Search This Blog

முதல் விண்வெளி வீரர்... இவரை தெரியுமா?

முதல் விண்வெளி வீரர்... இவரை தெரியுமா?

🌟யூரி ககாரின்

✍ விண்வெளிக்கு வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரரான யூரி ககாரின் 1934ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி ரஷ்யாவில் பிறந்தார்.

✍ 1955ஆம் ஆண்டு ஒரென்பர்க் விமான ஓட்டுநர் பாடசாலையில் இணைந்து மிக்-15 போர் விமான ஓட்டுநராக பயிற்சி பெற்றார். இவரது முதல் பணி நார்வே எல்லையிலுள்ள மூர்மன்ஸ்க் பகுதியில் இராணுவ விமானத்தளத்தில் ஆரம்பமானது.

✍ இவர் 1960ஆம் ஆண்டு மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சோவியத் விண்வெளி திட்டத்தில் இணைந்துகொண்ட 20 விண்வெளி வீரர்களில் ஒருவர் ஆவார். கடும் பயிற்சிகளுக்கு பிறகு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டார்.

✍ 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி vostok 3KA-3 (Vostok1) விண்கலத்தில் பயணித்து விண்வெளிக்கு சென்ற முதல் மனிதன் என்ற பெயரைப் பெற்றார். வாஸ்டாக் விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் சென்றார்.

✍ விண்கலத்தில் முதற்தடவையாக பூமியை வலம் வந்தவர் என்ற பெருமைக்குரிய இவர் 1968ஆம் ஆண்டு மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்:

👉 2006ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி சனியின் துணைக்கோளான என்செலடஸில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது.

🎎 1959ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி பார்பி பொம்மை முதன்முதலாக விற்பனைக்கு வந்தது.

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown March 09, 2022

    Good information thank u

Add Comment
comment url