
7ஆம் வகுப்பு - முதல் பருவம்
4. அணு அமைப்பு
1. நானோமீட்ர் என்பது சிறிய நீளங்களை அளக்க பயன்படும் அலகாகும். ஒரு மீட்டர் என்பது
13× 10^-9 அல்லது ஒரு நானோமீட்டர் என்பது 1×10^9 ஆகும்.
2. ஒவ்வொரு வருடமும் நமது உடம்பில் உள்ள செல்கள் 98% செல்கள் இறந்து புது
செல்கள் தோற்றுவிக்கப்படுகின்றன. இருந்த போதிலும் நமது உடம்பில் ஏறத்தாழ ஏழு
பில்லியன் செல்கள் காணப்படுகின்றன.
3. ஐசோடோப்புகள் - ஒரே தனிமத்தின் அணுக்கள் வெவ்வேறு எண்ணிக்கையுள்ள
நியூட்ரான்களைப் பெற்றிருக்கலாம். அத்தகைய அணுக்கள் ஒரே அணு எண்ணையும்
வெவ்வேறு நிறை எண்களையும் பெற்றுள்ளன. அவை ஐசோடோப்புகள் என
அழைக்கப்படுகின்றன. உதாரணமாக ஹைட்ரஜன் அணுவானது மூன்று ஐசோடோப்புகளை
பெற்றுள்ளன. அவை ஹைட்ரஜன் (1H1),டியூட்ரியம் (1H2), டிரிட்டியம் (1H3)
4. ஐசோபர்கள் - ஒரே நிறை எண்ணையும் வெவ்வேறு அணு எண்களையும் கொண்ட
அணுக்கள் ஐசோபார்கள் எனப்படும். எ.கா. கால்சியம் - 40, ஆர்கான் - 40.
5. எலக்ட்ரான்கள் எதிர்மின் சுமை கொண்டது. புரோட்டான்கள் நேோ்மின்சுமை கொண்டது. இவற்றின் இடையே உள்ள ஈர்ப்பே எலக்ட்ரான்களை அதன் வட்டப்பாதைகளில்
பிணைத்து வைக்கிறது.