ஏபெல் நாயகன் எஸ்.ஆர்.ஸ்ரீனிவாச வரதன்
✍ இந்திய-அமெரிக்க கணிதவியலாளர் சாத்தமங்கலம் ரங்க ஐயங்கார் ஸ்ரீனிவாச வரதன் 1940ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.
✍ இவருடைய கணக்கு ஆசிரியர் கணிதத்தை விளையாட்டு போல் கற்றுத்தந்தார். அதன் மூலம் இவர் கணக்கைப் பார்த்து பயந்து ஓட அவசியம் இல்லை என்பதை உணர்ந்தார்.
✍ கணித அடிப்படையிலான நிகழ்தகவு குறித்து ஆய்வு செய்துக்கொண்டிருந்த சில நண்பர்களை சந்தித்து, அவர்களுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டார். கொல்கத்தா இந்தியப் புள்ளியியல் கழகத்தில் சிறந்த புள்ளியியலாளரான சி.ஆர்.ராவ் தலைமையில் ஆய்வு செய்து, 1963ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார்.
✍ இவர் கணிதம், புள்ளியியலில் நிகழ்தகவு, பெரிய விளக்கங்கள் கோட்பாடுகளை (Theory of Large Deviations) உருவாக்கினார். வகையீட்டு சமன்பாடுகள் (Differential Equations) குறித்த கோட்பாடுகளை கண்டறிந்தார். இவரது 'ஸ்டொகாஸ்டிக் பிராஸசஸ்" என்ற நூல் கணித உலகில் பெரும் வரவேற்பை பெற்றது.
✍ நிகழ்தகவு கோட்பாட்டில் அடிப்படை பங்களிப்புகளுக்காக 'ஏபெல்" பரிசு (2007), பத்ம பூஷண் விருது (2008), அமெரிக்காவின் தேசிய அறிவியல் பதக்கம், இன்ஃபோசிஸ் பரிசு உள்ளிட்ட பல பரிசுகள், பதக்கங்கள், கௌரவங்களைப் பெற்றுள்ளார்.