அக்டோபர் முதல் திங்கள் உலக கட்டிடக்கலை தினம் (World Architecture Day):
கட்டிடக்கலை என்பது கட்டிடங்கள் வடிவமைப்புச் செய்வதற்கான கலையும், அறிவியலும் ஆகும்.
கட்டிடக் கலையானது கணிதம்,
அறிவியல், கலை, தொழில் நுட்பம், சமூக அறிவியல், அரசியல், வரலாறு, தத்துவம் போன்றவற்றுடன் தொடர்புடைய ஒரு பல்துறைக்களமாகும்.
சர்வதேச கட்டிடக் கலையினர் ஒன்றியம் 2005ஆம் ஆண்டில் உலக கட்டிடக்கலை தினத்தை அறிவித்து கொண்டாடி வருகிறது.