கொட்டாவி வருவது ஏன்?… காரணம் தெரிந்தால் இனி யாரையும் திட்ட மாட்டீங்க!.
கொட்டாவி விடுவது ஏன் என்பது குறித்து அறிவியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அது போன்ற கேள்விகளுக்கான பதிலை நாம் அறிந்திருப்போம். ஆனால் நீங்கள் கொட்டாவி விடும் போது கண்களில் நீர்கசிவது ஏன் என்று தெரியுமா?
கண்களில் நீர் கசிவதால், ஏதோ ஒரு சீரியஸான பிரச்னையால் உடல் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது ஏதோ ஒரு நோய் வந்துள்ளதாக எண்ணிக்கொள்ள வேண்டாம்.
கண்களை டிரையாவதில் இருந்து பாதுகாக்கவே நீர் வருகிறது.
எனவே அழுவது நல்லது. இது ஒரு புறம் இருக்கட்டும். சிலருக்கு ஒரு சில காரணங்களால் கண்களில் அடிக்கடி நீர் கசியும். இது வழக்கமான ஒன்று தான். அவர்களின் சந்தேகங்களுக்கு விடையாகவே இந்த கட்டுரை…..
கொட்டாவி வருவது ஏன்?
மிகவும் சோர்வடைந்துவிட்டால் கொட்டாவி வரும். இதனை அனைவரும் அடிக்கடி உணர்ந்திருப்பார்கள். உடலுக்கு தேவையான ஆக்சிஜன் மெதுவாக கிடைப்பதால், மூச்சுவிடுவது மெதுவாக இருக்கும். இந்த கொட்டாவி மூலம் அதிகப்படியான ஆக்சிஜன் உடலுக்கு கிடைப்பதுடன், ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கார்பன் டை ஆக்சைடு உடலில் இருந்து வெளியேறும்.
கண்களில் நீர் கசிய கொட்டாவி தூண்டுகிறது
கொட்டாவி விடும் சமயத்தில் கண்களில் நீர் கசிய ஆரம்பிக்கிறது. ஏன் என்று தெரியுமா?.
அதிகப்பட்டியான அழுத்தம் காரணமாக கண்ணீர் சுரபிகள்(lacrimal glands) தூண்டப்பட்டு கண்கள் மேற்பகுதியின் ஓரத்தில் நீர் வருகிறது. நீங்கள் நிறைய தண்ணீர் குடிப்பதால், இவை வருவதில்லை. எனவே தண்ணீர் குடிப்பதை நிறுத்திவிடாதீர்கள்.
கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுகிறோம்.
கொட்டாவி விடும் போது கண்களை இறுக்கி மூடுவதால் கண்ணீர் சுரபிகள் அழுத்தம் ஏற்பட்டு கண்களின் ஓரத்தில் நீர் கசிகிறது. இதனால் தீங்கு ஏற்படாது. இது உங்கள் கண்களை வறண்டு போவதில் இருந்து பாதுகாக்கிறது.