Search This Blog

பிப்ரவரி 22- உலக சிந்தனை தினம் (World Thinking Day):

பிப்ரவரி 22- உலக சிந்தனை தினம் (World Thinking Day):


1926-ஆம் ஆண்டு பெண்கள் வழிகாட்டும் மற்றும் பெண்கள் ஸ்கவுட் (women’s guide and scout) இயக்கத்தில் பிப்ரவரி 22-ஆம் நாள் ஒரு சிறந்த விழிப்புணர்வு நாளாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்தனர்.

அமெரிக்காவில் நடந்த 4-ஆம் உலக மாநாட்டில் இம்முடிவு எடுக்கப்பட்டது. முதலில் இது சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

பிப்ரவரி 22-யை ஏன் தேர்ந்தெடுத்தனர்?:

பிப்ரவரி 22-ஆம் தேதி ஸ்கவுட் இயக்கத்தை தொடங்கிய லார்ட் பேடன் பௌல் மற்றும் லேடி பேடன் பௌல் ஆகிய இருவரின் பிறந்த தினம் ஆகும்.

எனவே அவர்கள் பிறந்த பிப்ரவரி 22-ஆம் தேதியே சிறப்பு நாளாக கொண்டாடுவது என முடிவு செய்தனர். அதன்படி பிப்ரவரி 22 சிந்தனை தினமாக கொண்டாடி வந்தனர்.

World Thinking Day:
1932-ஆம் ஆண்டில் இருந்து சிந்தனை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தி உலகெங்கிலும் இருந்து நன்கொடை பெற்று இந்த இயக்கத்தை மேலும் உயர்த்த முடிவு செய்தனர்.

நீண்ட காலங்களுக்குப் பிறகு 1999-ஆம் ஆண்டு டப்லினில் நடந்த 30-ஆம் உலக மாநாட்டில் உலக சிந்தனை தினம் என அறிவிக்கப்பட்டது.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url