Search This Blog

அறிவோம்



முதன் முதலில்!!

♦ முதன் முதலில் இங்கிலாந்து நாட்டில் தான் தபால் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

♦ முதன் முதலில் ஏப்ரல் முதல் நாள் மீன்களின் தினமாகக் கொண்டாடிய நாடு பிரான்ஸ்.

♦ கடல் நீரில் இருந்து முதன் முதலில் பெறப்பட்ட தனிமம் புரோமின்.

♦ உலகின் முதன் முதலாக விமான கடிதப் போக்குவரத்தைத் தொடங்கிய நாடு இந்தியா.

♦ இந்தியாவில் முதன் முதலில் இயற்றிய மின்சார ரயில் டெக்கான் குயின்.

♦ இந்தியாவில் முதன் முதலில் கிரிக்கெட் வர்ணணை 1936-ம் ஆண்டு பம்பாய் நகரில் ரேடியோ நிலையத்தில் இருந்து ஒலி பரப்பப்பட்டது.

♦ பிரிட்டனில் முதன் முதலில் அஞ்சல் தலை ஒட்டும் வழக்கம் 1840-ல் தொடங்கியது.

♦ பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை அளித்த நாடு நியூசிலாந்து.

♦ தமிழகத்தில் முதன் முதலில் டாக்டர் பட்டம் பெற்ற பெண்மணி முத்துலட்சுமி ரெட்டி.

♦ இந்தியாவில் முதன் முதலில் பருத்தி ஆலை கொல்கத்தாவில் நிறுவப்பட்டது.

♦ பெருக்கலுக்கு ′X′ என்ற குறியை முதன் முதலில் ஆதிரட் என்ற மதகுரு பயன்படுத்தினார்.

♦ பள்ளிக் குழந்தைகளுக்கான நர்சரி பாடல்களை உலகிலேயே முதன் முதலில் தொகுத்தவர் தாமஸ் பிளிட் என்பவர் ஆவார்.

♦ ஞாயிற்றுக்கிழமையை முதன் முதலில் விடுமுறை நாளாக அறிவித்தவர் ரோமானிய சக்கரவர்த்தி கான்ஸ்டான்டைன்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url