அக்டோபர் – 10 உலக மனநல தினம் (World Mental Health Day):
உலக மனநல மையம் சார்பில் 1992ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10ஆம் தேதி உலக மனநல தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்தியாவில் 15 சதவீதம் பேர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என இந்திய மன நல மருத்துவக்கழகம் தெரிவிக்கிறது.
மனிதனின் மன ஆரோக்கியம் மற்றும் உலக நல்லெண்ணத்திற்காகவே உலக மனநல தினம் கொண்டாடப்படுகிறது.
மனநலத்தில் ஏற்படும் பாதிப்புகளை மக்களிடம் விளக்குதல், முறையாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தவே இத்தினம் கொண்டாடப்படுகிறது.