Search This Blog

பாகற்காய், கீரை போன்றவற்றை இரவில் சாப்பிடக் கூடாது என்று சொல்வது ஏன்?


இது ஒரு கருத்துதான். இவ்வாறு உண்ணக்கூடாது என்று விளக்கும் வகையில் ஆய்வுகள் ஏதுமில்லை.

 பலர் இரவில் பாகற்காய், கீரை போன்றவற்றை உண்கிறார்கள்.

 ஆயினும் சில வகை உணவுகள் தூக்கத்தைக் கெடுக்கும் எனவும், சில வகை நிம்மதியான உறக்கத்தைத் தரும் எனவும் ஓர் ஆய்வு சுட்டுகிறது. 

இரவில் ஆழ்ந்த உறக்கம் இருந்தால் அடுத்த நாள் சரியான உணவை உண்பார்கள் எனவும், உறக்கம் கெட்டுப்போனால் கொழுப்புச் சத்து மற்றும் மாவுச்சத்து மிகுந்த உணவை அதிக அளவில் உண்பார்கள் எனவும் ஓர் ஆய்வு கூறுகிறது.

வாழைப்பழம், பெரிய வகை பழங்கள் இரவு உறக்கத்துக்கு நல்லது. 

அதிக கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த பொருட்கள் உடலில் ஆற்றலை கூடச்செய்து இயக்கத்தில் வைத்து இருக்கும். எனவே, எளிதில் தூக்கம் வராது.

சிறுவர்கள் இரவில் சாக்லேட் உண்டால் எளிதில் உறக்கம் வராமல் தவிப்பது இதனால்தான்.

 நார்ச்சத்துள்ள பொருட்கள் நல்லது எனவும் இவர்கள் கூறுகிறார்கள்.

 ஆயினும் இத்தகைய ஆய்வுகள் தொடக்க நிலையில் தான் உள்ளன.

 எந்த உணவு எப்போது உண்பது சிறந்தது என்பதற்கு, போதிய அறிவியல் ஆய்வுகள் இதுவரை இல்லை.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url