இரட்டை கின்னஸ்!
இரட்டை கின்னஸ்!
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர், 17 வயதான பள்ளி மாணவி நிலன்ஷி படேல். இவர், 2018ஆம் ஆண்டு 170 செ.மீ. நீண்ட கூந்தலை வளர்த்து, டீன் ஏஜ் பிரிவில் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். தற்போது 190 செ.மீ. அளவிற்கு கூந்தலை வளர்த்து, இவரின் சாதனையை இவரே முறியடித்துள்ளார். இதற்குமுன் இந்த இடத்தை அர்ஜென்டினாவைச் சேர்ந்த ஒருவர் பெற்றிருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலன்ஷி படேலே இச்சாதனையை தக்கவைத்துள்ளார்.