மார்ச் 21 இன்று மட்டும் இத்தனை தினங்களா March 21
மார்ச் 21 - உலகக் கவிதைகள் தினம்
(World Poetry Day):
எழுச்சிமிக்க கவிதைகள் நாட்டின் சுதந்திரத்திற்கும், புரட்சிக்கும் வித்திட்டிருக்கிறது. இரண்டு வரிகளைக் கொண்ட திருக்குறள் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 அன்று பாரிஸ் நகரில் 30ஆவது பொதுமாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் உலக கவிதைகள் தினமாக மார்ச் 21 ஐ அறிவித்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக்கொண்டது.
--------------------------------------------
மார்ச் 21 - சர்வதேச நவ்ரூஸ் தினம்
(International Day of Nowruz):
நவ்ரூஸ் என்பது பழங்கால பாரம்பரிய இசைத் திருவிழா. வெவ்வேறு சமூகங்கள் மத்தியில் கலாச்சார பன்முகத்தன்மை,
நட்பு பங்களிப்பு, அமைதி மற்றும் தலைமுறைகளுக்கு இடையே குடும்பங்களில் ஒற்றுமை, அத்துடன் நல்லிணக்கம் உலகம் முழுவதும் அமைவதை ஊக்குவிக்க இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இத்தினத்தை ஐ.நா.சபை
2010ஆம் ஆண்டில் அறிவித்தது.
--------------------------------------------
மார்ச் 21- பன்னாட்டு வண்ண நாள் ( International Colour Day (ICD ):
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், கருத்து காட்சி, மக்கள் வாழ்வியல் கோட்பாடுகள், மற்றும் உண்மையியல் உணர்தல் போன்ற மிகவும் பெரியதாக உதவகூடியதாகவும், உலகம் சுற்றியுள்ள மறக்கமுடியாத வண்ண நடவடிக்கைகள் பெருகிய முறையில் அனைத்துலக வண்ணம் நாள் உருவாக்கி கொண்டாடப்பட்டு வருகின்றன.
--------------------------------------------
மார்ச் 21- உலக பொம்மலாட்ட தினம் (World Puppetry Day) :
ஆண்டு தோறும் மார்ச் 21 ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்றான பொம்மலாட்டம் , பொம்மைகளில் நூலைக் கட்டி திரைக்கு பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கலையாகும். இது ' கூத்து ' வகையை சேர்ந்தது. மரப்பாவைக்கூத்து, பாவைக்கூத்து என்ற பெயர்களாலும் இக்கலை அழைக்கப்படுகிறது. நாட்டுப்புற மரபுரிமைகளிடையில் ஒரு தனிப்புகழை கொண்டுள்ள தொடர்பாடல் ஊடகமாகவே இப் பொம்மலாட்டத்தை அறிமுகப்படுக்கலாம். இன்று பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை சாத்தியமாக்குகிற திரைப்படத்தின் மூதாதையாகவும் இந்த கலை கருதப்படுகின்றது.
தென்னிந்தியாவில் மரபுவழியாக வளர்ச்சியடைந்த இக்கலை பின்னர் இலங்கை, ஜாவா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பயணித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. பொம்மலாட்டக்கலையில் சீன, மலேசிய, ஜப்பானிய நாடுகளின் பாதிப்புகளும் இருபதாம் நூற்றாண்டு காலத்தில் ஜெர்மனி, இத்தாலி, செக்கோஸ்லாவாக்கியா போன்ற நாடுகளின் பாதிப்புகளும் காணப்பட்டிருப்பினும் கூட பாரம்பரிய பொம்மலாட்டக் கலை தென் இந்திய குறிகளுடனே இன்னும் நடைப்பெற்று வருவதை அவதானிக்கலாம்.
---------------------------------------------------
மார்ச் 21- இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாள் ( International Day for the Elimination of Racial Discrimination ):
ஆண்டுதோறும் மார்ச் 21 இல் கடைபிடிக்கப்படுகின்றது. 1960 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் நாளில்
தென்னாப்பிரிக்காவின்
ஷாடெங்கிலுள்ள ஷார்ப்வில் நகர்ப்புறத்தில் நிகழ்ந்த,
இனவொதுக்கலுக்கு எதிரான அமைதிப்பேரணியின்போது அந்நாட்டுக் காவல்துறையினரால் 69 பேர் கொல்லப்பட்டனர்.
எல்லா வகை இனப்பாகுபாட்டையும் ஒழிக்க முயற்சிசெய்யுமாறு பன்னாட்டுச் சமூகத்தை வேண்டிய
ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1966 ஆம் ஆண்டில் மார்ச் 21-ஐ இனப்பாகுபாட்டை நீக்குவதற்கான பன்னாட்டு நாளாக அறிவித்தது.
தென்னாப்பிரிக்காவில் மனித உரிமைகள் நாளாகக் கடைபிடிக்கப்படும் இப்பொது விடுமுறை நாளில் இனவொதுக்கல் காலத்தில்
மக்களாட்சிக்காகவும் மனித உரிமைகளுக்காகவும் போராடி உயிரிழந்தோர் நினைவுகூரப்படுகின்றனர்.
--------------------------------------------
மார்ச் 21-
உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
(World Down Syndrome Day):
நோய் எப்போதும் மனிதனின் பகுதியாகவே உள்ளது. டவுன் சிண்ட்ரோம் என்பது மனவளர்ச்சி குன்றியதைக் குறிப்பிடுகிறது. இந்த நோயானது மனித செல்லுக்குள், குரோமோசோமில் ஏற்படும் பிழையால் ஏற்படுகிறது. இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த ஐ.நா. பொதுச்சபை 2011ஆம் ஆண்டு, டிசம்பர் மாதத்தில் மார்ச் 21ஐ உலக டவுன் சிண்ட்ரோம் தினமாக அறிவித்தது.
--------------------------------------------
--------------------------------------------
மார்ச் 21 - பன்னாட்டு வன நாள் (International Day of Forests):
இந்நாள், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 இல் சர்வதேசம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. 2012 , நவம்பர் 28 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் நிறுவப்பட்ட இந்நாளை, பல நாடுகள் பல்வேறு நிகழ்வுகளால் கொண்டாடியும், விழிப்புணர்வு ஏற்ப்படுத்தியும் வருகிறது.