Search This Blog

மரம் தகவல்கள்


மரத்தின் பெயர் : புளியமரம்

தாவரவியல் பெயர் : டேமரிண்டஸ் இண்டிகா

ஆங்கில பெயர் : Tamarind

தாயகம் : இந்தியா

மண் வகை : அனைத்து வகை மண்ணிலும் வளரும் மரங்கள்

தாவர குடும்பம் : பபேசியே

பொதுப்பண்புகள் :

🌳 புளியமரம் பெரும்பாலும் நட்ட 12 ஆண்டுகளுக்குப் பின்னரே காய்த்துப் பயன்தரத் தொடங்குகிறது. இது 100 ஆண்டுகளுக்கு மேலும் வளரும்.

🌳 புளியமரம் 25 மீட்டர் உயரம் வளரும். 8-10 மீட்டர் சுற்றளவைக் கொண்டிருக்கும். இம்மரம் உறுதியானது. இதன் பக்கக் கிளைகள் பரவிக் காணப்படும். இவை எளிதில் முறிவதில்லை.

🌳 புளியமரத்தின் இலை, பூ, பிஞ்சு, பழம், ஓடு, விதை, பருப்பு, மரம் முதலியவை நன்கு பயனாகின்றன. புளியமரம் உறுதியானது. மரவேலை செய்யக் கடினமானது.

🌳 பூக்களைச் சமைத்து உண்ணலாம். பூக்களிலிருந்து சேகரிக்கப்படும் தேன் பொன் மஞ்சளாகவும், சற்றுப் புளிப்பாகவும் இருக்கும்.

🌳 புளியம் பழங்களின் சுவை மரத்தின் வகைக்கு ஏற்பவும், விளையும் நிலப்பகுதிக்கு ஏற்பவும் இனிப்பாகவோ, புளிப்பாகவோ இருக்கும்.

பயன்கள் :

🌳 புளிய விதை எண்ணெயைக் கொண்டு வர்ணங்கள் வார்னிஷ் இவற்றைத் தயாரிக்கலாம்.

🌳 விளக்கு எரிக்கலாம். புளியம் பருப்பிலிருந்து தயாரித்த பசையைக் கொண்டு பலகைகள் ஒட்டப்படுகின்றன. சிமெண்டைப் போல இது கெட்டியாக ஒட்டும்.

🌳 கசப்பான விதைத்தோல் வயிற்றுப்போக்கு, வயிற்றுக் கடுப்பைப் போக்கும். விதையிலிருந்து அரைத்த பசையைக் கொப்புளங்களுக்குத் தடவலாம். கொட்டையினால் கழிச்சல், புண், நீர்க்கடுப்பு, வெள்ளை ஆகியவை போகும்.

🌳 புளியைக் கொண்டு பித்தளை, செம்பு பாத்திரங்களையும், இசைக் கருவிகளையும் துலக்கினால் அழுக்கு நீங்கி பளபளப்பான தோற்றம் கிட்டும். வெள்ளி நகை, பாத்திரங்கள் ஆகியவற்றிற்கும் வணிகர்கள் புளியைப் பயன்படுத்துவர்.

🌳 புளியம் பூவுடன் காரம், உப்பு சேர்த்து உண்ண நீர்க்கடுப்பு, மூலச்சூடு, சீதபேதி, வெப்ப வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் தீரும். புளியம் பிஞ்சுகளைச் சிறுசிறு துண்டுகளாக்கி உப்பில் ஊறவைத்து உண்பதுண்டு.

🌳 சக்கரம், கொட்டாப்புளி, உலக்கை, செக்கு, உரல், கரும்பலகை முதலியவற்றைச் செய்ய இது பயன்படுகிறது.

🌳 எரிதிறன் 4909 கிலோ கலோரி ஆகும். புளியமரத்தைப் பிளந்து விறகாக எரிக்கலாம்.

🌳 பட்டையிலிருந்து கோந்து வடியும், புளியமரத்தைக் காற்றுத் தடைக்காக வளர்க்கலாம். இதனை வளர்த்தால் மண் அரிப்பு உண்டாகாது.

வளர்ப்பு முறைகள் :

🌳 நாட்டு ரகங்களுக்கு 40 அடி இடைவெளி தேவை. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 25 மரங்கள் நடவு செய்யலாம்.

🌳 ஒட்டு ரகங்களுக்கு 25 அடி இடைவெளி போதுமானது. இந்த இடைவெளியில் ஒரு ஏக்கர் நிலத்தில் 60 மரங்கள் நடவு செய்யலாம்.

🌳 புரட்டாசிப் பட்டம் புளி நடவுக்கு ஏற்றது.

🌳 தேர்ந்தெடுத்த நிலத்தில், 2 அடி சதுரம் 2 அடி ஆழம் என்ற அளவில் குழி எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 10 கிலோ களிமண்ணைக் கொட்டி, கன்றுகளை நடவு செய்து பாசனம் செய்ய வேண்டும்.

🌳 தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும்.

🌳 பிறகு 3 மாதங்களுக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும். தொடர்ந்து மழையைப் பொறுத்து பாசனம் செய்தால் போதுமானது.

🌳 செடிகள் வளரும் நேரத்தில் ஊடுபயிர்களை சாகுபடி செய்து கொள்ளலாம்.

🌳 வேறு பராமரிப்புகள் தேவையில்லை. மரங்கள், காய்ப்புக்கு வந்த பிறகு மரத்தின் அடியில் தார்ப்பாய் விரித்து கிளைகளை உலுக்கினால், பழங்கள் உதிர்ந்து விடும்.

🌳 அறுவடை முடிந்ததும் மரங்களை கவாத்து செய்து விட வேண்டும்.

நோய் தடுக்கும் முறைகள் :

🌳 இந்த மரத்தில் நோய் தாக்குதல் குறைவு.


மரம் தான் மழைக்கு ஆதாரம்.. 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url