Vijay Maths

முக்கிய தினங்கள், TNPSC,TNTET Study Material, பொது தகவல்கள், சுவாரஸ்யமான தகவல்கள்

Breaking

Jan 13, 2020

எங்கிருந்து வந்தது நெல் ?

எங்கிருந்து வந்தது நெல்?

சுமார் 9,250 ஆண்டுகளுக்கு முன்னால், உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கலீகாபாத் பகுதியில் லஹுரதேவா (Lahuradeva) ஏரியின் கரையில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதை, லக்னோவில் உள்ள பீர்பால் சாஹாணி தொல்லியல் ஆய்வு நிறுவன ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார்பன் கால அறிதல் முறையில், எப்போது சாகுபடி தொடங்கியது என்பதைக் கணித்துள்ளனர்.







முற்காலத்தில், சீனாவில் நெல் சாகுபடி செய்யப்பட்டது என்பதை நெற்பயிரின் பைட்டோலித் கொண்டு அறிந்து கொண்டோம். நீரில் வாழும் டையாட்டம் எனும் நுண்பாசியை வைத்து, இந்தியாவில் லஹுரதேவா கரையில் சாகுபடி நடந்துள்ளது என கணித்துள்ளனர். இந்த நுண்பாசி தான், உலகின் மொத்த ஆக்சிஜன் உற்பத்தியில் சுமார் இருபது சதவீதத்தை ஒளிச்சேர்க்கை வினையால் உருவாக்குகிறது.


நுண்பாசியின் நான்கு வகைகள்
* நீரில் மிதப்பது
* நீர் நிலைகளின் அடியில் நிலத்தில் வளர்வது
* நெற்பயிரோடு வளர்வது
* மாசு கலந்த நீர்நிலையில் வளர்வது

இவை மடிந்ததும் ஏரியின் அடியில் மக்கி விடும். மக்கிய சுவடு எப்போதும் இருக்கும். அகழாராய்ச்சி செய்யும்போது, ஏரியின் அடியில் தோண்டிப் பார்த்தால் ஒவ்வோர் அடுக்கிலும் எந்த வகை நுண்பாசி எவ்வளவு செறிவாக உள்ளது என்பதை வைத்து, நெல் பயிர்செய்த காலத்தைக் கண்டுபிடித்து விடலாம்.

லஹுரதேவா ஏரியில் மழைக் காலத்தில் நீர்வரத்துக் கூடும். அதன் பக்கத்து நிலத்திலும் நீர் தேங்கும். இந்த நீர்த்தேக்கம் சில செ.மீ. முதல் ஓர் அடி வரை இருக்கும். இந்தத் தேங்கிய நீரில் நெல் சாகுபடி செய்துள்ளனர். பின்னர் வெய்யில் காலம் வந்ததும் நீர் வற்றிய நிலையில் அங்கே நெல்லை அறுவடை செய்துள்ளனர்.

அந்த ஏரியில் இருபத்தி எட்டு இடங்களில் துளைசெய்து அடிமண் மாதிரியை எடுத்து ஆராய்ந்து பார்த்தனர். ஒவ்வோர் அடுக்கும் ஒவ்வொரு ஆண்டும் படிந்த மடிந்த உயிரிகளைக் கொண்ட மண். சுமார் பத்தாயிரம் ஆண்டுகள் முதல் ஏழாயிரம் ஆண்டுகள் வரை பழமையான அடுக்குகள் இந்தச் சோதனையில் கிடைத்தன. இவற்றை ஆராய்ந்தபோது, சுமார் 9,250 ஆண்டுகள் பழமையான மண் அடுக்கில் முதன்முதலில் நெல் வயலில் வளரும் நுண்பாசி வகையின் தடயம் கிடைத்தது.

 சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னால் புதிய கற்கால மனிதன் உருவாக்கிய கழிவுகளில் வளரும் நுண்பாசி வகை கிடைத்தது. இதிலிருந்து சுமார் 9,250 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் நெற்பயிர் தொடங்கிவிட்டது. சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த ஏரியின் கரை ஓரம் மனிதக் குடியிருப்பு தோன்றிவிட்டது எனவும் ஆய்வாளர்கள் முடிவுக்கு வந்துள்ளனர்.




எங்கே தோன்றியது?

ஒரே இடத்தில் உருவாகிப் பரவியது என ஒரு சாராரும்; பல்வேறு இடங்களில் தனித்தனியே உருவானது என வேறு சில ஆய்வாளர்களும் கருதுகின்றனர். சீனாவில் முதன்முதலில் உருவான வளர்ப்பு நெல் தான் உலகெங்கும் பரவி, அந்தந்தப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு ரக நெல் உருவானது என, சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். வேறு சில ஆய்வாளர்கள் சீனாவிலும் இந்தியாவிலும் என, குறைந்தபட்சம் இரண்டு முறை காட்டு சட்டைவா நெற்பயிர் வளர்ப்புப் பயிராக உருவாக்கப்பட்டது என கூறுகிறார்கள். இதில் எது சரி என்பதற்கு உறுதியான தடயம் இல்லை.

புல் நெல்லான கதை:
சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காட்டு நெல்லைச் சேகரித்து, விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளனர் என்பதற்கான தடயம் சீனாவின் ஜோங்காஷான் பகுதியில் கிடைத்துள்ளது. இந்த புல் தான் (ஒரைசா வகை) மனிதன் உழைப்பில் நெற்பயிராகியது.



ஆசியாவில் தோன்றிய ஒரைசா சட்டைவா இனம், மூன்று முறை தனித்தனியே அதன் மூதாதை இனமான ஒரைசா ருபிபோகன் (Oryza rufipogon) வகை புல்லிருந்து உருவானது என கருதுகின்றனர். இதில் ஒரைசா சட்டைவா இண்டிகா (Oryza sativa indica) இந்தியாவில் இமாலய அடிவாரத்தில் உருவானது, ஒரைசா சட்டைவா ஜப்போனிகா (Oryza sativa japonica) சீனாவின் யாங்சீ நதிக்கரையோரம் உருவானது. ஒரைசா பார்த்யி (Oryza barthii) வகை நெல் மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜர் நதியின் கரையில் வளர்ப்புப் பயிரானது. இதனை அறுவடை செய்யும்போது, தடிமனான தாவரத்தில் இருந்து கூடுதல் தானிய மணிகள் கிடைத்தன. எனவே, தடிமனான தாவரத்தின் நெல்லை விதைகளாகச் சேகரித்தனர். அவ்வாறு தடிமனான, நேராக நிற்கும் தாவரங்களின் விதைகளைச் சேகரித்து பலமுறை பயிர் செய்தபோது புதிய தாவர இனம் உருவானது. அதுதான் ஒரைசா கிளாபெரிமா என்ற நெல் இனம்.

முதிர்ச்சி பெறும்போது தரையோடு தரையாக வளரும் காட்டு புல், வேளாண்மை பயிராக மாறியபோது நேராக நிமிர்ந்து நின்றது; காலபோக்கில் அதிக தானியங்களை உற்பத்தி செய்யும் படி ஆனது.


No comments:

Post a Comment

CATEGORIES

அன்பு அறிந்து கொள்வோம் அறிவோம் அறிவோம் அறிவியல் அறிவோம் கணிதம் அறிவோம் தமிழ் ஆன்மீகம் இன்று பிறந்தவர் இன்று பிறந்தவர்கள் இயற்கை மருத்துவம் இலக்கியம் உங்களுக்குத் தெரியுமா? உடல்நலம் ஏன்? எதற்கு? எப்படி? கணித மேதைகள் கண்டுபிடிப்பாளர்கள் கண்டுபிடிப்பு கண்டுபிடிப்புகளும் சாதனைகளும் கலைச்சொல் கல்வி உளவியல் காரணம் அறிவோம் குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் கொரோனா கோவில் சந்திர கிரகணம் சுவாரசியமான தகவல்கள் சூரிய கிரகணம் சொல்லும் பொருளும் ஜனவரி ஜோதிடம் டி.என்.பி.எஸ்.சி டெட் தமிழர் இசைக்கருவிகள் தமிழ் அறிஞர்கள் தமிழ் இலக்கணம் தமிழ் எண்ணுறு திராவிட மொழிக் குடும்பம் திருக்குறள் திருவிழா திரைப்படம் தெரிந்துகொள்வோம் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நலத்திட்டங்கள் நாளைந்து கேள்விகள் நீதிக் கதைகள் நூலகம் பற்றிய செய்திகள் TNPSC நெல் நோபல் பரிசு பள்ளிப்பாடப்புத்தகம் பழமொழிகள் பாடல் வரிகள் பாரதியார் பிரித்தெழுதுக பிறந்தநாள் புவிசார் குறியீடு பூக்கள் பொங்கல் விழா பொது அறிவியல் பொது அறிவு பொதுத்தமிழ் மகாகவி பாரதியாரின் அரிய புகைப்படங்கள் மரம் மரம் தகவல்கள் முக்கிய ஆண்டுகள் முக்கிய தினங்கள் முதன் முதலில் முதல் தமிழ்க் கணினி முதல் பெண்மணி யார் இவர் ராஜராஜ சோழர் ராயப்பனூர் வரலாறு வரலாற்றில் இன்று வாழ்க்கை வாழ்வியல் சிந்தனை விருதுகள் விருந்தோம்பல் விவசாயம்