திமீத்ரி மெண்டெலீவ்
திமீத்ரி மெண்டெலீவ்
✍ தனிம வரிசை அட்டவணையின் தந்தை என அழைக்கப்படும் திமீத்ரி மெண்டெலீவ் 1834ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் தேதி ரஷ்யாவிலுள்ள சைபீரியாவில் தோபோல்ஸ்க் என்ற இடத்தில் பிறந்தார்.
✍ இவர் வேதியியலின் தத்துவங்கள் (1868-1870) என்ற நூலை எழுதினார். பிறகு வேதியியல் தனிமங்களை அவற்றின் பண்புகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தாமல், தனிமங்களின் அணு நிறையை அடிப்படையாகக்கொண்டு ஆவர்த்தன அட்டவணையை உருவாக்கினார்.
✍ இதனை மார்ச் 6ஆம் தேதி 1869ஆம் ஆண்டு ரஷ்ய வேதியியல் கழகத்தில் சமர்ப்பித்தார். மேலும் அந்த அட்டவணையில் பல கண்டுபிடிக்கப்படாத தனிமங்களின் இயல்புகளை எதிர்வு குறி கொண்டு அட்டவணையை முழுமைப்படுத்தியிருந்தார்.
✍ தனிமங்களின் இயல்புகளை வரையறுத்து குறிப்பிடத்தக்க சாதனையை செய்த மெண்டெலீவ் 1907ஆம் ஆண்டு மறைந்தார்