Search This Blog

பிப்ரவரி 22-02-2022 - “பாலின்டிரோம்” நாள் (palindrome)



பிப்ரவரி 22 ம் தேதியான இன்று பாலின்டிரோம், அம்பிகிரேம் என்ற சிறப்பம்சம் பொதிந்திருக்கிறது. அதாவது, வலம் இருந்து இடப்புறமாக எழுதினாலும், இடமிருந்து வலமாக எழுதினாலும் ஒரே மாதிரியாக வார்த்தைகள் வருவதை ஆங்கிலத்தில் “பாலின்டிரோம்” என்பர். இதற்கு உதாரணமாக காகா, குடகு, விகடகவி போன்ற வார்த்தைகளை இடம் வலம் என எப்படி எழுதினாலும், அதே வார்த்தைகளே வரும். 

இதேபோல் இன்றைய தேதி பாலின்டிரோம் 22-02-2022 (22 0 22 0 22)  தேதியாக  வந்துள்ளது.

அதேபோல் இந்த தேதி “அம்பிகிரேம்” என்ற சிறப்பையும் கொண்டுள்ளது. அதாவது தலைகீழாக படித்தாலும், நேராக இருப்பது போலவே மாறாமல் வரும் வார்த்தை எண்ணை அம்பிகிரேம் என்பர். 

இந்த தேதியின்,  ‘22-02-2022’ இடையில் உள்ள கோடுகளை நீக்கிவிட்டு, அனலாக் கால்குலேட்டரில் அடித்துப்பார்க்கவும், இப்போது அடித்திருக்கும் எண்ணை தலைகீழாக படித்தாலும் அதே எண்ணே வரும் என்பதே இதன் சிறப்பம்சம்.

இது போன்று  இந்த மாதத்தின் ஆரம்பத்தில் வந்த எண் 2 ஐ தொடராக கொண்டு 02-02-2022 (2.2.22) என்ற தேதி சிறப்பாக அமைந்து வந்தது குறிப்பிடத்தக்கது.




 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url