உங்களுக்குத் தெரியுமா?
1. அயர்லாந்தை மரகதத்தீவு என்று அழைப்பார்கள்.
2. தமிழ் நாடகத் தந்தை எனப் போற்றப்படுவது பம்மல் சம்பந்த முதலியார்.
3. மிக்கி மௌஸ் 1928 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
4. உயிரியலாளர்களின் சொர்க்கம் என்று கருதப்படுவது மன்னார் வளைகுடா.
5. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறதாம்.
6. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
7. திருத்தணியின் பழைய பெயர் செருத்தணிகை.
8. நவீன வானவியலின் நிறுவனர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்.
9. செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினமாக கொண்டாடப்படுகிறது.
10. பூனைக்கு நுகரும் புலன் மனிதனை விட 14 மடங்கு அதிகம்.