Search This Blog

மக்கள்தொகை பெருக்கத்தால் காற்றிலுள்ள ஆக்சிஜன் விரைவில் தீர்ந்துவிட வாய்ப்புண்டா?



சராசரி மனிதர் ஒரு நிமிடத்தில் சுமார் 7இல் இருந்து 8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். இதில் சுமார் 20 சதவீதம் ஆக்சிஜன் இருக்கும். உள்வாங்கும் ஆக்சிஜனில் வெறும் நான்கில் ஒரு பங்கை மட்டுமே நமது உடல் உள்ளே உறிஞ்சிக்கொள்கிறது. மீதமுள்ள மூன்று பகுதி வெளியே விடும் மூச்சுக் காற்றில் வந்துவிடுகிறது.

 எனவே, ஒரு நாளைக்கு சராசரி நபர், சுமார் 550 லிட்டர் ஆக்சிஜனைப் பயன்படுத்துகிறார். அவ்வாறு உடலுக்குள் செல்லும் ஆக்சிஜன் கார்பன் டை ஆக்சைடு வடிவில் வெளியே வந்துவிடுகிறது.

ஒளிச்சேர்க்கை நிகழ்வின் படி தாவரங்கள் கார்பன் டை ஆக்சைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை உமிழ்கிறது என, நாம் அறிவோம்.

 சுமார் 50 செ.மீ. சுற்றளவு கொண்ட 30 - -40 மீட்டர் உயரமான மரம் ஒரு நாளைக்கு சுமார் 92 லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கிறது.
 அதாவது சுமார் ஏழு மரம் ஒரு நபரின் தினசரி ஆக்சிஜன் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.

உலகில் சுமார் 400 பில்லியன் மரங்கள் உள்ளன என செயற்கைக்கோள்கள் அளிக்கும் தரவுகளை வைத்து மதிப்பீடு செய்யும்போது தெரியவருகிறது.
அதாவது, சுமார் 57 பில்லியன் மனிதர்களுக்குத் தேவையான ஆக்சிஜனை உலக மரங்கள் ஆண்டுதோறும் வெளியிடுகின்றன. தற்போது உலக மக்கள்தொகை வெறும் 7.7 பில்லியன் மட்டுமே.
அதுபோக, பிற உயிரினங்களுக்கும் ஆக்சிஜன் தேவை. கார் போன்ற இஞ்சின்கள் இயங்க ஆக்சிஜன் தேவை. நெருப்பு பற்றவைக்க ஆக்சிஜன் தேவை.

பல்வேறு படிம எரிபொருட்களைப் பயன்படுத்துவதன் காரணமாக, வளிமண்டல கார்பன் டை ஆக்சைடு செறிவு ஆண்டுதோறும் சுமார் 2.2 ppm அளவுக்கு உயர்கிறது என, ஓர் ஆய்வு கூறுகிறது.

அதாவது ஆக்சிஜன் அளவும் குறைகிறது என்பது பொருள். இப்படியே போனால் ஐம்பதாயிரம் ஆண்டுகள் கடந்த பின்னர், ஆக்சிஜன் அளவு இன்றைய நிலையைவிட 1% குறைந்து போகும். எனவே, இது உடனடி ஆபத்து அல்ல.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url