Search This Blog

இலக்கியங்கள் வழி நின்று தமிழரின் விருந்து போற்றுதலை அறிந்து கொள்தல்


தமிழரின் விருந்து போற்றுதல்



1. திருவள்ளுவர் இல்லறவியலில் ' விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே ' அமைத்திருக்கிறார் ; 
இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார் ;
 முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை 

“ மோப்பக் குழையும் அனிச்சம் ” என்ற குறளில் எடுத்துரைக்கிறார் .


2 . கோவலனைப் பிரிந்து வாழும் கண்ணகி அவனைப் பிரிந்ததைவிட விருந்தினரைப் போற்ற முடியாத நிலையை எண்ணி வருந்துவதாக ,

 " ...........தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை ” 

என்ற சிலப்பதிகார அடிகள் (16:72,73) உனர்த்துகிறது .


3 . கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள் , விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார் இதனை

 " பொருந்து செல்வமும் கல்வியும் பூத்தலால்
 வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
 விருந்தும் அன்றி விளைவன யாவையே "

 என்ற கம்பராமாயண அடிகள் (1:2:36) உனர்த்துகிறது .


4. கலிங்கத்துப்பரணியில் செயங்கொண்டார் விருந்தினர்க்கு உணவிடுவோரின் முகமலர்ச்சியை உவமையாக்கியுள்ளார் இதனை

 " விருந்தினரும் வறியவரும் நெருங்கி யுண்ண 
மேன்மேலும் முகமலரும் மேலோர் போல "

 என்ற கலிங்கத்துப்பரணி  அடிகள் 477 உணர்த்துகிறது .


5 . தமிழரின் விருந்தோம்பல் பண்பின் அடிப்படை.
அமிழ்தமே கிடைத்தாலும் தாமே உண்ணாது பிறருக்கும் கொடுப்பர் நல்லோர் ; அத்தகையோரால் தான் உலகம் நிலைத்திருக்கிறது என்பதை ,

 " உண்டால் அம்ம , இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் , இனிதுஎனத்
தமியர் உணடலும் இலரே .... "

 என்ற புறநானூற்றுப் பாடலில்  (182) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி குறிப்பிட்டுள்ளார் .


6. விருந்தோம்பல் என்பது பெண்களின் சிறந்த பண்புகளுல் ஒன்றாகக் கருதப்படுகிறது . நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உனவிடும் நல்லியல்பு குடும்பத் தலைவிக்கு உண்டு என்பதனை , 

 “ அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் "

என்ற நற்றிணைப் (142) பாடல் விளக்குகிறது .

7. பண்டைத் தமிழர்கள் வீட்டிற்கு வந்த விருந்தினர் திரும்பிச் செல்லும் போது,  அவர்களைப் பிரிய மனமின்றி வருந்தினர்.
மேலும் , வழியனுப்பும் பொழுது அவர்கள் செல்லவிருக்கிற நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட தேர் வரை ஏழு அடி நடந்து சென்று வழியனுப்பினர் என்பதனை ,

 “ காலின் ஏழடிப் பின் சென்று "

 என்ற பொருநராற்றுப்படை அடிகள் 166 விளக்குகிறது .

8. வீட்டிற்கு வந்தவருக்கு வறிய நிலையிலும் எவ்வழியிலேயேனும் முயன்று விருந்தளித்து மகிழ்ந்தனர் நம் முன்னோர் . தானியம் ஏதும் இல்லாத நிலையில் விதைக்காக வைத்திருந்த தினையை உரலில் இட்டுக் குத்தியெடுத்து விருந்தினருக்கு விருந்தளித்தாள் தலைவி . இதனை , 

" குரல்உணங்கு விதைத் தினை உரல்வாய்ப் பெய்து 
சிறிது புறப்பட்டன்றோ இலள் ”

 என்ற புறநானூற்று அடிகள் காட்சிப்படுத்துகிறது


9. நேற்று வந்த விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால் இரும்பினால் செய்த பழைய வாளை அடகு வைத்தான் தலைவன் ; இன்றும் விருந்தினர் வந்ததால் தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு. இச்செய்தி ,

 " நெருநை வந்த விருந்திற்கு மற்றுத்தன் 
இரும்புடைப் பழவாள் வைத்தனன் இன்றுஇக் 
கருங்கோட்டுச் சீறியாழ் பணையம் .... ” 

என்ற புறநானூற்றுப் பாடலடிகளில் (316) இடம்பெறுகிறது 


10. இளையான்குடி மாறநாயனாரின் வீட்டுக்கு வந்த சிவனடியார்க்கு விருந்தளிக்க அவரிடம் தானியமில்லை ; எனவே , அன்று விதைத்துவிட்டு வந்த நெல்லை அரித்து வந்து , பின் சமைத்து விருந்து படைத்த திறம் பெரியபுராணத்தில் காட்டப்படுகிறது .

11. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும் பிறவும் கொடுத்தனர் என்று கூறும் நூல் – சிறுபாணாற்றுப்படை

12. இல்லத்தில் பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர் , உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா ? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை ,
 
" பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
 வருவீர் உளீரோ " 

என்ற குறுந்தொகை (118) அடிகள் புலப்படுத்துகின்றன .

13. " மருந்தே ஆயினும் விருந்தொடு உண் "
என்று கொன்றை வேந்தனில் ஒளவையார் பாடியுள்ளார் . 

14. " வரகரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும் 
 முரமுரெனவே புளித்த மோரும் – திறமுடனே
 புள்வேளூர்ப் பூதன் புரிந்துவிருந்து இட்டான்ஈ ( து )
 எல்லா உலகும் பெறும் ” 
என்ற தனிப்பாடலை இயற்றியவர் – ஒளவையார்.


15.  " இலையை மடிப்பதற்கு முந்தைய 
வினாடிக்கு முன்பாக
 மறுக்க மறுக்க
 பரிமாறப்பட்ட கூடுதல் இட்லியில்
 நீண்டு கொண்டிருந்தது 
பிரியங்களின் நீள் சரடு " என்று எழுதியவர் - அம்சப்பிரியா.


16. அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச் சங்கம்
 “ வாழையிலை விருந்து விழா"வை ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது .



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url