கையில்... வாயால் ஊதுவதன் மூலம் குளிர்வது ஏன்?
கையில்... வாயால் ஊதுவதன் மூலம் குளிர்வது ஏன்?

🙌 வாயை நன்றாக திறந்து புறங்கையில் ஊதிப் பாருங்கள். சுடுகிறது அல்லவா? வெளிச்சுவாச காற்றுடன் வெப்பமும் வெளிவருவதே இதற்கு காரணமாகும்.
🙌 வாயை ஒடுக்கமாகப் பிடித்து ஊதிக்கொண்டு கையை வர வர தூரமாக எடுக்கக் குளிரும். ஒடுக்கமான வாய்த் துவாரத்தின் வழியாக வரும் காற்று கூடிய அழுத்தத்துடன் வரும். இது வாய் துவாரத்துக்கு வெளியே வந்ததும் வர வர அகலமாக செல்லும்.
🙌 இவ்வாறு அகலமான பரப்புக்கு செல்ல அழுத்தம் குறையும். அதனால் வெப்பநிலை குறைந்து குளிர்கிறது. மேலும் ஊதும் பொழுதும், கையில் உள்ள வியர்வை ஆவியாவதாலும் குளிர்கிறது. வியர்வை ஆவியாக தேவைப்படும் வெப்பத்தை கையில் இருந்து பெற கை குளிர்கிறது.